அறிந்த காரியத்தில்___மவுனம் காப்போம்.


 அது ஒரு அழகிய நீண்ட சாலை, லேசாக தண்ணீர் தெளித்து அப்படியே சோறு சாப்பிடலாம் என்பார்களே...! அப்படிப் பட்ட தெளிவான சாலையில் ஒரு நான்கு சக்கர வாகனம் அதி வேகமாய் வருகின்றது.

  திடீரென்று ஒரு காவலர் நிறுத்துமாறு சைகை காட்டுகிறார். அந்த வாகனம் க்க்ரீச்ச்.... என்ற சப்தத்துடன் நிற்கிறது, ஓட்டி வந்தரோ கைக் குட்டையில்( அதாங்க,  கர்சீப் ) உடை தைத்தரோ என்ற வியப்பில் இருந்து காவலர் மீள்வதற்குள், நீங்களும் தான்.... 

  சுதாரித்துக் கொண்டு ஒரு சிறு கைப் புத்தகத்தினை எடுத்து வந்தார். வாகனத்தை ஓட்டி வந்தவரின் பெயரையும், வாகன எண்ணையும் குறிப்பெடுக்க.

  அதற்குள் அந்த நவ நாகரீகப் பெண் அவசரமாய் அதனைப் பிடுங்கி, தன் கை எழுத்தை போட்டு விட்டு சென்றார்.


  காவலருக்கோ குழப்பம், ஏன் உங்களுக்கும் இருக்கும், காரணம் அந்தப் பெண் ஒரு நடிகை. 

  தன்னிடம் கை ஒப்பம் பெறவே நிற்கிறார் என்று தானே நினைத்துக் கொண்டு கை ஒப்பம் இட்டு அவர் போய் விட்டார்.

இப்படிதாங்க...

 எங்க உறவுக்கார பெண்மணிகளுக்கு இடையே நடந்தது. இரண்டு பேரும் மதினிமார்கள். சின்ன மதினி புதுசா ஒரு வீடு வாங்கிருந்தாங்க, பெரிய மதினிய  அவங்களுக்கு பிடிக்கவே செய்யாது, அதுமட்டும் இல்லாம காது வேற சரியாய் கேட்காது.

 எப்போதும் பெரிய மதினிய திட்டிகிட்டே இருப்பாங்க. அடிக்கடி அவங்களா எதாவது நினைச்சுக்கிட்டு யார்கிட்டயாச்சும் சண்டை போடுவாங்க. அப்புறம் சமாதனம் ஆகிடுவாங்க.

ஒரு நாள்...
 அவங்க மாமியார் கிட்ட போய், "அவா நா வாங்கிருக்க வீட்ட பெருக்கி வாடகைக்கு விடுன்னு சொல்றா, அவா யாரு அப்டி சொல்ல, அதும் என் வீட்ட பத்தி" அப்டின்னு சொல்லிட்டாங்க.

 மாமியார் நேரா சின்ன மதினி வீட்டுக்கு போய்  ஏண்டி, நீ அப்டி சொன்னியான்னு கேட்க, அவங்களோ, சடார்னு பத்ரகாளியா மாறி சொன்னுச்சு " எனக்கு ஒன்னும் அப்டி பேச தேவை இல்லன்னு "

   இத தெரிஞ்ச சின்ன மதினி, அப்புறம் ஒன்னும் வாய தொறக்கல.

இப்பேர் பட்ட ஆட்கள, எங்க ஊர்ல " தானே கோட்டை கட்டி,தானே இடிச்சாலாம் கொம்பு முளைச்சவ" என்று சொல்லுவாங்க.

" அறிந்த காரியத்தில், அறிவாளியாய் இருப்போம், அறியாத காரியத்தில் மவுனம் காப்போம் "

இதையும் படியுங்கள் தொழிற் களத்தில்...

1. 1952-ம் தொழிற் களமும்
2. எங்கேயும் எப்போதும் 

                                                   நன்றி
                                                                  செழியன் 

Comments

  1. உங்க ஊர்லே நல்லாவே சொல்லி இருக்காங்க... நல்ல கருத்து...

    ReplyDelete
  2. அண்ணாச்சி, திருநெல்வேலி-ன்னா சும்மாவா,நன்றி

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்