Ads Top

பேஸ்புக் - குருவும் சிஷ்யனும் (அத்தியாயம் - 5)


முதல் பகுதி 

முந்தைய பகுதி 


"மார்க் உனக்கு வாங்கித் தந்த கம்ப்யூட்டர் எவ்ளோ தூசி அடைஞ்சு போய் இருக்குன்னு பாரு, இப்போ எல்லாம் நீ உன் கம்ப்யூட்டர் பக்கமே போறது இல்ல" எட்வர்ட் மார்கிடம் கடிந்து கொண்டார்.


"போங்கப்பா, இந்த கம்ப்யுட்டர் ரொம்ப போர், நா நினச்ச மாதிரி இது வேல செய்ய மாட்டேங்குது, என்னால இது கூட உருப்படியா எதுவும் விளையாட முடியாது, எனக்கு இது வேணாம், நான் விளையாட போறேன், டாட்டா", பதின்ம வயது சிறுவனுக்கு கம்ப்யூட்டர் போர் அடித்துவிட்டது, பாவம் அவன் என்ன செய்வான், கம்ப்யுட்டரை விளையாட்டுப் பொருளாக மட்டும் பார்த்த மார்க்கிற்கு முறையாக அதை உபயோகப் படுத்தத் தெரியாததால், கணிணியையே வெறுத்துவிட்டான், அதன் வெளிபாடு தான் மார்க்கின் இந்த வார்த்தைகள் "என்னால இது கூட உருப்படியா எதுவும் விளையாட முடியாது"

ணிணியைக் கொண்டு உருப்படியாக எதுவும் செய்ய முடியாது என்ற மார்க்கின் வார்த்தைகளை எட்வர்ட் சிறிதும் எதிர்பார்த்திருக்வில்லை. மார்க்கையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், சிறுவனோ விளையாட வேண்டிய அவசரத்தில் இருந்தான்.,
   
"மார்க் கணினியுடன் உனக்கு பேசத் தெரியுமா? கணினியை உனது தோழனாக்கிக் கொள்ள விருப்பமா? நான் சொல்கிறபடி கேட்டாய் என்றால், நீ சொல்கிற படியெல்லாம் உனது கணினி கேட்கும் , சம்மதமா உனக்கு? உனக்கு சம்மதம் என்றால் கணினியுடன் பேசும் அந்த  அற்புத மொழியை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்".

"ணினியுடன் பேசும்  அற்புத மொழி" இந்த வார்த்தைகள் மார்க்கை நிச்சயம் கவர்ந்திருக்க வேண்டும், தன் சிறிய விழிகளை அகல விரித்து "கணினியுடன் என்னால் பேச முடியுமா? நான் சொல்வதை எல்லாம் கணினி கேட்குமா? கணினியால் என்னுடைய தோழன் ஆக முடியுமா?" மார்க் தன் பங்கிற்கு கேள்விகளை அடுக்கினான், மீண்டும் ஒரு விஷயத்தை இங்கு நினைவுபடுத்துகிறேன், நீங்கள் கூறும் ஒரு விசயத்தை மார்க் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், மார்க் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லத் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், இல்லை என்றால் மார்க் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.


ட்வர்ட் இந்த விசயத்தில் மார்க்கை வென்றுவிட்டார். தனது குழந்தைக்கு கணினி குறித்த வகுப்பு எடுக்க தயாரானார். உலகையே தன் வலைப்பக்கத்தின்  முன்னால் உட்கார வைத்திருக்கும் மார்க்கின் முதல் கம்ப்யூட்டர் குரு அவரது தந்தை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எட்வர்ட் தனது ஓய்வு நேரங்களில் தான் படித்த அட்டாரி பேசிக்கை மார்கிற்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அட்டரியின் நீலத்திரை மார்க்கை பெரிதும் கவர்ந்துவிட்டது. (உங்களிடம் ஒரு கேள்வி! அட்டாரியின் நீலத் திரைக்கும், பேஸ்புக்கின் நீலத் திரைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?) வெகு விரைவாக, வெகு எளிதாக அட்டாரி 800 மொழியை கற்றுக்கொண்டார் மார்க், ஒரு கட்டத்தில் அட்டாரியில் தனது தந்தையை மிஞ்சி விட்டார். எட்வர்ட் கணினி வல்லுனரோ மேதாவியோ இல்லை. கிளினிக்கில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் கணினி கற்றவர் தான் எட்வர்ட்.  

னால் மார்க்கோ பத்து கி.மீட்டர் வேகத்தில் ஓடக் கற்றுக் கொடுத்தால் நூறு கி.மீட்டர் வேகத்தில் ஓடும் பிள்ளை. அட்டாரியை கற்றுக் கொண்டதும் மார்க் கூறிய பதில் "இவ்வளவு தானா இதைத் தான் அற்புத மொழி என்றீர்களா? நான் என்னவோ நினைத்து விட்டேன், சரி நான் விளையாடக் கிளம்பலாமா?". மார்க்கின் வேகத்திற்கு எட்வர்டால் ஓட முடியவில்லை, ஒன்றை நன்றாகப் புரிந்து கொண்டார், மார்க் எளிதில் கணினி கற்றுக் கொள்கிறான், அந்த ஆர்வத்தை இன்னும் மெருகேற்ற வேண்டும். 

சி++ பார் டம்மீஸ் என்ற புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னார். உபரி தகவல் : பார் டம்மீஸ் என்ற தலைப்பில் இதுவரை 2300 புத்தகங்கள் வெளிவந்த்ருகின்றன, அதில் பேஸ்புக் பார் டம்மீஸ் என்ற புத்தகமும் அடக்கம். குழந்தைப் பருவத்தில் பார் டம்மீஸ் புத்தகத்தை வழிகாட்டியாகக் கொண்டவருக்கு, அதே புத்தகத்தில் தானும் ஒரு வழிகாட்டியாய் மாறுவோம் என்பதை மார்க் சற்றும் எத்ரிபார்த்திறுக்க மாட்டார்.  

ட்டாரியை விட சி++ கொஞ்சம் பெரிய மொழி, இருந்தும் மார்க் அதையும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். இங்கே மற்றும் ஒரு சிக்கல் ஆரம்பித்தது. கணினி வாங்கிக் கொடுத்தாயிற்று,புத்தகம் வாங்கிக் கொடுத்தாயிற்று, சரி குரு எங்கே? மார்க்கிற்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுப்பது யார்? 1+1 என்று கணக்கு எழுத மார்க் சாதாரண சிறுவனா. எட்வர்டால் மார்க்கை சமாளிக்க முடியவில்லை, அவனது சந்தேகங்கள் அனைத்தும் வித்தியாசமானதாய் மிகப் பெரியதாய் இருந்தது. தேர்ந்த குரு ஒருவரின் துணை இல்லாவிட்டால் மார்க் நம்மை சும்மா விடமாட்டான் என்பதை எட்வர்ட் புரிந்துகொண்டார்.

டேவிட் நியூமன் மார்க்கின் புதிய குரு. புதிய ஓட்டம் ஆரம்பித்தது. நியூமண் கொஞ்சம் விஷயம் தெரிந்த்தவர், அவரிடம் இருந்து இன்னும் பல புதிய விசயங்களை, புதிய வழிமுறைகளை மார்க் கற்றுக் கொண்டான், மார்க்கின் வேகத்திற்கு நியூமனால் ஓட முடியவில்லை, ஓட்டத்தில் அவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டான், இத்தனைக்கும் டேவிட் நியூமன் மார்க்கிற்கு வகுப்பு எடுத்தது வாரத்திற்கு ஒருநாளே. "கணினி சார்ந்த நுட்பங்களில் தேர்ச்சி பெறுவதில் மார்க் ஒரு அற்புதக் குழந்தை, அவனுக்குக் கற்றுக் கொடுக்க என்னிடம் வேறு வித்தை இல்லை, அவன் என்னை முந்திச் சென்றுவிட்டான். டேவிட்டின் இந்த வார்த்தைகள் மார்க்கின் வாழ்க்கை ஓட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று.

மார்க் தான் கற்றுக் கொண்டதை கொண்டு என்ன செய்தான், எப்படி பரிசோதனைகள் செய்து பார்த்தான் என்று நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் இருக்கலாம் இல்லையா, விளையாட்டுப் பிள்ளைக்கு விளையாட்டைத் தவிர வேறு என்ன தெரியும், அந்த வயதிலேயே கம்ப்யூட்டர் கேம்சிற்கு ப்ரோக்ரம் எழுதத் தொடங்கினார் மார்க். மார்க்கின் வகுப்புத் தோழர்களில் சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம், அவர்கள் வரைந்து தரும் அந்த ஓவியகளை கணினியில் ஏற்றி அவற்றைக் கொண்டு கம்ப்யூட்டர் கேம்ஸ் எழுதுவதில் மார்க்கிற்கு அலாதி ஆர்வம்.


தான் கற்றவைகளை மார்க் இப்படித் தான் பரிசோதித்துப் பார்த்தார், மார்க்கிற்கு மிகவும் பிடித்த திரைப்படம் ஸ்டார் வார்ஸ், அதில் வரும் காட்சியமைப்புகளைக் கொண்டும் கேம்ஸ் எழுதியுள்ளார். தனது கடந்த கால நினைவுகளைப் பற்றி குறிப்பிடும் பொழுது மார்க் இந்த சம்பவங்களைப் பற்றி குறிப்பிட தவறுவதே இல்லை. 


"டாக்டர் இசட், பேஷன்ட் வந்த்ருகாறு உடனே வாங்க", எட்வர்ட் ஷக்கர்பெர்க் ரிசப்ஷனிஸ்டின் இந்த அலறல் டாஸ்பெரி நகரம் முழுவதும் எதிரொலிக்கும். எட்வர்ட்டிற்கு இது கொஞ்சம் கவுரவக் குறைச்சல் போல் தோன்றியது.

ன்ன தான் டாஸ்பெரி நகரின் மிகப் பெரிய பல் மருத்துவர் என்றாலும் எட்வர்டிடம் அலைமோதும் அளவிற்கு எல்லாம் கூட்டம் வருவது கிடையாது. அவரது இல்லமும் கிளினிக்கும் ஒட்டினார்போல் இருக்கும். பேஷன்ட் யாரும் இல்லை என்றால் வீட்டிற்கு சென்று தனது கணினியை நோண்ட ஆரம்பித்து விடுவார். "டாக்டர் இசட், பேஷன்ட் வந்த்ருகாறு உடனே வாங்க" என்ற அலாரம் மிக சத்தமாக அடிக்கத் துவங்கும் பொழுது எட்வர்ட் கிளினிக் சென்று வைத்தியம் பார்த்து விட்டு மீண்டும் வீடு திரும்பிவிடுவார். 

ரிசப்சனிஸ்ட் சத்தம் ஊரையே கூட்டும் படி கேட்பதால் அக்கம்பக்கத்தார் எல்லாரும் எட்வர்டையும் அவரது ரிசப்சனிஸ்டையும் கேலி செய்யத் துவங்கினர், அவரின் கவுரவக் குறைச்சலுக்குக் காரணம் இந்த சம்பவம் தான்.

அப்பவிற்கு ஒரு பிரச்னை என்றல் மகன் களத்தில் இறங்க வேண்டாமா? அப்பாவின் பிரச்சனைக்கு தீர்வு காணத் தயாரான மார்க்கின் முதல் அறிய சாதனை தான் இன்று உலகையே கனக்டில் வைத்திருகிறது. மேலும் இதன் பின் மார்க் கண்டறிந்த ஒவ்வொர்ன்றுமே சமுகம் சார்ந்தது சமுக இணைப்பு சார்ந்தது... 

என்னவென்று அறிந்திட காத்திருங்கன் இன்னும் ஒரே ஒரு வாரம்...    

பக்கங்கள் புரளும் 


     

8 comments:

 1. முகப் புத்தகத்தை கண்டுபிடித்தவரின் அகத்தை பார்க்கும் முயற்சியை பாராட்டுவது அருமையாக உள்ளது

  ReplyDelete
 2. முகப்புத்தகத்தை கண்டுபிடித்தவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.சஸ்பென்ஸ் இன்னும் ஒரு வாரமா!

  ReplyDelete
 3. மார்க் மழலை வயதிலேயே கணினியில் அசாத்தியமாக அசத்தியது ஆச்சரியமாக உள்ளது.குழந்தைகளுக்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் சாதனையாளர் ஆவர்கள் !.

  ReplyDelete
 4. வாழ்த்துகள் சீனு. தொடர்ந்து எழுதவும்.

  ReplyDelete
 5. ஒரு கண்டுபிடிப்பு நிகழ்வதற்கு எப்படி சிறிய செயல்கள் தூண்டுகோலாய் அமைகின்றன என்று தெரிகிறது. சுவாரஸ்யமாகச் சொல்லி வருகிறீர்கள் சீனு.

  ReplyDelete
 6. /// நீங்கள் கூறும் ஒரு விசயத்தை மார்க் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், மார்க் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லத் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், இல்லை என்றால் மார்க் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.///

  அட்டகாசம் சீனு....

  தொடர்ந்து விளாசு,,,

  ReplyDelete
 7. சுவாரஸ்யம்... அடுத்த வாரம் வரை காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 8. இன்று தான் எல்லாப் பகுதிகளையும் வாசித்தேன். அருமை. அத்தனை சுவாரஸ்யமாக இருக்கிறது. நீங்கள் எழுதியிருக்கும் விதம் சுவாரஸ்யமா இல்லை மார்க்கின் கதை சுவாரஸ்யமா என்று தெரியவில்லை!

  ஒருவாரம் காத்திருக்க வேண்டுமா...! :(

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.