உருகாத ஆஹா ஆஹா சாக்லேட்!
வாங்க இது சாக்லேட் சமாசாரம்!

உலக முழுதும் சிறியவர்  முதல் பெரியவர் வரை சாக்லேட பிரியர்கள். 5 ஸ்டார்  ஒன்றைசுவைத்து உள்ளே தள்ளுவதில் எல்லோருக்கும் ஆனந்தம் தான்.

ஆனால் பாருங்கள். இந்த சாக்லேட நல்ல வெய்யில் காலத்தில், சட்டைப் பையில் , வெப்பமான உள்ளங்கையில் உருகிப் போய் விடுகிறது. சாப்பிட கொழ கொழப்பாய் ஆகி சிரமப் படுத்துகிறது.

இப்போது சாக்லேட் தயாரிக்கும் காட்பரிஸ் நிறுவனம் இதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளது. பௌர்ன் வில் இங்கிலாந்தில் இருக்கும் காட்பரி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆய்வக முறைப் படி சாக்லேட்டில் இருக்கும் கோகோ வெண்ணை , தாவர எண்ணெய், பால் மற்றும் சக்கரை எல்லாவற்றையும் ஒரு கொள் கலனில் உலோக மணிகள் கொண்டு அரைத்து   அதில் இருக்கும் சக்கரை கொழுப்ப் பொருட்களை எடுத்துக் கொள்ளாத படி சாக்லேட் கட்டியாக ஆக்குகிறார்கள். இது சாதாரண கட்டியை விட உருகு நிலை அதிகம் உள்ளதாக மாறி விடுகிறது. இதனால் 104 டிகிரி பாரன்ஹீட் வரை உருகமால் தாக்குப் பிடிக்கும்.

உருகாத சாக்லேட் இப்போது தயார். ஆனால் ஒரு குறை வாயில் போட்டாலும் சீக்கிரம் கரையாது. இதற்கும் ஒரு வழி கண்டு பிடித்து விட்டால் இது ஒரு ஆஹா ஆஹா சாக்லேட்தான்  இது குளிர் நாடுகளில்  தேவைப் படாது என்பதால் முதலில் இந்தியா, பிரேசில் போன்ற உஷ்ண நாடுகளில் மட்டுமே கிடைக்கும்

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்