தொலைக் கட்டுப்பாட்டில்(remote control) இயங்கும் கார்!

 

 Screenshot from an ad for the BYD Su Rui

 
கார்களுக்கும் தொலை கட்டுப்பாடு(remote control) இருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். தூரத்தில் இருந்து விளக்குகளை  இயக்குவதை  ஒலி எழுப்ப வைப்பதை பார்த்திருப்பீர்கள். இந்த தொலைக் கட்டுபாட்டை கையில் வைத்துக் கொண்டு கார்களை  தூரத்தில் இருந்து இயக்கி தங்களுக்கு அருகில் கொண்டு வர முடியும், காருக்குள் ஏறும் முன் அதன் குளிர் பதனப் பெட்டியையும் வேப்பமேற்றியையும் கூட இயக்கத்துக்கு  கொண்டு வர முடியும். சீனாவின் கார் தயாரிப்பாளரான பைடு தனது சு ருய் காரில் இந்த வசதியை உருவாக்கி இருக்கிறது. காரை இப்படி 33 அடி தூரத்தில் இருந்து நகர்த்த முடியும். அப்படி நகர்த்தும்  போது அதன் வேகம் வெறும் 1.2 மைல்கள் மட்டுமே  இருக்கும்.  ஆனால் காருக்குள் ஒரு வாகன ஓட்டி இருப்பது போலவே திருப்பவும் பின் நோக்கி நகர்த்தவும் முடியும்.

ஒரு சிறிய செய்தி. நான் இப்போது ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வெளியூர் வந்துள்ளதால் அதைப் பற்றிய பதிவுகளும் வழக்கமான பதிவுகளும் நான் திரும்பியவுடன் தொடரும். நன்றி.

Comments

  1. புதுமையான தகவல்களுக்கு நன்றி....பைடு அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்