Ads Top

சாவி மட்டும் கையில் இருந்தால் போதாது - மனதோடு விளையாடு-3

எந்த விசயத்தையும் தீர ஆராயமல் ஒரு முடிவுக்கு வந்துவிடுவது, வெற்றியை தக்கவைப்பதில் பெரும்பாலானோர் செய்யும் அடிப்படை தவறுகளில்  முதன்மையானது ஆகும்.

நீங்கள் அடிக்கடி பதற்றத்துடனே உள்ள சூழ்நிலைகளை அடங்கிய பணி செய்பவரா/?

     அதாவது காய்கறி சந்தை, பேருந்து நடத்துனர் உத்யோகம் போன்ற அதிகமான மக்களை, நேரடியாக சந்தித்திக்கும் தொழில் செய்பவராக இருந்தால் உங்களுக்காக இந்த பதிவு சில ஆலோசனைகளை தரும் என நம்புகிறேன்.

வெவ்வாறான சூழ்நிலைகளில் வாழ்ந்து பழகக்கூடிய பக்குவம் மனிதனுக்கு மட்டுமே உரிய உயரிய தன்மை. 

ஆம், ஆப்பிரிக்காவின் இருண்ட காடுகளிலும், அண்டார்டிகாவின் பனி பிரதேசங்களில்,  இந்தியா போன்ற வெப்ப நாடுகளிலும், இந்தோநேசியா போன்ற கடல்சார் சீதோசன நிலைகளும் தன் காலை பதித்து வெற்றி கண்ட ஒரே உயிரினம் மனித இனம்  தான். 

"உலகின் எந்த  சூழ்நிலையையும் சமாளிக்கும் சக்தி மனித உடலுக்கு எப்படி உள்ளது?"

"அண்டார்டிகாவின் பனிகரடியால் ஏன் மற்ற பகுதிகளில் வாழமுடியவில்லை? "


     ஓவ்வொரு மனிதனின் உள்ளத்தின் வெளிப்பாடும் அவனுக்குள் பல வேதியியல் (கெமிக்கல்) மாற்றங்களை உண்டு பன்னுகிறது. உலகின் பிரபலமான அனைத்து மனோதத்துவ ஞானிகளும் இந்த வேதியல் மாற்றங்களை பற்றி முழுமையாக புரிந்து வைத்துள்ளனர். அவர் அவர் இருப்பிடத்திற்கு ஏற்ப இந்த வேதியல் மாற்றத்திற்கு ஒரு பெயரை வைத்து விட்டு வைத்தியம் பார்க்கின்றனர்,  அவ்வளவுதான்.

      குழந்தைகளுக்கு காய்ச்சலை குணமாக்குவதற்காக, முன்டாசு பனியான் போட்ட ஒரு தாத்தாவோ அல்லது வேறு இடங்களிலோ ஒரு துண்டை விசிறி விடுவார்களே அந்த வில்லேஜ் விஞ்னானிகளுக்கும் தெரியும் இந்த வேதியல் வித்தை.

உங்கள் மனதில் எழும் ஆழமான நம்பிக்கை என்பது வேதியல் மாற்றமாக மாறி, உடனே அந்த நம்பிக்கையை செயலுக்கு கொன்டு செல்ல உங்களை தூண்டுகிறது. உண்மையில் குழந்தைகளுக்கு சிரகடிச்சு தாயத்து கட்ட போகும் போது அந்த கை வைத்தியர்கள் சேயின் தாய் குழந்தையை கையில் வைத்தால் மட்டுமே மந்திரிக்கும் வித்தையை செய்துகாட்டுவார். தாய் தன் குழந்தைக்கு பூரண நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை பெற்றதுமே அதன் எண்ண வெளிப்பாடு குழந்தையை சென்றடைந்து விடும். ஏனென்றால் குழந்தை அதிகமான நேரம் தாயின்  தொடுதல்களில் தான் வளர்கிறது.

ஆக, மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையில் ஒரு காந்த புலம் போன்றதொரு வீச்சு செயல்படுகிறது என்பது தெளிவாகிறதல்லவா?

    மேலே, கூறியவாறு உங்கள்  பணி அதிகமான மக்களிடம் நேரடியாக சந்திக்கும் படி இருந்தால் மிகவும் சந்தோசப்படுங்கள்.

ஆம், உங்களுக்கு சோர்வு எளிதில் வராது. மேலும் மாரடைப்பு போன்ற நோய்கள் உங்களை கண்டால் கொஞ்சம் பின்வாங்கி ஓடும் என்கிறது மனோவியல்.

காரணம், கூட்டமாக மனித எண்ணங்களினால் ஏற்படும் அந்த காந்த புலமானது உங்களுக்குள் ஒரு சிக்கலான சந்திப்புகளை ஏற்படுத்துகின்றன. தினமும் முன் பின் தெரியாத பலருடனும் உங்களுக்கு நெருங்கி பழகும் சூழ்நிலையில் உங்கள் மனோ சக்தியானது மன உறுதியாக மாற்றம் பெற்று விடுகிறது.

"காந்த விசை கோடுகள் ஒன்றோடு ஒன்று வெட்டிக்கொள்ளும் போது எப்படி மீன்சாரம் பிறக்கிறது?" என்ற சைக்கிள் டையனமோவின் கோட்பாடின் போல உங்களை சுற்றி உள்ளோரின் மனோ சக்தி உங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

        உங்களால் உங்கள் மனதிற்கு, பதற்றப்படாமல் முடிவெடுக்க வைத்திடும் பயிற்சியை சிறப்பாக கொடுக்க முடியும் என்றால் சாவி தேவைப்படாது உங்கள் கதவினை திறக்க,

      ஒருமுறை தமிழகத்தின்  தென்பகுதியை ஆண்டுவந்த மன்னன் ஒருவனுக்கு தன் அரண்மனையில்  உள்ள அமைச்சர்களில் யார் திறமைசாளி என்று தேர்ந்தெடுக்க இந்த முறை பயன்பட்டது.

பல வாருடங்களாக புத்தியிலும், அனுபவத்திலும் சிறந்த தனது மூன்று அமைச்சர்களில் ஒருவரை தலைமை அமைச்சராக பொருப்பளிக்க வேண்டும். மூவரும் அனைத்து திறமைகளிலும், சரி சமமானவர்கள் என தங்களை  அனைத்து போட்டிகளிலும் நிருபித்து காட்டியாகிவிட்டனர். இந்த இறுதி  போட்டியிலாவது ஒருத்தர மற்றவர்களை விட தான் திறமைசாலி என நிருபிப்பாரா என மன்னனுக்கு ஆவல்.

      போட்டியின் படி, ஒரு பெரிய கனமான இருப்பு பெட்டி. அழகிய வேலைபாடுகளுடன் இருந்த அந்த கனமான பெட்டியில் மேற்புறம் மூடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இருபத்தி நான்கு சாவி துவாரங்கள் அதன் மூடியில் இருந்தது. 

மன்னன் ஐம்பது  சாவிகள் கொண்ட சாவி கொத்தை கொடுத்து முப்பது நிமிடங்களுக்குள் இந்த பெட்டியை திறப்பவரே தலைமை அமைச்சர் என்று கூறி விட்டார்.    முதலில் சாவிகொத்தை கையில் வாங்கிய அமைச்சர் அனைத்து சாவிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக நுழைத்து பார்த்தார். ம்ம்ம்  கூம்
வேலைக்கே ஆகல, நாற்பத்தி ஐந்தாவது சாவியை நுழைப்பதற்குள் நேரம் முடிந்து விட்டது.

       இரண்டாமானவோ இன்னும் ஒரு படி மேலே, ஐம்பது சாவியையும் மற்றி மாற்றி விட்டு  பார்த்தார் ஆனாலும் துவாரங்கள் ஏனோ ஒத்துழைக்கவே  இல்லை, தன் நேரம் முடிவதற்குள்ளாகவே பின்வாங்கி விட்டார்.

மூன்றாமானர் எந்த பதற்றமும் இல்லாமல் சாவி கொத்தை கையில்  வாங்கினார். ஒரு நிமிடம் முழுமையாக அந்த பெட்டியை பார்த்தார். உடனே தன் கையில் இருந்த சாவி கொத்தை தரையில் வீசி விட்டார்.

ஆம், அந்த பெட்டி பூட்டப்படவில்லை.

மிகவும் எளிதாக பெட்டியை திறந்தார்.

      எந்த சூழ்நிலையிலும் பதற்றப்படாத பக்குவத்தை உங்கள் மனதிற்கு சொல்லி தந்திருந்தீர்கள் எனில் இனி நீங்கள் தான் தலைமைக்கு தகுந்த நபர்.

உங்கள் தொழிலில் வெற்றியாளராக மாற இந்த தலைமை பண்பு மிக அவசியம்.

தொடர்ந்து விளையாடுவோம்.

மற்ற மனதோடு விளையாடு முந்தைய பதிவுகளை வாசிக்க லேபிலை உபயோகிக்கவும்

6 comments:

 1. சூப்பர் ஸ்டோரி அருனேஷ்.. எந்த சூழ்நிலையிலும் பதற்றப்படாத பக்குவத்தை குறித்த நல்ல கருத்துக்கள் செறிந்த பதிவு

  ReplyDelete
 2. நிதானம் சிறந்த தானம்...

  நல்லதொரு உதாரணத்துடன் கூடிய பதிவு அருமை...

  நன்றி...

  ReplyDelete
 3. உண்மையிலும் உன்மைதான் ஆழ்மன நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

  ReplyDelete
 4. நம்பிக்கை தான் ஒரு மனிதனுக்கு சிறந்த தைரியம்.நல்ல தகவலுடன் உங்களுடைய பதிவு சூப்பர்

  ReplyDelete
 5. மிக ஆழமான கருத்துக்களை கொண்ட பதிவு , நன்றி

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.