பேஸ்புக் - பேஸ்புக்கின் தந்தை (அத்தியாயம் -4)
முதல் பகுதி
முந்தைய பகுதி

"அப்பன் எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறு அடி பாய்வான்" என்பது பழமொழி. எட்டடி பாயும் அப்பாவான எட்வர்ட் பற்றி பார்த்துவிட்டு மார்க்கின் வாழ்க்கைக்குள் நுழைந்தால் சுவாரசியம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
அஞ்சல் துறையில் வேலை பார்க்கும் அப்பா, குடும்பத் தலைவி அம்மா என்ற நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர் எட்வர்ட் ஜக்கர்பெர்க். எட்வர்ட் இருந்த ஏரியாவில் முதன்முதலில் கலர் டிவி வாங்கியது எட்வர்டின் குடும்பமே. தொலைகாட்சி வந்ததாலோ என்னவோ அவர்கள் வீட்டில் இருந்த ரேடியோ மூலைக்குள் முடங்க ஆரம்பித்தது, மூலைக்குள் முடங்கிய அந்த ரேடியோவை பிரித்து மேய்ந்ததில் இருந்து ஆரம்பித்தது எட்வர்டுக்கும் எந்திரங்களின் மீதான காதலும். அந்தச் சிறுவயதில் தனக்கிருந்த அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு கையில் கிடைக்கும் எந்திரங்களை எல்லாம் பிரித்து மேய்ந்து கொண்டிருப்பார். எந்திரங்களுக்கும் உணர்வு உண்டு என்று பரிபூரணமாக நம்புவார் இன்றும் நம்புகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றுடன் பேசிக் கொண்டிருப்பார்.
எட்வர்டின் பதின்ம வயதும் கணினி யுகத்தின் அதிதீத வளர்ச்சியும் ஒன்றாகவே இருந்தது. அறை முழுவதையும் அடைத்துக் கொண்டு பிரமாண்டமாய் இருக்கும் கணினிகளின் மீது எட்வர்டிற்கு சிறுவயது முதலே தனிபிரியம் உண்டு. ஆனால் எட்வர்டின் அப்பாவிற்க்கோ அவரை ஒரு மருத்துவராக பார்க்க வேண்டும் என்று ஆசை. முட்டாள்களின் மூலதனம் கணினி என்பது எட்வர்ட் அப்பாவின் வாதம். எட்வர்ட் பல்மருத்துவம் பயின்று மருத்துவர் ஆன பின்பும் அவருக்கு கணினிகளின் மீது இருந்த ஆர்வம் தனியவே இல்லை. முழுமையாக கணினி மயமாக்கபட்ட முதல் பல் மருத்துவமனை எட்வர்ட் ஜக்கர்பெர்க் உடையது, என்பது இங்கே கூடுதல் தகவல். அவரது மருத்துவமனை வீடு என்று எங்கும் கணினி மயம். கணினி மயமாக்கபட்ட மருத்துவமனை, வலி தெரியாமல் பல்லை கழற்றி எடுக்கும் வேடிக்கை மருத்துவர் என்று எட்வர்ட் அந்தப் பகுதி முழுவதுமே மிகவும் பிரபலம். மக்கள் அவரை செல்லமாக அழைப்பது கோழைகளின் மருத்துவர் டாக்டர் இசட்.

1979 ம் வருடம் உளவியல் படிப்பு படித்துகொண்டிருந்த கேரனை காதல் திருமணம் செய்து கொண்டார் எட்வர்ட். இவர்களது முதல் குழந்தை ராண்டி, இரண்டாவது மார்க் மூன்றாவது டோனா குழந்தை வீட்டின் கடைசிக் குழந்தை ஏரியலி. இவர்களது நான்கு குழந்தைகளுமே மிகவும் புத்திசாலிகள் அதே நேரத்தில் சேட்டைகளும் மிக அதிகம். மார்க் தனது அக்கா ராண்டியுடன் சேர்ந்து செய்த குறும்புத் தனங்களில் இன்றளவும் மறக்க முடியாத நிகழ்வு என்று மார்க் குறிப்பிடுவது ப்ராப்ளம் Y2K.
ப்ராப்ளம் Y2K என்பது 1999 ம ஆண்டு டிசம்பரில் கணினி உலகம் சந்தித்த மிகப் பெரிய பிரச்னை. அதாவது கணினியில் தேதியை MM-DD-YY என்று குறிப்பது வழக்கம். 1999 என்பதை சுருக்கமாக 99 என்று குறிப்பது வழக்கம். 1999 ற்கு அடுத்த வருடம் 2000 இதனை கணினி 00 என்று கொள்ளும். குழப்பம் ஆரம்பித்தது இங்கே தான். 00 என்பதை கணினி 2000 என்று எடுத்துக் கொள்ளுமா அல்லது 1900 என்று எடுத்து கொள்ளுமா என்பதை யாராலும் தெளிவு படுத்த இயலவில்லை. உலகமே தலையை பிய்த்துக் கொண்டிருந்தது. ஒருவேளை 1900 என்று எடுத்துக் கொண்டால் மொத்த கணினி செயல்பாடும் வங்கி தொழில் பர்வர்த்தனைகளும் முடங்கிவிடும். கணினிமயமாகப்பட்ட துறைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும் Y2K மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில் கணினி உலகமும் சுதாகரித்துக் கொண்டது. தற்பொழுது வருடம் YYYY என்று குறிப்பிடப்படுவதற்கான காரணம் Y2K கொடுத்த எச்சரிக்கை தான்.
ப்ராப்ளம் Y2Kவிற்கும் மார்கிர்க்கும் என்ன சமந்தம் என்று கேட்கிறீகளா, மார்க் Y2Kவில் புரட்சி எதையும் உண்டு பண்ணவில்லை தனது குடும்பத்தில் மிரட்சியைத்தான் உண்டு பண்ணினான். 2000 வருடம் பிறக்கும் புத்தாண்டு தினத்தன்று சரியாக பனிரெண்டு மணியளவில் தனது வீட்டில் இருக்கும் தனது சகோதரி ராண்டியுடன் சேர்த்து தடை செய்துவிட்டு Y2K பிரச்னை காரணமாகத் தான் மின்சாரம் செயல் இழந்துவிட்டது, இனி மின்சாரமே வராது என்று தனது குடும்பத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருகிறார். நமக்கு இன்று மிக சாதாரணமாக தெரியும் இந்த விஷயம் அன்று மிகப் பெரிய பீதியை ஏற்படுத்திய ஒன்று என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
சிறுவயது முதலே மார்க்கிற்கு கணினி மீது அலாதி ஆர்வம் அதற்க்கு மிக முக்கிய காரணம் அவரது தந்தை எட்வர்ட் ஜக்கர்பெர்க் தான். அன்றைய காலகட்டத்தில் கணினி என்பதே அபூர்வமான விசயமாக இருந்த நேரத்தில் எட்வர்டோ தனது அலுவலகம் குடும்பம் என்று எங்கும் கணினியால் நிரப்பி வைத்திருந்தார். இதில் ஆச்சரியமான விஷயம் மார்க் விளையாட்டுப் பொருளாக தனக்கு கணினி வேண்டும் என்று அடம்பிடிக்க எட்வர்டும் வாங்கிக் கொடுத்துவிட்டார். தனது மகனுக்கு கணினி மீது இருந்த ஆர்வத்தை எட்வர்ட் சரியான நேரத்தில் கணிக்க தவறியிருந்தால் பேஸ்புக் யுகத்தை நாம் இழந்திருப்போம்.
அடுத்த அத்தியாயம்
அடுத்த அத்தியாயம்
பேஸ்புக் - குருவும் சிஷ்யனும் (அத்தியாயம் - 5)
பக்கங்கள் புரளும்
தொடர் முடிந்ததும் புத்தகமாக்க முயற்சி செய்யுங்கள் நண்பா! நன்றாக போகிறது...
ReplyDeleteNice one
ReplyDeleteஅருமையான நடையில் அழகான பதிவு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்கள் பாணியில் விளக்கம் அருமை... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteசூப்பர் நண்பா பிளாக்கர் நண்பன் சொன்னது போல இதை இபுக் போட்டால் நன்றாக இருக்கும்.....
ReplyDelete//சூப்பர் நண்பா பிளாக்கர் நண்பன் சொன்னது போல இதை இபுக் போட்டால் நன்றாக இருக்கும்.....//
ReplyDeleteஈ-புக் பற்றி சொல்லவில்லை. காகித புத்தகம்.
குழந்தைகளின் ஆர்வத்தை சரியான நேரத்தில் புரிந்துகொண்டு ஊக்குவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. மின்சாரம் தடைப் பட்டதாக பீதியைக் கிளப்பியதும் சுவாரஸ்யம்.
ReplyDeleteதந்தை எட்டடி மகன் பதினாறடி....
ReplyDeleteநல்ல தந்தை மகனின் விளையாட்டு பொருளாக விலையுயர்ந்த கணினியை வாங்கி கொடுத்திருக்கிறாரே!
தொடரை தொகுத்து புத்தகம் போடலாம் நல்ல முயற்சி,பலரை சென்றடையும்
ReplyDeleteஅச்சுவடிவில் கொண்டு வருவதற்காகத்தான் "பிரபல பதிவர்" சீனுவிடம் தொழிற்களம் இந்த பொருப்பையே கொடுத்திருக்கிறது,,,
ReplyDeleteவிரைவில் இந்த "சீனு"வை எழுதி தர சொல்லுங்கள் சகாக்களே"'
மிக அற்புதம் சீனு ...
ReplyDeleteமிக நுணுக்கமான வார்த்தைகளை கொண்டு எழுதுகிறிர்கள் ... வாழ்த்துக்கள் ..
தேர்ந்த எழுத்தாளரின் எழுத்து நடை , அழகு
ReplyDelete