Ads Top

போற்றுதற்குரிய உலகின் மிக ஏழை ஜனாதிபதி ஜோஸ் முஜிக்கா!

 

 

 
இவரைப் பற்றி படித்த போது இன்றைய கால கட்டத்தில் இப்படியும் ஒரு மனிதரா என்று வியப்பாக இருந்தது.அரசியல் மூலம் அல்லது நியமனம் மூலம் பதவிக்கு வரும் அநேகமாக அனைவருமே இந்தப் பதவி மூலம் என்ன சுகங்களை அனுபவிக்கலாம். கொடுக்கப் படாத வசதிகள் இருந்தால் அதைக் கேட்டு வாங்கி அனுபவிக்கலாம் என்று நினைக்கையில் இவர் தனது சம்பளத்தில் 90 சதத்தை தர்ம காரியங்களுக்கே கொடுத்து விடுகிறார். இந்தப் படத்தில் இருக்கும் உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜிக்கா தான் அந்த மாபெரும் மனிதர்.

இவருடைய மாத சம்பளம் 12,500 டாலர்கள் . அதில் வெறும் 1250 டாலர்களை மட்டுமே வைத்துக் கொண்டு ,,மீதம் உள்ள அனைத்தையும் ஏழை மக்களும் சிறு வர்த்தகர்களும் பயன் பெறும் படி கொடையாகக் கொடுத்து விடுகிறார். இதை வைத்துக் கொண்டு நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.  இதை விட குறைந்த வருமானத்தில் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் போது இது ஒன்றும் குறைவில்லை என்கிறார்  என்னை ஒரு மாதிரியான நபர் என்றும் ஏழை ஜனாதிபதி என்றும் சொல்கிறார்கள். ஏழை யார் என்றால் மேலே மேலே பணத்தை வைத்துக் கொண்டு இன்னும் போதாது போதாது என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் தான். என்கிறார்.

பதவி மூலம் கிடைத்த மாளிகையை வேண்டாம் என்று உதறி விட்டு தனது எளிமையான பண்ணையில்  வெகு. எளிய வீட்டில் வசிக்கிறார். பண்ணைக்கு வெளியே இரண்டே இரண்டு காவல் துறை அதிகாரிகள் மட்டும்தான். விலை கொடுத்து வாங்க முடியாத அன்பு கொண்ட நாய்தான் இவருடைய துணை.

POOR PRESIDENT1


1950 டாலர் மதிப்புள்ள ஒரு பழைய வோல்க்ஸ்வாகன் பீட்டில் கார் தான் இவருடைய விலை உயர்ந்த சொத்து. 1960 , 1970 களில் கியூபா நாடு புரட்சியை தழுவிய இடது சாரி கொரில்லாவாக போர் முனையில் இருந்தவர். 14 வருடங்கள் வெஞ்சிறையில் இருந்திருக்கிறார். 2009 இல் ஜனாதிபதி ஆக தேர்ந்தெடுக்கப் பட்டு இப்போது பதவியில் இருக்கிறார் . 2014 வரை இவர் பதவியில் இருப்பார் ஏற்கனவே 77 வயது ஆகி விட்டதால் ஓய்வு பெற்று பண்ணை வீட்டில் காலம் கழிப்பார்.

இவருடைய மனைவியும் ஒரு செனடர்தான். அவரும் இங்கேதான் இருந்து கொண்டு கணவருடன் தோட்ட வேலைகளில் ஈடுபடுகிறார். எளிமையான வாழ்க்கைக்கு முழு ஆதரவு தந்து அவருடன் வாழ்ந்து வருகிறார்

இவரென்ன மனிதரா என்றால் இவர்தான் மனிதர்.  உலக அரசியல் வாதிகள் பதவி வகிப்பவர்களுக்கெல்லாம் முன் உதராணமாக இருக்கிற மாபெரும் மனிதர். இப்படி ஒரு மனிதர் நம்மிடையே இருக்கிறார் என்று இந்த மனித குலமே பெருமைப்  பட வேண்டும். வாழ்க ஜோஸ் முஜிக்கா!6 comments:

 1. ஜோஸ் முஜிக்கா அவர்கள் போற்றப்பட வேண்டியவர்... பல விளக்கமான தகவல்களுக்கு நன்றி...

  ReplyDelete
 2. Enathu nanriyum nalla pathivaiyum jose mujicavaiyum paarattiatharkku Nanri.

  ReplyDelete
 3. தொழிற்களத்தின் உதவி ஆசிரியர் பணி வேண்டுமா என குறிப்பு பார்த்தேன்.அப்பணி பற்றி விவரம் தெரியவில்லை தெரிவிக்கவும்
  கோ.சுரேந்திரபாபு.9444468670 email.friendsurender@gmail.com

  ReplyDelete
 4. ஜோஸ் முஜிக்கா அவர்களைப்பற்றி அறிவித்த தகவல் அற்புதம்.வெளியிட்டதற்கு பாராட்டுக்கள் நன்றி.
  கோ.சுரேந்திரபாபு--http://shortfilmsurendrababu.blogspot.com

  ReplyDelete
 5. .நிச்சயம் போற்றுதலுக்கு உரியவர் .பலரும் அறியாத நல்ல தகவல் .

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.