Ads Top

ஈரோட்டில் நடைபெற்ற தமிழ் மீட்சி இயக்க கூட்டம்!

கடந்த 11.11.2012 அன்று ஈரோட்டில் தமிழ்  மீட்சி இயக்கத்தின்  மாநில ஆலோசனைக் கூட்டம் நடை  பெற்றது.. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்த  பெரியார்  வாழ்ந்த  ஈரோட்டில்  கூட்டம் நடை பெற்றது மிகப் பொருத்தமான ஒன்று . நம்முடைய தொழிற் களத்தின்   சார்பாக நான் இந்த வரவேற்புக்குரிய நிகழ்வில் கலந்து கொண்டேன்.


இந்த நிகழ்வில் ஈரோடு ,  திருப்பூர்,  சேலம் ,  நாமக்கல் , பெரம்பலூர்   மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் , பல்வேறு  துறையைச்  சார்ந்தவர்களும் மாணவர்களும்  வந்திருந்தார்கள்

கூட்டம் மாலை 4 மணிக்குத் துவங்கியது . தலைமை  தாங்கி  பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் திரு அன்வர் சாஜி இந்தத் தமிழ் மீட்சி இயக்கம் மதுரை  மாவட்ட  முன்னாள் ஆட்சியாளர் திரு. சகாயம்  அவர்களின் ஆலோசனை மற்றும் வழி காட்டுதலின்  படி 2010 முதல் நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருவதாகத்  தெரிவித்தார். நம்மிடையே எப்படித் தமிழ்  உணர்வுகள் மழுங்கிப் போய் இருக்கின்றன என்பதை பேருந்தில் "ஒரு உரையாடலில் ஏன் பா இந்தத் திருவள்ளுவர்  தாடி வெச்சிருக்கார் ? என்று ஒரு மாணவன் சொன்னதையும் அதற்கு "இந்த பஸ் சரியா ஓடலை நஷ்டம் அந்த பீளிங்க்லே வச்சிருக்கார்." என்று சொன்னதாக குறிப்பிட்டார். அந்த திருவள்ளுவர் மேல் இந்த அளவு  தமிழ் சமூதாயம் பற்று வைத்திருக்கிறது என்று வருத்தத்துடன் சுட்டிக் காட்டினார். இதிலே திருவள்ளுவர் யார் என்பதே தெரியாதவர்களும் உண்டு.என்றும்  வருத்தப் பட்டார்.   இப்படி மழுங்கிப் போன தமிழ் உணர்வுகளை மீண்டும் புதுப்பித்து தொன்மையான சிறப்பு வாய்ந்த தமிழைக் காப்பாற்றி அதன் பெருமையை இந்த உலகம் அறியச் செய்வதே இந்த தமிழ் மீட்சி இயக்கத்தின் நோக்கம் என்று தெளிவாக்கினார்.
 
மதுரை மாவட்ட அமைப்பளார் சூசைராஜ் பேசும் போது மதுரையில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மீட்சி இயக்க விழிப்புணர்வுக் கூட்டம்  நடை பெறுவதாகத்   தெரிவித்தார். அங்கே ஒரு பிரிட்டிஷ் பேக்கரி என்ற பெயருள்ள கடை இருப்பதாகவும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற சட்டமே இருந்த போதும் இப்படி வைத்திருப்பது தொடர்கிறது என்று தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ் பேராசிரியர் முனைவர் பொன் கதிரேசன் பேசும் போது  தான் வேலை பார்க்கும் கல்லூரி வளாகத்திற்குள் ஆங்கிலம்தான் பேச வேண்டும் என்று  அறிவுறுத்தப் பட்டதாகவும் தமிழ் பேராசிரியர் ஆக இருந்து கொண்டு தான் அப்படி பேச முடியாது என்று உடனே மறுத்ததாகவும்  தன் தமிழ் உணர்வையும் தமிழ் பற்றையும் வெளிப்  படுத்தினார் .
 
நாமக்கல் மாவட்டத்தில்  இருந்து வந்திருந்த மாநில துணைத் தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்  திரு. க, சுப்ரமணியம் அவர்கள்  தான்  ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்த 1964  ஆம் வருடத்தில் அறிஞர் அண்ணா கலந்து கொண்ட அனைத்துக் கல்லூர் மன்றக் கூட்டத்தைக்  கூட்டியதை நினைவு கூர்ந்தார். பிற மொழி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய ஒரே இனமக்கள் இந்த தமிழ் மண்ணின் மைந்தர்கள் என்று சுட்டிக் காட்டினார்

ஒரு பேச்சாளர் தன பேச்சில் இப்படி செய்தால் தான் Reach   பண்ண முடியும் என்று ஆங்கிலத்தை விட முடியாமல் பேசியது கூட்டத்தில் சிரிப்பை ஏற்படுத்தியது  மாற்றுத் திறனாளியான  ஒரு ஆங்கிலப் பள்ளியின் துணை முதல்வரும் கலந்து கொண்டு பேசி தன் தமிழ் ஆர்வத்தை வெளிப் படுத்தினார். அவர் பேசுவதையும் கூட்டத்தின் ஒரு பகுதியையும் படத்தில் காணலாம்


பேச்சுக்களின் இடையே திரு சகாயம் அவர்கள் கைப் பேசி வழியாக தொடர்பு கொண்டு இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவைரையும் வரவேற்றார்.  தொன்மை வாய்ந்த பெருமை மிக்க தமிழ் மொழியை எழுச்சி பெறச் செய்ய தகுந்த தருணம் இது. இந்த விழிப்புணர்'வை ஒரு எழுச்சியாக மாற்றி ஒன்றியங்கள் தோறும் இந்த இயக்கத்தின் கிளைகள் ஏற்படுத்தி தமிழை தழைத்தோங்க செய்ய வேண்டும் என்று உற்சாகப் படுத்தினார்.(திரு,சகாயம் கைபேசி வழியாக பேச வசதியாக ஒலி வாங்கி கை பேசிக்கு அருகில் பிடிக்கப் பட்டிருக்கிறது) 
 
தொழிற் களம் சார்பாக பேசிய நான் தொழிற் களம் தமிழில் பதிவுகள் செய்வதை ஊக்கப் படுத்தி தமிழ் மீட்சியையும் மற்றும் தமிழ் வளர்த்தலையும் நடை முறையில் செயல் படுத்தி வருவதைத் தெரிவித்தேன். இதில் என் பணியாக தமிழில் அறிவியலைக் கொண்டு சேர்க்கும் விதமாக பதிவுகள் பகிர்ந்து வருவதையும் வெளிப்படுத்தினேன். இந்த நிகழ்வு பற்றிய சிறப்புக் கட்டுரை நம்முடைய இணைய தளத்தில் இனிய தமிழில் வெளியாகும் என்று தெரிவித்த போது கூட்டத்தில் உற்சாகக் கை தட்டல்!

இன்னும் நிறைய பேர் பேசி தங்கள் தமிழ் மீட்சி ஆர்வத்தை வெளிப் படுத்தினர். பேசுவோர் கூட்டம் என்றாலும் இது ஒரு கலந்துரையாடலாகவும் இருந்தது

ஈரோட்டில் இந்த நிகழ்வு நடை பெற சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது ஈரோடு மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. நந்தகோபால் அவர்கள். மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பொற்கை பாண்டியன் இந்த நிகழ்வின் புரவலராக இருந்து செல்வவுகளை ஏற்றுக் கொண்டு கலந்து கொண்டு தன கருத்துக்களையும் எடுத்து வைத்தது  பாராட்டுக்கு உரியது.

வந்திருந்த அனைவருக்கும் மீட்சி இயக்க உறுப்பினர் படிவம் வழங்கப் பட்டது. வரும் தைத் திங்கள் தமிழர் திரு நாள் பொங்கல் அன்று மிகப் பெரும் மாநாடு ஒன்றை நடத்துவது குறித்து யோசனை பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது. வந்திருந்த அனைவருக்கும்  இரவுச் சிற்றுண்டி வழங்கப் பட்டது. தமிழ் உணர்வாளர்களை ஒரு சேர ஒரே இடத்தில் கண்டு பேசி மீண்டும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட இனிமையான நினைவுகளுடன் அவரவர்  இல்லம் திரும்ப கூட்டம் இனிதே நிறைவுற்றது'

-தொழிற் களம்  குழுவிற்காக ஈரோட்டில் இருந்து மோகன் சஞ்சீவன் 


7 comments:

 1. இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.. தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
 2. நடந்த நிகழ்ச்சியைப் பற்றிய விளக்கம் அருமை...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. Nanri.en iniya theepavali vazhuthukkal!

  ReplyDelete
 4. நல்ல தகவல் உங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள், உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி, என் வலைப் பதிவையும் பாருங்களேன், kavithai7.blogspot.in

  ReplyDelete
 5. vazga tamil valarga tamil thx to mohan sir.

  ReplyDelete
 6. vazga tamil valarga tamil thx to mohan sir.

  ReplyDelete
 7. parattukalukku nanri. melum ellorudaiya pinnoottangalai ethir paarkkirom

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.