புதிய மெல்லிய குண்டு துளைக்காத ஆடை


 
 
குண்டு துளைக்காத ஆடை என்றால் உணமையிலேயே அது குண்டுகளில் இருந்து காப்பாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். மும்பையில் நடை பெற்ற  பாகிஸ்தானிய  தீவிரவாதிகள் தாக்குதலின் போது அவர்களுடன் சண்டையிட்ட காவல் துறையினர் குண்டு துளைக்காத ஆடை அணிந்தும் அது குண்டுகள் ஊடுருவி தாக்குவதைத் தடுக்க முடியவில்லை. இதனால் ஹெமன்ட் கர்கரே உள்ளிட்ட காவல் துறையினர் குண்டு தாக்கி மரணம் அடைந்தது நினைவுக்கு வருகிறது.  சிறப்பாக செயல்படும் ஆடைகளாய் இருந்திருந்தால் அவர்கள் காப்பற்றப் பட்டு இருப்பார்கள்  என்று வருத்தத்துடன் நினைக்க வேண்டியிருக்கிறது.

சிறப்பான ஆடைகள் இருக்கத்தான் செய்கின்றன. இராணுவத்தினரும் கடல் படையினரும் இவற்றை உபயோகிக்கிறார்கள். ஆனால் இவை கனமான தலை மற்றும் உடல் கவசமாக இருக்கின்றன. மெலிதான எடை குறைவான ஆனால் பல மடங்கு குண்டுகளைத் தடுக்கும் வலிமையுள்ள ஆடைகள் தயாரிப்பு ஆய்வில் உள்ளது.

மிக மெலிதான கண்ணாடி மற்றும் .ரப்பர் அடுக்குகள் பல இணைந்து இந்த ஆடை தயாரிக்கப் படுகிறது.ஒவ்வொரு அடுக்கும் நானோ மீட்டர்கள் மட்டுமே கனமுள்ளது. (நானோ என்பது நூறு கோடியில் ஒரு பகுதி - அவ்வளவு  சிறிய்ய்ய்ய்யது!) லேசர்  மூலம் ஒரு கண்ணாடியை சுட்டு அதில் இருந்து  மிக நுண்ணிய கண்ணாடிக் கோளங்கள்கோளங்கள் ஒலியை  மிஞ்சும் வேகத்தில் ( ஒரு மணிக்கு 8948   மைல்கள் - ஒரு வினாடிக்கு 4  கிலோ மீட்டர்கள்) பறந்து இந்த ஆடையைத் தாக்கச் செய்கின்றனர்  . நானோ அளவுள்ள பொருட்களை ஆராயும் மின்னணுவியல் உருப்பெருக்கியின் மூலம் அவை என்ன பாதிப்பை ஏற்படுகின்றது என்று பார்த்து  அவை ஊடுருவாத படி ஆடை தயாரிக்கிறார்கள் 

Nanocomposite Material Ballistic Tests

மிக மெலிதான வலிதான இந்த ஆடைகள் நாட்டை ஊரைக்  காக்கும் ராணுவ மற்றும் காவல் துறையினருக்கு தேவையான ஒன்று. ஆய்வு முழு வெற்றி பெறட்டும் 

Comments

 1. தொழிற் களம் செய்திகள் அனைத்தும் மிக புதியதாகவும் ,அதை தரும் வகை சுவையாகவும் உள்ளது. தினமும் செய்திகள் தர நீங்கள் கடுமையாக உழைப்பது புரிகிறது.மிக நன்றி.!

  ReplyDelete
 2. நல்லதொரு விளக்கமான தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 3. நன்றி திரு. சீனி, சுப்பிரமணியன்...

  தொழிற்களம் பதிவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பயணிப்பாதால் அவர்கள் உங்கள் கருத்துக்கு மிகுந்த உற்சாகத்தை பெறுவார்கள்..

  திரு.மோகன் சஞ்சீவன் அவர்கள் தள்ளாடும் வயதிலும் தளராத உழைப்பை வழங்கி வருகிறார்.. அறிவியல் பதிவுகள் பெரும்பாலும் இவரது உழைப்பை காண்பிக்கும்...

  ReplyDelete
 4. நல்ல தகவல்.....பகிர்வுக்கு மிக்க நன்றி...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 5. Parattukalukku nanri. en nadaimurai vazhkaiyil naan innum ilaignakathan irukkiren. nalla arogyamaga irukkiren. thavira makkalukku ariviyalai elimaiyaana muraiyil eduthuch selvathai en paniyaaka ninaikkiren. ariviyalai neradiyaka makkalai santhithu tharuvathilum edupattullen. Meendum Nanri.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்