ஆந்தை போல சத்தமில்லாமல் பறக்கும் விமானங்கள்!

 இந்த ஆந்தை இருக்கிறதே அது சத்தமில்லாமல் பறக்கக் கூடியது.  அது அப்படி சத்தமில்லாமல் பறக்கக் காரணம் அதன் இலகுவான மென்மையான சிறைகள் தான்.  பறவையைப் பார்த்தான் விமானம் படைத்தான் மனிதன். ஆனால் ஆந்தையைப் போல் இல்லமால் வெகு சத்தத்துடன் பறக்கிறது விமானம். விமான நிலையத்திற்கு பக்கத்தில் குடியிருப்பவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இரைச்சல் நடுவில் வாழும் சூழ்நிலை அவர்களுக்கு. சில பேர் இதனாலேயே வீட்டை  மாற்றிக் கொண்டு சந்தடி இல்லாத இடத்துக்கு போய் விடுகிறார்கள்.சத்தமில்லாமல் விமானம் பறந்தால் பரவாயில்லையே என்று இவர்கள் மாதிரி உள்ளவர்கள் நினைக்கலாம்.

ஆந்தையைப் போல பறவைகளின் சிறகுகள் போல் செயல் படும்  விமானத்தின் வால் பகுதியை கடினமில்லாதது ஆகவும் இலகுவாக ஆந்தையின் இறகுகளுக்குள் காற்று புகுவது போலவும்  இறக்கைகளை அமைத்தால் விமான இரைச்சலை 10 மடங்கு குறைக்க முடியும்.  இப்படி சொல்வபவர்கள் கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் ஜவார்ஸ்கி மற்றும் மற்றும்  பீக். இவர்கள் கூட்டிக் கழித்து இன்னும் பல கணிதங்களுக்கு பின் இப்படி ஒரு தீர்வை அடைந்துள்ளனர்.

Illustration of owl wing aerodynamics

விமான இறக்கைகளுக்குள் காற்று புக வேண்டுமானால் அவற்றில் நுண்ணிய துளைகள் அமைக்க வேண்டும். சத்தம் குறையும் ஆனால் விமானத்திற்கு தேவையான காற்றியக்க நிலை கிடைக்காது. இதனால் இதையும் மனதில் வைத்து விமான இறக்கைகள் சத்தம் வராத படி அமைக்கப் பட வேண்டும். ஆய்வுகள் நடக்கின்றன. சத்தம் போடாத விமானங்களும் நமக்குக் கிடைக்கலாம்.

Comments

  1. அருமையான கண்டுபிடிப்பு.தகவலுக்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்