காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...காலை தேநீர்....

அன்பு சகாக்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.... இன்றைய தேநீர் துளிகள் வாயிலாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்....

                                           

இன்றைய தேநீர் துளிகள்...

  • வாழ்க்கையை நேசிப்பவர்களாக இருந்தால் நேரத்தை வீணாக்காதீர்கள், ஏனென்றால் நேரத்தால் ஆனதுதான் வாழ்க்கை...
  • இருக்கும் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள்தான் எதற்கும் நேரம் போதவில்லை என்று முணுமுணுப்பார்கள்...
  • தாங்கள் நேசிப்பவர்களை விட, யாரிடம் பயம் ஏற்படுகிறதோ அவர்களையே எல்லாரும் சகித்துக் கொள்கிறார்கள்...
  • புதிதாக ஒரு வழியைக் கண்டுபிடித்து அதற்காக வாழ்ந்து மறையும்வரை, பழைய வழி இருக்கத்தான் செய்யும்...
  • நமக்குள்ளேயே அமைதியைக் காண முடியாத போது, அதை வேறிடத்தில் தேடுவது பயனற்றது... 

நன்றி...

என்றும் உங்களுடன்...
நமது தொழிற்களம்...

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்