தயாராக இரு தோட்டா உன்னையே தாக்கலாம் - மனதோடு விளையாடு-4

ஆழ்மனதுடன் ஆடும் ஒரு கண்ணாம்பூச்சி விளையாட்டு மனதோடு விளையாடு.

      உங்கள் எண்ணங்களே செயல்களாய் உருவாகி உங்களது வெற்றியினை தீர்மானிக்கின்றன என்பதினை தொடர்புபடுத்தி இந்த தொடர் வலைபதியப்பட்டு வருகிறது

ஆழ்மனதின் அற்புதங்களை  உணர்ந்து கொண்டால் உங்களது  வெற்றியின் தொலைவானது இருமடங்காக குறைக்கப்படும்    

உங்களை சுற்றி உள்ளவர்களின் எண்ண ஓட்டங்களை புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளும் போதே உங்களது ஆளுமை பண்பானது பன்மடங்காகிறது

தொழில்முனைவோர்கள் யாவரும் இந்த ஆளுமை பண்பின் தலைவர்களாய் இருக்க வேன்டியது மிகவும் அவசியம்.

கொஞ்சம் ஆழமாக பார்ப்போம்,,,

      உலகில் வளர்ந்த நாட்டுகள் மட்டும் அல்லாது சிறு குறு நாடுகளும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்ச்சனையாவது, "வந்தேறிகளை ஒழித்தல்" எனப்படும் மனோவியல்  யுத்தமாகும். கடந்த இருபது வருடங்களில் இந்த மனோவியல் யுத்தத்தை சப்தம் இல்லாமல் அனைத்து நாடுகளும் ஊக்குவித்துகொண்டு தான் வருகின்றன.

இதன் படி, சொந்த நாட்டை விட்டு அகதிகளாகவோ அல்லது  வேலைவாய்ப்புக்காகவோ தம் நாட்டில் தங்கியிருப்பவர்களை "வந்தேறிகள்" என்கின்றனர். தங்கள் நாடு எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் இனபோராட்டத்தை முடக்குவதற்காக ஆரம்பத்திலேயே கிள்ளி எரிந்துவிட வேண்டும் என்றே அனைத்து நாடுகளும் விரும்புகின்றன. இந்த வருங்கால போராட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக இப்பொழுதிருந்தே தங்கள்  நாட்டு மக்களின்  மனதில் ஆழமாக மனோவியல் யுத்தத்தை  விதைத்து வருகின்றன.

     ஒவ்வொரு குடிமகனிடமும் நாட்டின் மீதான பற்றுதலை விதைக்கும் சாக்கில் எதிரிகள் மீதான வெறுப்பை பிறந்த குழந்தைகள் முதற்கொண்டு  அவர்களின் மனதில் பதியவைத்து   வருகின்றது.

எதிரியை சூழ்ச்சியாலோ அல்லது கொடுமையான முறையிலோ வெல்லும் போது தம் மக்களிடையே எதிரிகள் மீது பரிதாபம் ஏற்பட்டு விடக்கூடாது  என்பதற்காகவும் அதனால் தங்களது உள்ளாட்டில் குழப்பங்கள்   அந்த சமயத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், "தம் மக்களிடையே படிப்படியாக தங்களது பிற்கால எதிரிகளாக நினைப்பவர்களை பற்றி மோசமான புரிதல்களை விதைத்து வருகின்றன".


      பொதுவாக மக்கள் விரும்பும் சாதாரண விசயங்களில் இருந்து இந்த மனோவியல் போரை விதைக்கின்றனர். திரைப்படங்கள், விற்பனை பொருட்கள், வேலையில்லா திண்டாட்டம், வேண்டுமென்றே உள்நாட்டில் கலவரங்களை வளர விடுதல் போன்ற கொடுஞ்செயல்களை செய்து வருகின்றன.

பள்ளி பாட புத்தகங்களில் கூட இத்தகைய இன எதிர்ப்பு மனோபாவத்தை வளர்ப்பதில் முனைப்பாய் உள்ளன இத்தகைய நாடுகள். 

ஒருவரின் ஆழ்மனதை கட்டுப்படுத்தி அதில் நம் எண்ணங்களை விதைப்பதின் மூலமாக அவரை நம் கட்டளைகளை செயல்படுத்தும்படி ஆனையிட முடியும் என்ற கோட்பட்டை இத்தகைய நாடுகள் ஏன் அனைத்து நாடுகளுமே செய்கின்றனர்.

இன்னும் புரியும்படி சொல்லப்போனால், உள்ளூர் அரசியல கட்சிகளை எடுத்துக்கொள்ளுங்களேன்! அவர்களின் மகுடிக்கு ஏற்ப தொண்டர்கள் செயல்படுவதை கவனியுங்கள்.  ஒரே வடிவத்தை அவர்கள் மனதில் பதியவைத்து அபிரிவிதமான நம்பிக்கையை மனதில் விதைத்து விடுவார்கள். கொடிகள், துண்டு, பேனர்கள் என்று அனைத்திலும் அவர்கள் ஒன்று பட்டவர்கள் என்று பெரும் "கூட்டத்தினர்கள் அனைவரின் மனதிலும் தனது சின்னத்தையோ அல்லது வண்ணத்தையோ பதிய வைத்து விடுகின்றனர். இதன் மூலம், தாங்கள் அனைவரும் ஒரே விதமான பழக்கத்தை கொண்டவர்கள். தனிப்பட்ட நான் விரும்பும், ஈடுபடும் செயல்களையே  என் தலைவனும் எண்ணுகிறான். ஆக, அவர் சொல்லில் உண்மை இருக்கிறது ஏனென்றால் நான் உண்மையானவன்" என்ற மனோபாவத்திலேயே தான் பெரும்பாலான தொண்டர்கள் செயல்படுகின்றார்கள்.

    ஒரு திரைப்படத்தில் பெரும் சவான முயற்சியின் பின் எந்த ஒரு தொண்டரிடமும் வாக்குமூலம் வாங்க முடியாத காவல் உயர் அதிகாரி " இவர்கள் சென்டிமென்டல் இடியட்ஸ் என்பார், அதற்கு அவரின் உதவியாளர் ஒருவர் சொல்லும் வசனம் "தொண்டர்களை ஏமாற்றிய தலைவர்கள் இங்கே இருக்கலாம், ஆனால் தலைவனை ஏமாற்றிய தொண்டன் ஒருவன் கூட இங்கே கிடையாது". இவர்கள் வலிமையானவர்கள் என்பார். இப்படியாக, தங்கள் விரும்பும் ஒரு விசயத்தை விரும்பும் ஒருவர், அவர் விரும்பும் விசயமானது  என்னாலும் விரும்பப்படும்" என்றே எண்ணுகிறார். இதன் அடிப்படியில் தான் அனைத்து ஆழ்மன கோட்பாடுகளும் இயங்குகின்றன

   ஆழ்மனதில் விதைக்கும் கலை என்பதை மனோவியலாளர்கள் "பழக்கத்துடன் உருவாகும் செயல்கள் தான் ஆழ்மனதாகிறதுஎன்கின்றனர்.

பொதுவாக ஒருவரின் ஆழ்மனதை கட்டுப்படுத்தி எண்ணங்களை தூண்டும் வித்தையை தெரிந்தவர்கள் முதலில் அவர்களது பழக்க வழங்கங்களை குறி வைத்தே தனது வித்தையை செயல்படுத்த துவங்குகின்றனர்.

விற்பனை துறையில் சாதிக்கும் பிரதிநிதிகள் இந்த ஆழ்மன கலையை வேறு விதமாக கையாளுகின்றனர். அதாவாது ஒரு பொருளை வாடிக்கையாளர்கள வாங்குவதற்கு முன் அவர்கள் தங்களை அவர்களுக்கு பிடித்தமான நபராக காட்டிக்கொள்வார்கள், தனது வாடிக்கையாளர்களின் குணத்தை உடனடியாக கணிப்பதில் பயிற்சி பெற்ற அவர்கள் தம் வாடிக்கையாளருக்கு எது பிடிக்குமோ அதை தானும் விரும்புவதாக செயலிலோ அல்லது பேச்சிலோ மறைமுக தெரிவித்து விட்டு அவர்களுடன் நட்பாகிவிடுகின்றனர்.  

ஒரு பொருளை விற்பதற்கு முன் ஒரு விற்பனை பிரதிநிதி தன்னை விற்பனை செய்துவிட வேண்டும்"  என்ற கோட்பாட்டின் கீழ் தம் வாடிக்கையாளர்கள் மனதில், தன் சிந்தனை அவரின் சிந்தனையுடன் ஒன்றுகிறது. ஆக, தான் சந்தேகிக்கும் அல்லது விரும்பும் விசயத்தில் இவரால் (பிரதிநிதியால்) ஆலோசனை தரமுடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கி விடுவார்கள். அதன்படி தான்  வாங்கும் பொருளை வெளி மனதிற்கு பிடிக்காதிருக்கும் போதும் ஆழ்மனதானது வாங்கிட சொல்லி கட்டளை போட்டு வாங்கிட தூண்டிவிடுகிறது. பிரதிநிதிகளும் தங்கள் விற்பனையை வெற்றிகரமாக செய்து முடித்துவிடுவார்கள்.

ஜார்ஜ்ன் நண்பர் ஒருமுறை சந்தேகம் கேட்டார், "ஜார்ஜ் எப்பொழுதும் நீங்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் பொழுதும் இலக்கை துல்லியமாக சுடுவதில் முனைப்புடன் இருப்பீர்கள், பயிற்சி செய்யும் இடத்தில் உங்கள் தோட்டா வெளியேறும் சப்தத்தை தவிர வேறு எந்த இடையூறும் இருக்காது ஆனால்   போட்டிகளில் பங்கேற்கும் போது மிகுந்த  ஆரவாரம், பதற்றம் அனைத்துமே இருக்குமே இந்த பயிற்சி உங்களுக்கு எப்படி வெற்றியை தருகிறது? அந்த புதுவிதமான சூழ்நிலையில் உங்கள் இலக்கை சரியாக வீழ்த்த எப்படி முடிகிறது?" என்றார்.ஜார்ஜ் சிரித்துக் கொண்டே சொன்னார்.

     சூரிய ஒளியை மையபடுத்தி கான்பிக்கும் பொழுது ஒரு குவியாடியால் எவ்வாறு நெருப்பை உண்டாக்க முடிகின்றதோ? அதே போல், இலக்கை தீர்மானிப்பதில் பரப்பளவை சிறிதாக்கி பார்க்கும் மனப்பான்மை பழக்கத்தை என் மனது பழக்கப்படுத்தி கொண்டது. என் பயிற்சியின் போது இதைத்தான் பழகுகிறேன். 

தவிரவும், என் விரல்கள் மூளை, கண் மூன்றுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்திக் கொண்டு அன்னிச்சை செயல்களுக்கு கட்டுப்படும் விதம் தொடர்ந்து என்னால் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.

       எவ்வளவு பெரிய கூட்டத்தின் மத்தியிலும், என் ஆழ்மனது அன்னிச்சையாக எனது இலக்கை மட்டுமே சரியாக சுடுவதற்கு பழக்கப்படுத்தி கொண்டுள்ளது. நான் பயிற்சி எடுப்பதில்லை மாறாக பழக்கமாக ஆக்கி கொள்கிறேன். எப்படி கொட்டாவி வந்தால் கை வாயை மூடிக்கொள்கிறதோ? அதே போல் தான் சுடு என்று கட்டளை வந்ததும் என் விரல், புத்தி, கண் மூன்றும் இலக்கை மட்டும் மையப்படுத்த பழகிவிட்டன" என்று பதிலளித்தார்.

Comments

  1. நல்ல விளையாட்டு... அறிந்து கொள்ள வேண்டிய விளையாட்டு...

    ReplyDelete
  2. பயனுள்ள விளையாட்டு தொடர்ந்து விளையாடுவோம் நன்றி....

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்