தூக்கம் தூக்கமா வருதே, வழியில்லையா விழித்திருக்க?.

 yawning-work


 
சிலருக்கு படுத்து உருண்டு புரண்டாலும் தூக்கம் வராது.  சிலருக்கு படுப்பதுதான் தெரியும். தூக்கம் அப்படியே அவர்கள் மேல் கவ்விக் கொள்ளும்.

இது சாதாரண தூக்கம். சில பேருக்கு பத்து மணி நேரம் தூங்கிய பின்பு கூட இன்னும் தூங்கணும் இன்னும் தூங்கணும் என்று தூக்கக் கலக்கமாகவே இருக்கும் . இது ஏன்? மூளையில் இருந்து நரம்புகளுக்கு வேதிகள் மூலமாக கட்டளைகள் செல்லும். தூக்கம் ஏற்படுத்துவதும் சில வேதிகள் தான். தூக்கம் ஏற்படுத்தும் சானாக்ஸ்  ,  வாலியம் போன்ற வேதிகள் உடலில் இயற்கையாகவே மித மிஞ்சி உற்பத்தி ஆவதால் தீராத தூக்கம் தள்ளுகிறது என்று வைத்துக் கொள்ளலாம்


தூக்கம் வராதவர்களுக்கு கொடுக்கப் படும் மருந்துகள் காபா என்கிற நரம்பு வேதிகள் வாங்கியை தூண்டி நரம்புகளை மந்த கதி அடையச் செய்யும் . தூக்கமும் வரும். இந்த மருந்துகளில் இருக்கும் வேதி போல மூளையில்  உற்பத்தி ஆகலாம் என்று ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள்.

எப்போதும் தூங்க விரும்பும் 32 பேரின் தண்டுவடப் பகுதியில் இருந்து திரவத்தை எடுத்து  தூக்கத்திற்கான வேதி வாங்கிகளை உற்பத்தி செய்யும் படி மரபணு மாற்றம் செய்யப் பட்ட செல்களுடன் சேர்த்து ஆய்வு செய்யப் பட்டது.  அதில் தூக்க வேதி வாங்கிகள் உற்பத்தி செய்யப்படவில்லை என்றாலும் அந்த வாங்கிகளை அறியும் தன்மை இரு மடங்கு அதிகரித்திருந்தது.

இது வாலியம் மருந்தில் உள்ள பென்சோ டையபைன்ஸ் வேதி போல இருந்ததை பார்க்க முடிந்தது. இது  மூளை தயாரிக்கும் பெப்டைடு  என்கிற ஒரு சிறிய புரதம் என்று கண்டுபிடிக்கப் பட்டது.  இந்த கண்டுபிடிப்பினால் கிடைத்த யோசனையாக வாலியத்தின் பாதிப்பை அகற்றி தூக்கத்தில் இருந்து மீட்கும் ப்ளுமாசெனில் என்கிற எதிர் மருந்தைக் கொடுத்து சோதித்த போது தூக்கம் வரும் உணர்ச்சியில் இருந்து விடுபடுவதையும் பார்க்க முடிந்தது.

ஆக எப்போதும் தூங்குவோர் கொஞ்சம் விழித்து வேறு வேலைகள் பார்க்கவும் வழி கிடைத்து விட்டது.

கும்பகர்ணன் ஆறு மாசம் தூங்காமல் இருப்பானாமே. அவனுக்கும் இந்த புரத உற்பத்தி அதிகமா இருந்திருக்குமோ. இருந்தாலும் இருக்கு, சோதிச்சுப் பாக்கலாம்னா அவன் இப்போ இல்லையே!

 ஒரு ஜோக் :


என்னங்க அவர் மூளையில் அதிக ரசாயனம் உற்பத்தியாகி அதிகமாத் தூங்கறாராமே

அப்படியாவது கவலையில்லாமே இருக்காரே . குடுத்து வைச்சவர். இங்க கவலை முழிச்சிருக்கு. நானும் தூங்கலை!

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்