சென்னையில் நடைபெற்ற பொருள் வடிவமைப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு-பதிவு I

  
 கடந்த நவம்பர் 22 , 23 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் உள்ள சென்னை மாநாட்டு அரங்கில் புதிய பொருட்கள் வடிவமைப்பு(product design) பற்றிய சர்வ தேச கருத்தரங்கு மற்றும் கண் காட்சி நடை பெற்றது.  மிகப் பயனுள்ள இந்த நிகழ்வுக்கு தொழிற்களம் சார்பாக நான் சென்றிருந்தேன்.  கிடைத்த பல அரிய பயனுள்ள தகவல்களை  இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு புதிய பொருளை தயாரிப்பதில் பல் வேறு நிலைகள் இருக்கின்றன.  முதலில் அதை பற்றிய கருத்து அல்லது யோசனை உருவாக வேண்டும்.. அதை அடுத்து அந்த பொருள் எப்படி அமைய வேண்டும் என்று வடிவமைப்பு(design) செய்யப் படும். அதை அடுத்து அதன் மாதிரி உருவாக்கம்(proto type), அதை சோதித்தல் , சந்தை ஆய்வு மற்றும் சந்தைப் படுத்துதல் என்று படிப் படியாக அந்த நிலைகள் கடந்து நமக்கு ஒரு பொருள் சந்தையில் கிடைக்கிறது.

இதில் மிக முக்கிய கட்டம் வடிவமைப்பு.  பொருள் எப்படி இருக்கும் என்ற மாதிரிப் படம் தொழில் நுட்ப படம் வரைதல் மூலம்  தீர்மானிக்கும் இது பற்றிதான் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. இதை  சென்னை பொருள் வடிமைப்பு நாட்கள்(product design days) என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் மனதையும் உடலையும் வருடும் குளிரூட்டப் பட்ட மிகப் பெரிய கூடத்தில் இரு புறமும் வடிமைப்பு நிறுவனங்கள் இந்த வடிவமைப்பு பற்றிய கல்வி நிறுவனங்கள் , வடிவமைப்புக்கு நிதி உதவி மற்றும் இதர உதவிகள் வழங்கும் நிறுவனங்கள் கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன. இந்தியா மற்றும் உலக முழுவதும் இருந்து நிறுவனங்கள் வந்திருந்தன. வடிமைப்பாளர்கள்  மற்றும் இந்த வடிவமைப்பு கல்வி படிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட ஏறக்குறைய 400 பேர் பங்கு பெற்றனர்.


 
படத்தில் இரு புறமும் கண்காட்சி அரங்குகள் மற்றும் பொருட்கள் குறித்த சுவரொட்டிகள் இருப்பதையும் யாங்கோ டிசைன் என்ற ஜப்பானிய நிறுவனத்தின் கண்காட்சி அரங்கின் உள்ளே பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டு இருப்பதையும் பார்க்கலாம்.

வடிவமைப்பு செய்யப் பட்ட இன்னம் சந்தைக்கு வராத பொருட்களை எந்த நிறுவனம் தயாரிக்க விரும்புகிறது அவர்களுக்கு தயாரிப்பு உரிமை வடிவமைப்பாளர்களால் வழங்கப் படும்.

வடிவமைப்பு செய்யப் பட்ட இன்னம் சந்தைக்கு வராத பொருட்களை எந்த நிறுவனம் தயாரிக்க விரும்புகிறதோ அவர்களுக்கு தயாரிப்பு உரிமை வடிவமைப்பாளர்களால் வழங்கப் படும். இந்தக் கண்காட்சி வடிவமைப்பாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்திருந்தது. வடிவமைப்பு பற்றி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பின் பகுதியாக திட்ட அறிக்கைகள் தயாரிக்க வடிவமைப்பு நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படும் படியும் கண்காட்சி அமைந்திருந்தது.

எப்படி வடிமைப்பு என்பது ஒரு கண்டு பிடிப்பின் முதல் படியாகச் செயல் படுகிறது, எப்படி ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு வடிவமைப்பாளர்கள் முக்கியம் , வடிவமைப்பு முறைகள், வடிமைப்பை வைத்து பொருள் தயாரித்தல், வடிவமைப்பு என்பது ஒரு முதலீடு, வடிவமைப்புத் திட்டங்களுக்கு அரசு தரும் உதவி , எப்படி வடிவமைப்புக்கு காப்புரிமை பெறுவது போன்ற தலைப்புகளில் பல் வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் திரையில் காண்பிக்கும் விளக்க உரை ஆற்றினார்கள்.


இந்த கண்காட்சிக்காக வடிவமைப்பு போட்டிகள் நடை பெற்று பரிசுகள் வழங்கப் பட்டது, எப்படி இந்த வடிமைப்பு படிப்பு படிப்பது, அது குறித்த நிறுவனங்கள் ,வடிமைப்பு நிறுவனங்கள், வடிவமைப்பு குறித்து செய்திகள் தரும் பத்திரிக்கைகள் , வடிவமைப்பாளர்களுக்கு  நிதி தரும் மத்திய அரசு நிறுவனம்,  சில சந்தைப் படுத்தும் யோசனைகள் ஆகியவை எல்லாம் உங்களுக்காக தொகுக்கப் பட்டு அடுத்த பதிவில் இடம் பெறும் Comments

 1. படங்கள் தெரியவில்லை. கவனிக்க.

  ReplyDelete
 2. inge therikirathu. konjam slow loading. enakkuth therikirathu.

  ReplyDelete
 3. தகவல்களுக்கு நன்றி...

  முதல் படமும், கடைசி படமும் வரவில்லை... கவனிக்கவும்...

  ReplyDelete
 4. konjam wait pannunga. inge slow loadingil enakkuk kidaikkirathu. Nanri. ithu ponra visayangalukku internet connection i thaan solla vendum. virantha irakkam ulla connection il thelivaagap paarkkalaam

  ReplyDelete
 5. Konjam wait panninaal muzhuvathum kidaikirathu. ithu kuriththu onrum seyvatharkkillai. konjam porumai kaathaal arumaiyana padangalaip paarkkalaam

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்