Ads Top

பேஸ்புக் - மார்க் என்னும் வழக்கறிஞன் (அத்தியாயம் - 3)

முதல் பகுதி 

பேஸ்புக் - முதல்பக்கம் (அத்தியாயம்-1)

முந்தைய பகுதி 

பேஸ்புக் - பேஸ்மேஷ் (அத்தியாயம்-2)

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின்
ஒழுங்கு நிர்வாகக் கமிட்டியிடம் இருந்து வந்திருந்த கடிதத்தை மார்க் ஒரு பொருட்டாகவே கருதவில்லை அவரைப் பொறுத்த வரை அந்தக் கூட்டத்தை ஏதோ ஒரு கலந்தாய்வுக் கூட்டம் போல் கருதினார். தன் மீது சுமத்தப் பட்டிருந்த குற்றங்களைப் பற்றி அவர் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு விஷயம் தன் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றங்களை இறைவனே நினைத்தாலும் மறைக்க முடியாத விதமாக நல்ல காரியம் ஒன்றையும் மிகத் தெளிவாக செய்திருந்தார் மார்க். சிறிது குழப்பமாக இருக்கிறதா! புரிதலுக்காக மார்க் வடிவமைத்த பேஸ்மேஸினுள் மீண்டும் ஒருமுறை நுழைந்து விடுவோம்.

பேஸ்மேஸ் என்றொரு பூதம் தன்
கல்லூரி வாழ்கைக்கே உலை வைக்கப் போகிறது என்பதை அறியாத மார்க் அதற்கான வாக்குமூலத்தையும் தன கையால் தானே எழுதுவார் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். பேஸ்மேஸ் விளையாடுவது எப்படி என்று அமெரிக்கர்கள் யாருக்கும் சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தான் வடிவமைத்த "பேஸ்மேஸ் Am I Hot Or Not" என்னும் இணைய விளையாட்டை எத்தனை சவால்களுடன் வடிவமைத்தார் என்ற விஷயத்தை மக்களுக்கு சொல்லியாக வேண்டுமே! அதில் தானே இருக்கிறது தனது உழைப்பிற்கான அங்கீகாரம்! தனது பேஸ்மேஸ் இணையதளத்தில் தான் எப்படி ஹாட் ஆர் நாட் விளையாட்டை வடிவமைத்தார் என்றும், எப்படி எல்லாம் படங்களை தரவிறக்கம் செய்தார் என்றும் தன்னால் தரவிறக்கம் செய்ய முடியாத விடுதிகளில் இருந்து படங்களை தரவிறக்கம் செய்ய எந்த எந்த நண்பர்கள் எவ்வாறு எல்லாம் உதவினார்கள் என்றும் மிகத் தெளிவாக எழுதி இருந்தார் மார்க். தனக்கு உதவிய நண்பர்களின் பெயர் முதல்கொண்டு எழுதி இருந்தார். மார்க்கிற்கு எதிராக எத்தனையோ ஆதாரங்கள் இருந்தும் இந்த ஒரு ஆதாரம் போதாதா மார்க் குற்றவாளி என்று நிருபிக்க.ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் கறுப்பின பெண்கள் குழு(!) மார்க் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாகவும் மிக உறுதியாகவும் இருந்தது. காரணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் தான். கல்லூரி நிர்வாகமும் அதையே தனது குற்றச்சாட்டுகளில் ஒன்றாக சேர்ந்து இருந்தது. மார்க் கமிட்டி முன்பு ஆஜராகும் நாளை கல்லூரியே ஆவலுடன் எதிபார்த்துக் கொண்டிருந்ததது. 


வம்பர் பதினெட்டு நண்பகல் ஹார்வர்டின் ஒழுங்கு நிர்வாகக் கமிட்டி முன்னால் மார்க் ஆஜராகி இருந்தார். நீதிமன்றத்தில் எப்படி விசாரனை நடைபெறுமோ அதுபோல் தான் ஒழுங்குக் கமிட்டியின் முன்பும் விசாரணை நடைபெறும். இங்கே தனக்காக வாதாடுபரை நியமிப்பதும் நியமிக்காத்தும் குற்றம் சுமத்தப்பட்டவரின் தனிப்பட்ட விருப்பம். மார்க் தனக்காக வாதாட தன்னையே நியமித்துக் கொண்டார். மார்க்கை வக்கீல் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது தான் அவரது தந்தை எட்வர்ட் ஜக்கர்பெர்க்கின் ஆசை. எட்வர்ட் தனது மகன் மார்க்கைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார் மார்க் ஒரு விஷயம் பற்றியோ, ஒரு பொருள் பற்றியோ விவாதம் செய்ய ஆரம்பித்தால் அவரிடம் மறுத்துப் பேசுவது என்பது அசாதாரணமான காரியம். மார்கிடம் "இல்லை" என்று சொல்லும் முன் அந்தப் பொருளைப் பற்றிய நுண்ணறிவு, அதனைப் பற்றிய அனுபவங்கள், அந்தப் பொருளால் ஏற்படும் நன்மை தீமைகள் என்று என்னவெல்லாம் காரணங்கள் சொல்ல முடியுமோ அத்தனையும் சொல்ல வேண்டும் இல்லை என்றால் மார்க் உங்களை வென்று விடுவான். எதையும் தீர ஆராயும் பழக்கம் மார்க்கிற்கு சிறு வயது முதலே இருந்ததால் அவரை வக்கீலாக்கிப் பார்க்க வேண்டும் என்று அவரது குடும்பம் நினைத்ததில் வியப்பேதும் இல்லையே. 


"மிஸ்டர் மார்க் உங்கள் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றங்கள் அனைத்தும் ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம் உங்களை டிஸ்மிஸ் செய்வதற்கான காரணங்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக உள்ளது. உங்கள் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றங்களைப் பற்றி நீங்கள் விளக்க நினைத்தால் விளக்கலாம்". ஹார்வர்ட் ஒழுங்கு நிர்வாகக் கமிட்டி.


மார்க் " என் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றங்கள் எதையும் நான் மறுக்கப் போவதில்லை, அதே நேரத்தில் என் மீது சுமத்தப் பட்டிருக்கும் அத்தனை குற்றங்களிலில் நியாயமும் இல்லை. நான் ஒரு கணினித் துறை சார்ந்த மாணவன், அதனால் இது போன்ற ப்ரோஜெக்ட்டுகள் செய்து பார்ப்பதில் தவறு இல்லை, அதே நேரத்தில் இது என்னுடைய முதல் ப்ரொஜெக்ட்டும் இல்லை. இது போன்ற பல ப்ரோஜெக்ட்டுகள் செய்து பார்ப்பது தான் என்னுடைய பொழுதுபோக்கு அப்படி முயன்று பார்த்த ஒன்று தான் இந்த பேஸ்மேஸ் , இந்த அளவிற்கு பேசப்படும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லைந்தப் புகைப்படங்களை வைத்தோ அல்லது இந்த இணையத்தை வைத்தோ காசு சம்பாதிக்கும் எண்ணம் எனக்கு சிறிதும் இல்லை. இது ஒரு சிக்கலான பார்முலா உடைய விளையாட்டு இதனை வெற்றிகரமா செய்து பார்ப்பது என்பது சவாலான விஷயம். மூளைக்கு வேலை கொடுக்கும் படியான இந்தப் ப்ராஜெக்ட் ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று சோதனை செய்து பார்பதற்காக மட்டுமே எனது நண்பர்களுக்கு அனுப்பினேன். . விளையாட்டு அவர்களுக்குப் பிடித்துப் போகவே அவர்கள் மற்றவர்களுக்கு அதன் லிங்கை அனுப்பி விட்டனர். இது நான் சற்றும் எதிர்பாராத ஒரு விஷயம். குறைந்த கால அளவில் இத்தனை பேர் இதனை விளையாடிப் பார்பார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும் இந்த இணையம் மூலம் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கவே அதனை நான் உடனே செயல் இழக்கச் செய்துவிட்டேன். 

டுத்தது புகைப்படங்கள். பழக்கம் இல்லாத பிரபலங்கள் முகங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கு தங்கள் உடன் பயிலும் மாணவர்கள் முகங்களைப் பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது, அது மட்டுமே இந்த விளையாட்டின் வெற்றியாக இருக்க முடியும், அதே நேரத்தில் சக மாணவர்களை நான் அவமதிப்பது போல் உணர்ந்தார்கள் என்றால் அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கத் தயார்.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் புகைப்படங்களை திருடியதாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்த இந்தப் தகவல்களை தவறான காரியத்திற்கு உபயோகிக்க வில்லை. கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனால் மிகப் பெரிய கல்லூரியின் தளத்தில் இருந்து ஹாக் செய்ய முடியும் என்றால் இதனை குற்றமாகப் பார்க்காதீர்கள் எச்சரிக்கையாகப் பாருங்கள். கல்லூரியின் இணையப் பாதுகாப்பு மிக மோசமான நிலையில் உள்ளது அதனை சரி செய்ய வேண்டும் என்ற கோணத்தில் பாருங்கள்". 


மார்க் தனது வாதங்களை கூறி முடித்தார்.


ஹார்வர்டின் ஒழுங்கு நிவாகக் கமிட்டி மார்க்கை அதிசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. குற்றங்களை அனைத்தையும் மறந்து அவரது வாதத் திறமையை எண்ணி வியந்தது. நிச்சயமாக புத்திசாலித்தனமான வாதம். பல்கலைகழகத்தின் இணையப் பாதுகாப்பின் கேள்விக்குறியை நிர்வாகம் ஒத்துக்கொண்டது. அதே நேரத்தில் தான் செய்த மார்க் மன்னிப்பு கேட்க தயாராக இருந்ததால் அவரை டிஸ்மிஸ் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு குறைந்தபட்ச தண்டனை கொடுக்க நிர்வாகம் முன்வந்தது. 


றுநாள் நவம்பர் பத்தொன்பதாம் தேதி ஹார்வர்ட் பல்கலைகழக இதழான "க்ரிம்சனில்" பேஸ்மேஸ் பற்றியும் மார்க் பற்றியும் விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது.மார்கிற்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது.


யார் இந்த மார்க் ஜக்கர்பெர்க்...! காத்திருங்கள் அடுத்த வாரம் வெள்ளி வரை...!


பக்கங்கள் புரளும் 

9 comments:

 1. மச்சி சும்மா கலக்குற ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு......

  ReplyDelete
 2. இன்னும் ஒருவாரம் காத்திருக்க வேண்டுமா? தொடர் தங்களது அழகான எழுத்து நடையாலும் மிகவும் விறுவிறுப்பாக போகிறது நண்பரே! வாரத்திற்கு ஒருமுறை என்பதை "இருமுறை" என்பதாக வைத்துக்கொள்ள கூடாதா?

  ReplyDelete
 3. சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

  ReplyDelete
 4. உங்களது அழகான எழுத்து நடை வாரத்திற்கு ஒருமுறை வந்தாலும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. ஒரு கதை படிப்பது போன்ற சுவாரஸ்யத்துடன் படிக்க முடிகிறது. மிக அழகாக, தொடர்ந்து படிக்கத் தூண்டும் வண்ணம் எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 6. கலக்குறீங்க சீனு அண்ணா! புரளும் பக்கங்களுக்காக காத்திருக்கிறேன்

  ReplyDelete
 7. //கல்லூரியின் தளத்தில் இருந்து ஹாக் செய்ய முடியும் என்றால் இதனை குற்றமாகப் பார்க்காதீர்கள் எச்சரிக்கையாகப் பாருங்கள். கல்லூரியின் இணையப் பாதுகாப்பு மிக மோசமான நிலையில் உள்ளது அதனை சரி செய்ய வேண்டும் என்ற கோணத்தில் பாருங்கள்". //

  மார்க் ராக்ஸ் !

  ReplyDelete
 8. சீனு தெளிவான நடையில் எழுதப்பட்ட தரமான கட்டுரை ...

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.