உலக வெப்ப மயமாதலைத் தடுக்க மரம் நடுவோம்!


 


உலக  வெப்ப மயமாதல், இயற்கை விவசாயம், மின் வாகனங்களைப் பயன்படுத்துவது, சுனாமி ஏன்  வருகிறது போன்ற மக்களுக்கு விழிப்புணவு ஏற்படுத்த வேண்டிய விசயங்களில் நான் கடந்த ஆறு ஆண்டுகளாக ஈடுபட்டு உள்ளேன். இவற்றை பற்றி விளக்க அறிக்கைகளை நானே என் செலவில் அச்சிட்டு விநியோகித்து உள்ளேன். அவற்றை உங்களிடம் ஒவ்வொன்றாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். முதலில் இந்த உலக வெப்ப மயமாதலுக்கு மரம் நடுவது பற்றி.

தற்போது அமெரிக்காவைத் தாக்கி கடும் சேதம் ஏற்படுத்திய சாண்டி சூறாவளியே உலக வெப்ப மயமாதலின் மோசமான விளைவால்தான் என்கிறார்கள். இந்த உலக வெப்ப மயமாதல் என்றால்தான் என்ன? இது பற்றி ஒன்றுமே தெரியாதவர்களுக்காக இதோ ஒரு சுருக்கமான விளக்கம்.

குளிர் சாதன மற்றும் குளிர் சாதனப் பெட்டிகளிலிருந்து வெளியாகும் க்ளோரோ ப்ளுரோ கார்பன்களும் (CFCs)  மோட்டார் வாகனங்கள் வீடு மற்றும் தொழிற் சாலைகளில் எரிபொருள்  எரிப்பதால் வெளிப்படும் கரிய மில வாயு(CO2), விவசாய மற்றும் தொழிற்சாலை சார்ந்த நடவடிக்கைகளால் வெளியேறும் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) , நிலக்கரி , இயற்கை வாயு மற்றும் பெட்ரோலிய  எண்ணெய் உற்பத்தி மற்றும் போக்குவரவால் வெளியேறும்  மீத்தேன்(CH4) ஆகிய  பசுமை இல்ல வாயுக்கள் பசுமை இல்ல விளைவை ஏற்படுத்துகின்றன.(Green House effect).

உலக வெப்பம் அடைவைத் தடுக்க சூரியனில் இருந்து பூமியில் விழும் ஒளியானது மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்பி வைக்கப் பட வேண்டும். ஆனால் இந்த முன் சொன்ன பசுமை இல்ல வாயுக்கள் கண்ணுக்கு தெரிந்த ஒளிக் கதிர்களை விண்வெளிக்கே மீண்டும் திருப்பி அனுப்பும் அதே வேளையில் கண்ணுக்குத் தெரியாத அக சிவப்பு ஒளிக் கதிர்களை தடுத்து நிறுத்தி விடுகின்றன. இந்த கண்ணுக்குத் தெரியாத ஒளியால் உலகம் வெப்ப மயமாகிறது.இந்த வெப்ப மயதினால் பனிக் கட்டிகள் உருகியிருப்பதை சமீபத்திய செயற்கை கோள்  படங்கள் தெரிவிக்கின்றன.

பசுமை இல்ல வாயுக்களில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் கரிய மில வாயுவை செயற்கை முறையில் அகற்ற பல ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன. இது கண்டுபிடிக்கப் படும் முதல் தொழில் நுட்பத்திற்கு    மில்லியன் டாலர்கள் பரிசு அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இதன் மூலமாவது இத்தைகைய தொழில் நுட்பம் நமக்குக் கிடைக்குமா என்று பார்ப்போம்

செயற்கை முறை ஆய்வுகள் ஒரு புறமிருக்க கரிய மில வாயு அகற்றும் இயற்கையின் சிறந்த ஆயுதமான மரங்களை நடுவோம். கரிய மில வாயுவை பெருமளவு அகற்றி வெப்ப மயமாதலைத் தடுப்போம்இந்த மரம் நடுவதோடு  பெட்ரோலியப் பொருட்களின் பயன் பாட்டை குறைப்பது, மாற்று சக்திகளைப் பயன் படுத்துவது, மறு சுழற்சி உண்டாக்கும் விதத்தில் பொருட்களை உற்பத்தி செய்வது , மறு சுழற்சி செய்வது எல்லாமே இன்றையத் தேவைகள். உணர்ந்து செயல் படுவோம்.

Comments

 1. அனைவரும் அறிய வேண்டும்...

  மிக நல்ல பகிர்வு... நன்றி...

  ReplyDelete
 2. Paraattukku nanri. mudinthaal nanbargaludan pagirnthu kollungal

  ReplyDelete
 3. அனைவரும் அறிய வேண்டிய மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

  ReplyDelete
 4. Great.right sir...but we see the history..america and some other countries...they sopil our earth for business..
  for green house effect...anyway prevention is better than cure..

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்