Ads Top

நம்மை பற்றி நம்மிடமே பேசுவோமே...


  இரு உண்மை சம்பவங்கள் பதிவாக.....

பினராய் ஒரு பிரபல இந்தி நடிகை. அவரின் கணவர் பிரேம்நாத் அவரும் ஒரு நடிகர்.

  ஒரு முறை இருவரும் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்கள். அங்கு ஒரு அமரிக்கரை சந்தித்த பொது பினராய் " நான் இந்தியாவில் இருந்து வருகிறேன். நான் இந்திப் படங்களில் நடிக்கிறேன். அதோ.. நிற்கின்றாரே அவர் தான் என் கணவர்" என்று குறிப்பிட்டார்.

  அதற்க்கு அந்த அமெரிக்கர் உடனடியாக, " அவர் உங்களின் ஒரு கணவர், மற்ற 4 கணவர்கள் எங்கு இருகின்றார்கள்? " என்று கேட்டார். பினராய்க்கு  தூக்கி  வாரிப் போட்டது.

  விசாரித்தபொழுது அந்த அமெரிக்கர் " நான் சில நாட்களுக்கு முன்பு மகாபாரதம் படித்தேன். அதில் திரவுபதிக்கு 5 கணவர்கள் என்று படித்தேன். எனவே இந்தியாவில் ஒவ்வொரு பெண்ணுக்கு 5 கணவர்கள் இருப்பார்களென
நினைத்து கேட்டேன்" என்றாராம்.  இப்படிதான் நாமும் சில நேரங்களில், ஆணும், பெண்ணும் சகோதர பாசத்துடன் அல்லது நட்புடன் பழகினால், அவர்கள் நட்பை கொச்சை படுத்தி விடுகிறோம்.

  நான் இளங்கலை படிக்கும் பொழுது என் நண்பனுக்கு அவன் மீது பாசமாக உடன் படிக்கும் 2 பெண்கள் இருந்தனர். அவர்கள் சகோதர பாசத்துடன் தான் பழகி வந்தனர். ஆனால்  எங்கள் நட்பு வட்டமோ அதனை காதல், கீதல் என்றெல்லாம் சொல்லி அவர்களை கொச்சை படுத்தியது. 

"சும்மா கிடந்த வாய்க்கு அவல்  கிடைத்தால் விடுவார்களா?", நட்பு வட்டத்திலே  இதெல்லாம் சாதாரணம் தானே. இனி தான் இருக்கின்றது அதிர்ச்சி தகவல்.

 எங்கள் ஆசிரியர் வட்டம் என்ன செய்ய வேண்டும், அவர்களை பற்றி ஆராய்ந்து , விசாரித்து முடிவு எடுத்திருக்க வேண்டும், ஆனால்  அவர்களே ஒரு கதை கட்டி, சும்மா இருக்கும் நேரங்களில் இவர்களை பற்றி பேசி மென்று இருக்கின்றார்கள். விட்டார்களா அதோடு..! அவர்கள் மதியிலும், மனதிலும் ஊறி போய்  விட்டது நஞ்சாக...

 புதிதாக வகுப்பறையிலே, புதிய பாடம்  நடத்த தொடங்கும் பொழுது அவர்களை எழுப்பி விட்டு கேள்வி கேட்டு, அசிங்கப் படுத்துவது, நடத்தாத பாடம் அவர்களுக்கு எப்படி தெரியும்? பரிட்சையில் அவர்கள் நன்றாக எழுதி இருந்தாலும் மதிப்பெண் குறைத்தே போடுவது போன்ற  அரக்கத்தனமான செயல்கள் தொடர்ந்தன.

  என் நண்பனும், அவனின் உடன் பிறவா  சகோதரிகளான வகுப்புத் தோழியரும் 
இதனை வென்று காட்ட  வேண்டும் என்ற துடிப்போடு படித்து, இன்று மாதம்  பல ஆயிரங்கள் சம்பாதித்து கொண்டு இருக்கின்றனர். வேலை கிடைத்த செய்தியை அவர்கள் அந்த ஆசிரியர்களிடம் தெரிவித்த பொழுது அவர்கள் முகத்திலே ஈயாடவில்லை.

  கதை கட்டிய அந்த ஆசிரியர்களின் ஊதியமோ 6000 ரூபாய் தான். நான் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை, வேறு வேலை கிடைத்தால் போய்விடுவேன் சும்மா இருக்க வேண்டாமே என்று இந்த வேலைக்கு வந்ததாக வீண் தற்பெருமையும் பேசிவந்து இருக்கிறார்கள். 

"நம்மை பற்றி நம்மிடமே பேசுவோம், அடுத்தவரை அடுத்தவரிடம் பற்றி அல்ல"
                                                      நன்றி 
                                                               செழியன்  

  

13 comments:

 1. நம்மை பற்றி நம்மிடமே பேசுவோம்.

  ReplyDelete
 2. இப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 3. தம்பி,ஆண் பெண் பழக்கவழக்கத்தில் பலபல நிகழ்வுகளின்,தாக்கத்தின் ஆழம்கண்ட நட்பு வட்டம் ஒன்று இன்றும் என்னிடம் உண்டு.நம்மை பற்றி நமக்கு தெரிந்தாலே போதும்.இன்றைய காலத்துக்கு தேவையான கண்ணோட்டம்.

  ReplyDelete
 4. நன்றி மதுரகவி, தன பாலன் அண்ணா

  ReplyDelete
 5. nalla pakrivu anna

  ReplyDelete
 6. நன்றி சத்யா, நான் சிறு பாலகன் தான், அண்ணா என்று அழைகின்றீர்களே சகோதரி

  ReplyDelete
 7. sorry my name is sathyaraj. itz ok i call u thambi...

  ReplyDelete
 8. சத்யா அவர்களே , மன்னிக்க , தாங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை அறியலாமா

  ReplyDelete
 9. im working as a superviser in star hotel in chennai

  ReplyDelete
 10. நன்றி, சத்யா அவர்களே, நான் முதுகலை கணினி பயன் பட்டு துறை மாணவன். என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன் முகவரி kavithai7.blogspot.in

  ReplyDelete
 11. உண்மை, நம்மைப் பற்றி நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கையில், வீணாக அடுத்தவரைப் பற்றித் தவறாகப் பேசுவது, மிகப் பெரிய தவறு தான்.

  நல்ல பதிவு.

  அந்த வெளிநாட்டுக் காரர் நினைத்தது....!!!! (ஷாக்_)

  ReplyDelete
 12. நன்றி கண்மணி, உங்கள் கருத்துக்கு

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.