Ads Top

பிளாஸ்டிக்கை பயன் படுத்தலாம் வாங்க...!

" பிளாஸ்டிக்கை  பயன் படுத்தலாம் வாங்க...!" என்ற வாசகத்தினை சோமு தாத்தா படித்ததும் பேரன் நங்கு முத்து விழுந்து விழுந்து சிரித்தான், " தாத்தா உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சு போச்சா, அரசாங்க ஆளுங்க கேட்டாங்க உங்கள பிடிச்சுட்டு போய்டுவாங்க " என்றான்.

  " ஏலேய், நங்கு முத்துன்னு பேரு வச்சதுக்கு பதிலா, நொங்கு முத்துன்னு பேரு வச்சுருக்கணும்.சரி , விசயத்திற்கு வாரேன் " என்றார் சோமு தாத்தா.

  பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்று அரசு குயிலாய் கூவுகிறது, நீயோ பயன் படுத்தலாம் வாங்க என காக்கையாய் கரைகிறாயே என்கிறீர்களா... 

  மாற்றம் ஒன்றே மாறாதது, வாருங்கள் மாற்றம் காண்போம்.

  இன்றைய இந்தியாவில் பெரும் பிரச்சனைகளில் ஒன்று " பிளாஸ்டிக் ". அதனை எந்த விதத்தில் ஒழிப்பது என்பது தான் குதிரைக் கொம்பு.. சிலர் தீயிட்டு அழிகின்றார்கள், அவர்கள் அழிக்கவில்லை,அழைக்கிறார்கள் நோயினை, கரிய அமில வாயு என்னும் அரக்கன் வழியாக, அறிந்தும் அறியாமலும்...

  மறு சுழற்சி செய்யும் முறை இந்தியாவில் மிக குறைவு தான். குப்பை பொறுக்குபவர்களை, சூழலை காப்பவர்கள் என்பார்கள். அங்கே தான் இருக்கிறது மிகப் பெரும் அதிர்ச்சி. 

  அவர்கள் சேகரிக்கும் குப்பைகளை நேரடியாக காயலான் கடையில், போடுகின்றார்கள். அவர்கட்கு எதனை எந்த முறையில் அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்ச்சி இல்லாத காரணத்தால் சூழலை கெடுக்கிறார்கள். 

எ.கா : பழைய டயர்களை எரித்து, இரும்பு கம்பிகளை எடுப்பது. எத்தகைய ஆபத்தான காரியம் இது, அவர்கள் அறிவார்களா, விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டிய அரசோ சாராயக் கடை நடத்துகிறது. என்னத்த சொல்ல...

பசுமை வீடு கட்டிக் கொடுக்கப் போகிறார்களாம், இவர்கள் பசுமை இல்ல விளைவு பற்றி அறிவார்களா... ( பச்சை நோட்டுகளை தவிர வேறு என்ன தெரியும், சிலர் மட்டுமே விதி வி(ள)லக்கு . )

 ஏற்கனவே, உலக நாடுகளின் குப்பைத் தொட்டியாக ஆகிவிட்டார்கள். வேண்டாத கப்பல்களை உடைக்கும் தொழிற்ச் சாலை, அது மட்டுமா, சைனா போன்ற நாடுகள் மருந்துப் பொருட்கள் என்ற பெயரில் குப்பைகளை இந்தியாவிற்கு மிகப் பெரும் கொள்கலனில் அனுப்பி வைக்கின்றனர்.

 இதற்க்கெல்லாம் என்ன மாற்று வழி இருக்கிறது...? பிளாஸ்டிக்கை பயன் படுத்தலாம் வாங்கன்னு அழைத்து விட்டு அதை பற்றி ஒன்னுமே சொல்ல வில்லை என்று கோவம் வேண்டா .

சோமு தாத்தா, நங்கு முத்துவிற்கு ஒரு தேர்வு வைத்தார் உங்களுக்கும்தான்  , கீழே இருப்பவர் யார் என்று நீங்கள் யோசியுங்க. சோமு தாத்தா நாளையும் வருவார், காத்திருங்கள்
யார் என்பது தெரிந்தால் கருத்துரையில் தெரிவியுங்கள் . நாளை தெளிவாய்  பார்க்கலாம் 
/*
வாங்க வாங்க , . எல்லாரும் இனிப்பு எடுத்துக்கோங்க . 

இன்று எனது பிறந்த நாள் , 

காலையிலே சொல்லலன்னு கோவப் படாதீங்க
இப்படிக்கு 
பிறந்த நாள் குழந்தை 
செழியன் 

*/2 comments:

  1. அண்ணா , உங்களுக்கு தெரியாம இருக்குமா, நன்றி , விரைவில் அடுத்த பதிவு

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.