உங்க சட்டை பேன்ட் பாதுகாப்பா இருக்கா?
தினம் தோறும் அணிகிற இந்த சட்டை  பாண்ட்   இன்னும் கொஞ்சம் இந்த மாதிரி இருந்தால் பரவாயில்லை நான் நினைப்பதுண்டு. உங்களுக்கும் இது போல தோன்றியிருக்கலாம்  வீட்டை விட்டு வெளியில் கிளம்புவது என்றால் எத்தனை பொருட்களை எடுத்துப் போக வேண்டியிருக்கிறது. யார் என்று வெளிப் படுத்த அடையாள அட்டை , கடன் அட்டை(credit card), கைபேசி , பணம் , வண்டி நிறுத்தியவுடன் வண்டி சாவி , என்று ஒரு குறைந்த பட்ச கையாளல் பட்டியல் இருக்கிறது. இதையெல்லாம் எப்படி பத்திரமாக வைத்து கொள்வது? சட்டைப் பைக்கு மூடி மாதிரி வைத்து அதன் மேல் ஒரு கைபேசி , பணம் , வண்டி நிறுத்தியவுடன் வண்டி சாவி , என்று ஒரு குறைந்த பட்ச கையாளல் பட்டியல் இருக்கிறது. இதையெல்லாம் எப்படி பத்திரமாக வைத்து கொள்வது?

 சட்டைப் பைக்கு மூடி மாதிரி வைத்து அதன் மேல் ஒரு அழுத்தும் பொத்தானை வைத்து மூடிக் கொள்ளலாம். உள் சட்டைப் பை வைத்து அதில் பணம் வைத்துக் கொள்ளலாம் . நான் அணியும் சில ஆயத்த சட்டைகளில் அதைத் தயாரித்தவர்களே உள் சட்டைப் பைகள் வைத்திருக்கிறார்கள் என்பதால் இந்த மாதிரி சட்டைகளையே நான் தேர்வு  செய்து வாங்குகிறேன். நீங்களும் இது போல வாங்கிக் கொள்ளலாம். துணி எடுத்துத் தைக்கும் சட்டை என்றாலும் கூட இது போன்று சட்டைக்கு மூடி அதன் மேல்  அழுத்தும் பொத்தான் , உள் சட்டைப் பை எல்லாம் வைக்கலாம் .


அணியும் பாண்டில் பக்கப் பைகள் அல்லது முன் வைக்கப் பட்ட பைகளில் ஜிப் வைத்து இழுத்து மூடிக் கொள்ளலாம் . இப்போது வரும் ஓட்ட ஆடைகளில்(track pant) இது போல  ஜிப் வைத்து வருகிறது இந்த முறையை எடுத்து தைக்கும் பாண்டுகளிலும் பயன் படுத்தி சொந்த உபயோகப் பொருட்கள் அனைத்தையும் பாது காப்பாக வைத்துக் கொள்ளலாம்.

நாம் அணியும் ஆடை கௌரவமாகவும் நாகரீகமாகவும் இருப்பதுடன் பாது காப்பாகவும் இருக்க முக்கியத்துவம் தருவது தற்போது தேவையான ஒன்று.

இந்த பதிவை முடிக்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. நான் ஒரு மாதிரி சட்டை பான்ட் நானே அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து தயாரிக்கலாம் என்று.  பார்ப்போம்!

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்