Ads Top

மனித ஒட்டுண்ணிகள் ...???

" ஒட்டுண்ணிகள் என்பது...ஒட்டுண்ணிகள் என்பது... " என்று மனப் படம் செய்து கொண்டு இருந்த பேரன் நங்குமுத்துவை பார்த்து சிரித்தார் சோமு தாத்தா . 

 சோமு தாத்தா பேரன் படிக்கும் அழகை ரசித்து சிரித்தாரா,அல்லது தனது பள்ளிப் பருவத்தை எண்ணினாரா என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம். 

 செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த எனக்கு அதை பார்த்ததும் ஏதோ உறுத்தியது.

 ஒட்டுண்ணி என்பது என்ன? விலங்கினங்களின் உடலில் ஒட்டிக் கொண்டு அதனைச் சார்ந்தே தன் உணவை உண்டு அங்கே வாழும் ஒரு சிறு உயிரினம். 

 சில சமயம் மனிதர்களில், சிலரும் அப்படி இருக்கிறார்களே, நீங்கள் கவனித்ததுண்டா? அலுவகம், வீடு, சமூகம் இவைதாம் இவர்கள் வாழும் இடங்கள். 

  இதுவரை அறிந்தது இல்லையா, ஆராய்ந்து பாருங்கள், உங்களைச் சுற்றிலும் இருப்பார்கள். கொஞ்சம் முன்  எச்சரிக்கையோடு இருப்பது நலம். இப்படி தாங்க...

  என் நண்பன் வீட்டில் இருந்து தான் வருவான் கல்லூரிக்கு.(நாங்க மட்டும் என்ன காட்டுல இருந்தா வாரோம்னு கேட்கப் பிடாது சொல்லிட்டேன்) எங்கள் நட்பு வட்டத்தில் சிலர் விடுதியில் தங்கி இருந்தனர். அவர்களில் சிலர் படிப்பது, எழுதுவது என்று ஆசிரியர் ஏதாவது வேலை கொடுத்தால் அவர்கட்டு பிறர் உதவி தேவைப் படும் 

 அந்த நண்பனோ, ஓடி ஓடிச் சென்று அவர்கட்டு உதவி செய்வான், காலப் போக்கில் விடுதி வட்டமோ, கடைந்து எடுத்த சோம்பேறிகள் ஆகிவிட்டது.
எதையுமே அவர்களாக செய்வது இல்லை, யாரையாவது வேலை வாங்குவது, ஆனால் தானோ, மடிக் கணினியில் படம் பார்ப்பது. கதை எப்படி போகிறது பாருங்கள்.

  இந்த லட்சணத்தில், அந்த நண்பன் ஏதாவது, குடும்ப வேலையின் நிமித்தம் வர முடியவில்லை என்று சொன்னால் கோபப்பட வேற  செய்வாங்க. என்ன குசும்பு பார்த்திங்களா..

 அதுல ஒருத்தன் ஆள் நம்ம இடுப்புக்குத்தான் இருப்பான், அவன் இருந்தா இடமே சும்மா களைகட்டும், ஆனா அந்தோ பரிதாபம் மகா சோம்பேறி, அவனுக்கு தினமும், ஏன் பரீட்சை அன்று கூட சூரியன் 10 மணிக்கு தான் விடியும். என்ன செய்ய...

 நான் அவர்களை குறை சொல்லவில்லை, கற்றுக் கொள்ளாமல், கடமையை முடிப்பது என்பது தவறு தானே. இத்தனைக்கும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் திறமை வாய்ந்தவர்கள். 

இப்படி அடுத்தவர்களை வேலை வாங்கியே, வாழ்பவர்களை மனித ஒட்டுண்ணிகள் என்பதில் என்ன தவறு.

இந்த மாதிரியான ஆளுங்கள எங்க ஊர்ல
"தூங்கி தூங்கியே தூணை, துரும்ப்பாக்கிட்டான் துடுக்குப் பய " என்பார்கள்.

      கவிதை 

உதவி செய்திடு 
உன்னால் முடிந்தவரை...

உன்னை பிறர் 
உபயோகிக்கும் வரை அல்ல.

உன் உதவிகள் 
பிறரை உயர்த்தட்டும் 

உன் உறக்கம் தொலைத்து 
பிறரை உறங்கச் செய்திடாதே.

                      -செழியன் 

 சோமு தாத்தா சிரிப்பின் அர்த்தம் எனக்கு புரிந்தது, உங்களுக்கு...?

                                                              நன்றி 

6 comments:

 1. ஆ...! நன்றாக ஆரம்பித்து சிறப்பாக முடித்து விட்டீர்கள்...

  கவிதை வரிகள் கலக்கிட்டீங்க... சிறப்பான கருத்துக்கள்... பாராட்டுக்கள்...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 2. கவிதை நல்லா இருக்கு. மனித ஒட்டுண்ணிகள் பகிர்வும் நல்லாவே சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 3. நன்றி தன பாலன் அண்ணா, உங்கள் பாராட்டுதல் தான் என் போன்ற இள வட்டங்களுக்கு தேவை,

  ReplyDelete
 4. நன்றி சீனி அண்ணா , நம்ம சொந்த கவிதை தான்

  ReplyDelete
 5. நன்றி லட்சுமி அம்மா, நீங்கள் இப்போது கல்லிடைக் குறிச்சியில் தான் வசிக்கின்றீர்களா ?

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.