மழைக் கேடயமாகும் குடை!

 

 
பழைய தாத்தா காலத்து நீளமான குடையில் ஆரம்பித்து இப்போது கைக்கடக்கமான குடை நமக்குக் கிடைக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஒரு குச்சி மீது விரியும் துணியாகத்தான் இதன் அமைப்பு இருந்து வந்திருக்கிறது. எங்காவது ஒரு நிகழ்வுக்குச் செல்கிறோம் என்று வையுங்கள். வாகனங்களில் சென்றாலும் வாகனத்தை விட்டு சிறிது நடக்க வேண்டிய தருணங்கள் அமையும். அப்போது. வழியில் நம்மைக் கடந்து செல்கிற வாகனங்கள் நம் மீது தண்ணீரையும் சேற்றையும் வாரி இறைத்து விட்டுப் போய் விடும். நிகழ்வுக்காகப் வெகு நேர்த்தியாக போட்டு வந்த ஆடை இப்போது பாழ்!   பலத்த காற்று வீசும் போது குடையின் உள் பகுதி வெளி வந்து பல் இளிக்கும்! இதில் இருந்தெல்லாம் நம்மைப் பாது காக்க கேடயம்   போல  செயல் படும் குடை வந்துள்ளது. படத்தில் இருக்கும் இது ரெட் டாட்        வடிவமைப்பு போட்டிக்காக(red dot award-design concept)  சிங்கப்பூரில் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது. இதன் பெயரே மழைக் கேடயம் தான்.

இதை வடிவமைத்தவர்கள் வடிவமைப்பாளர்கள் லின் மின் வெய் மற்றும் லியு லி சியாங். இதை மடிக்கும் போது ஒரு வட்டத் தட்டு ஆகி விடுகிறது.அப்படியே பைக்குள்  வைத்துக் கொள்ளலாம். எப்படி என்பதை கீழ் இருக்கும் படங்களில் பார்க்கலாம்

மழை கேடயம்   ஒண்ணு வாங்கிக்கலாம் போல இருக்கே! வரட்டும் வாங்கிடலாம்!

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்