Ads Top

நோய்களின் பிடியில் இருந்து மீண்டு வர உதவும் மீன் வகைகள்.

நாம் வாழும் உலகில் நோயின்றி வாழ்ந்தாலே பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என முன்னோர்கள் கூறியிருக்கின்றார்கள். நோயின்றி வாழ்வதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுப்பழக்கமே காரணம் ஆகும். பெரும்பாலும் சைவ உணவு வகைகளை சாப்பிட்டாலே நோயிலிருந்து தப்பித்து விடலாம். அப்படியும் அசைவம் சாப்பிட்டே ஆகவேண்டும் என நினைப்பவர்கள் உடலுக்கு நன்மை தரும் அசைவ உணவான மீன் சாப்பிட்டால், நோய் என்றுமே நம்மை அண்டாது.

 `15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது

தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில்  நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவுஉண்ணாத தாய்மார்களின்குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.

மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்தஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்குஅவர்கள் அறியாமலேயே,"ஒமேகா 3' கிடைக்கிறது. அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

 ஆட்டிறைச்சி , மாட்டிறைச்சி , கோழிக் கறி, முட்டை, மீன்  இவை அனைத்திலும் ப்யூரின்களும், யூரிக் அமில மும் அதிகம். இவை சிறுநீரகக்கல்லை உண்டாக்கி நம்மை படாதபாடு படுத்தி ஆட்டிப்படைக்கும். இந்த வகை உணவுகள் சாப்பிடுவதற்கு ருசியாக இருந்தாலும், உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே இவற்றை தவிர்த்து, உடலுக்கு நன்மை விளைவிக்கும் மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களை உண்டு வாழ்ந்தால், நன்மை பயக்கும்.

மீன் உணவுகளை எப்படி சாப்பிட்டாலும், அதன் மருத்துவ குணம் போய் விடுவதில்லை. எந்த வகை கேன்சரும் வராமல் பாதுகாக்கும். ரத்த அடைப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மூளை, கண்களுக்கு மிக நில்லது.

வயதானவர்களுக்கு அல்சீமர்ஸ்(Alzheimer"s) உட்பட மறதி நோய் வரக்கூடும். அதை தடுக்க மீன் உணவு தான் நல்லது. சர்க்கரை நோய், டிப்ரஷன்(Depression) உள்ளவர்களுக்கும் மீன் உணவு தான் நல்லது.

 எந்த வகை மீனிலும், 500 மில்லி கிராம் முதல் 1500 மில்லி கிராம் வரை ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids) உள்ளது. ஆனால், நம் உடலுக்கு தேவை, 200 முதல் 600 மில்லிகிராம் வரை தான். அதனால் வாரம் ஒரு முறை மீன் உணவு சாப்பிட்டால் கூட நல்லது தான். 

மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும் கால்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன. இவை தவிர, சருமப் பாதுகாப்பளித்து, இரத்தவோட்டைத்தைத் தூண்டி செயல்படும் விட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.

 தாவர எண்ணெய்யையும், மீன் எண்ணெய்யையும் ஒப்பீட்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், நான்கு வாரங்கள் மீன் எண்ணெய் உட்கொண்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு அதே நான்கு வாரங்கள் தாவர எண்ணெய் எடுத்துக் கொண்டவர்களுடைய கொலஸ்ட்ரால் அளவை விட 5 மடங்கு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீன் எண்ணெய் அடங்கிய பொருள்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. என்றாலும் மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் காட்லிவர் ஆயில் மற்றும் ஷார்க் லிவர் ஆயில் போன்றவைகளில் உடலுக்கு நன்மை அளிக்கும் செறிவுறா கொழுப்பு அமிலங்களுடன் விட்டமின்களும் அடங்கியுள்ளன. மீன்களின் தசைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயில் இவ்விட்டமின்கள் மிகுதியாக இருப்பதில்லை. எனவே இதய நோயுற்றவர்கள்
இவ்வகை மீன் எண்ணெயை உட்கொள்வது நல்லது.

எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் குறைந்தது வாரம் ஒருமுறை மீன் எடுத்துக்கொண்டு, உடலை நோயிலிருந்து காப்பாற்றி, சந்தோஷமாக வாழுங்கள்.
3 comments:

 1. மிகவும் நல்ல பயனுள்ள தகவல்.....பகிர்வுக்கு மிக்க நன்றி.........

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 2. நல்லதொரு விளக்கம்... நன்றி...

  ReplyDelete
 3. பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி....

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.