கண்ணி வெடிகளை கண்டு பிடிக்கும் பந்து!

 Kafon

 
கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்கப் பந்தா என்றால் ஆம். பந்து என்றால் சாதாரணப் பந்து இல்லை. இது ஒரு GPS பந்து.  இதை உருவாக்கிய ஹாலந்து நாட்டு  மாணவ வடிவமைப்பாளர் ஹசானி ஆப்கானிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். அங்கே நேரடியாக கண்ணி வெடிகளை கண்ட அனுபவம் இவருக்கு இருக்கத்தானே செய்யும்? . அங்கு இன்னமும் மண்ணில் புதையுண்டு கிடக்கிற கண்ணி வெடிகள் ஏராளம் ஏராளம்.ஆப்கானிஷ்தானை விட்டு ஹாலந்து நாட்டுக்கு குடி பெயர்ந்து விட்டாலும் கண்ணி வெடிகள் விளைவிக்கக் கூடிய ஆபத்துக்கள் அவர் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதனால் இந்த கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க இந்த  பந்தை உருவாக்கியுள்ளார்

கண்ணி வெடி கபோன்(mine kafon)  என்ற இந்த பந்து 70 மூங்கில் குச்சிகள் கொண்டு  ஒவ்வொரு குச்சியின் முனையிலும் ரப்பர் கால் இணைக்கப் பட்டு  நடுவில் ஒரு GPS கணினி பொருத்தப் பட்டிருக்கிறது . ஏறக்குறைய 6 அடி அளவில் மெலிதான காற்று அடித்தாலும் உருண்டு செல்லும் அளவு எடை குறைவாக உள்ளது இதனால் காற்றில் உருண்டு போகும்போது கண்ணி  வெடியை இதன் ரப்பர் முனை தொடும் போது வெடிக்கும். அதே சமயம் இதில் உள்ள  GPS    கண்ணி வெடி இருக்கும் இடத்தை தெரிவித்து விடும் . இந்த பந்து ஒரு வெடியுடன்  கோவிந்தா ஆகி விடும் என்று நினைத்தால் இல்லை. முழுதுமாக சேதம் ஆகும் முன் இன்னும் சில கண்ணி வெடிகளைக் கண்டு  பிடித்து GPS  மூலம் தகவல் தெரிவித்து விடும்


இது தொண்டு நிறுவனங்களுக்கோ அரசுக்கோ உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறார் இதை உருவாக்கிய ஹசானி. முழு உபயோகத்திற்கு வரும் வரை இன்னும் சில மேம்பாடுகளைக் கொண்டு வருவதில்  ஈடுபட்டுள்ளார் இவர்.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்