Ads Top

தொழிற்களத்தில் முதல் சதம் - " பெருமையுடன் ஒரு பாராட்டுவிழா!!"

நமது தொழிற்களம் பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம்! 

      தொழிற்களம் அறிவித்திருந்த உதவி ஆசிரியர் நியமன அறிவிக்கையின்படி, உதவி ஆசிரியர் பணிக்காக பலரும் விண்ணப்பித்து தங்களும் தொழிற்களத்தினூடே பயணித்து வருகின்றனர். அதன் படி ஒரு நல்ல குடும்பத்தை அடைந்ததில் தொழிற்களம் பெரும் மகிழ்வு கொள்கிறது. அண்ணன்களும், தம்பிகளும், அக்காக்களும், தங்கைகளும், அம்மாவும், ஆசிரியரும் கிடைத்ததில் ஒரு அளப்பரியாத சந்தோசத்தை வளர்த்து வருகிறது.

இதோ!! தொழிற்களம் அறிவித்தபடி தனது முதல் சதத்தை உங்களில் இளையவர் திரு.மோகன் சஞ்சீவன் அடைந்துவிட்டார்.

    அவரை பாராட்டி கெளரவிக்கும் விதமாக நமது மக்கள்சந்தை இணையத்தின் நிறுவனர் திரு.சீனிவாசன் அய்யா அவர்களில் தலைமையில் ஒரு சிறிய பாராட்டு விழாவே நடத்தப்பட்டது.

தேவியர் இல்லம் திருப்பூர் ஜோதிஜி அண்ணா அவர்கள் இந்த விழாவை சிறப்பித்து உற்சாகத்தை அள்ளி வழங்கினார்.  உடன் "நாஞ்சில் மதி"  திருமதி. மல்லிகா சம்பத் ( ஸ்ஸ்ஸ் இவங்களை யாருன்னு கேட்க கூடாது... ரகசியம் விரைவில்) மகுடம் சூட்டி வைத்தார். சமூக சிந்தனையுடன் சரவணா கலையகம் சரவணகுமார் அண்ணா போன்றோரும் மோகன் சஞ்சீவனுக்கு பாராட்டுதலை தெரிவிக்க வந்திருந்தனர்.

ஏற்புரையின் போது மோகன் சஞ்சீவன்

மக்கள் சந்தை சீனிவாசன் அவர்கள் பொன்னாடை போற்றி கெளரவித்த போது

சான்றிதழ், அடையாள அட்டை வழங்கியபோது

ஊக்கத்தொகையாக ரூ.3000 காசோலை வழங்கியபோது
சில நிமிடங்களில் விழாவை முடித்து கொள்ளவே திட்டமிட்டிருந்தோம். ஆனால், அண்ணன்கள் இவ்விழாவையே ஒரு உணர்ச்சி மிகுந்த தமிழ் கூட்டத்திற்கான ஆரம்பமாகவும், தொழிற்களத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பாதைகளையும் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர். விழாவில் நடந்த சில சுவாரசிய உரையாடல்களை தொகுத்து தருகிறோம்.

55 வயது இளைஞர் 45 நாட்களில் 100 பதிவுகளை கடந்து தொழிற்களத்தில் முதல் ஆளாக முன்னேறி வந்திருக்கிறார் என்றால் அவரை பாராட்டாமல் விட்டால் வரலாறு பிழையாகிவிடாதா..? 

  அறிவியலில் புதுமைகளை உடனுக்குடன் மெருகேற்றி எளிய தமிழில் தொழிற்களத்தில் பதிவதில் இவரின் சிறப்பை நீங்களும் கண்டிருப்பிர்கள். 

இதோ அடுத்த கட்டமாக தொழிற்களத்தில் சக பதிவர்கள் அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். 

15 comments:

 1. அட இவ்வளவு சீக்கிரமாவா? வாழ்த்துக்கள் ஐயா.. தொழிற் களத்தின் " சச்சின்" அறிவியலில் அடித்து ஆடும் மோகன் சஞ்சீவன் வாழ்க.. அவருக்கு பரிசளித்த அண்ணன், கருமை நிற கண்ணன் சீனி வாசனும் வாழ்க..

  அண்ணே நாம திராவிட் மாதிரி.. ஒரு ஆறு மாசத்துல CENTURY போட்ருவம்.. ஹி ஹி ஆனா நமக்கு பின்னால ஒரு பயபுள்ள இருக்கு.. (சீனு) ஒரு பதினெட்டு மாசத்துல CENTURY.ய முடிச்சுருவாப்ள..

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. //அண்ணே நாம திராவிட் மாதிரி.. ஒரு ஆறு மாசத்துல CENTURY போட்ருவம்.. ஹி ஹி ஆனா நமக்கு பின்னால ஒரு பயபுள்ள இருக்கு.. (சீனு) ஒரு பதினெட்டு மாசத்துல CENTURY.ய முடிச்சுருவாப்ள.. //

  தங்கம் அடிச்சு நொருக்கு/// (இந்த சீனு கூட) ஜோடி சேராதே.. ரன் அவுட் ஆக்கிடுவான்..

  ReplyDelete
 3. சதம் அடித்த திரு மோகன் சஞ்ஜீவனுக்கு வாழ்த்துக்கள்!

  மேலும் மேலும் சதம் அடித்து திரு ஹாரி சொல்லியது போல தொழிற் களத்தின் 'சச்சின்' ஆக வாழ்த்துக்கள்!

  அட்டகாசமான தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள் திரு சீனிவாசன் அவர்களுக்கு!

  யாரங்கே! இவரை மாதிரி சின்ன பிள்ளைங்க எல்லோரும் வந்து சீக்கிரம் வந்து சதம் அடியுங்க பார்க்கலாம்!

  நாங்க வயசாளிங்க எல்லாம் ஓரமா உக்காந்து ரசிக்கறோம்!

  ReplyDelete
 4. மோகன் சஞ்சீவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. :) ஒரு குட்டி 20-20 match பாத்தது மாதிரி இருந்தது இந்த பதிவையும், கருத்துரையையும் படிச்சதுக்கு அப்பறம்.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. Ellorudaiya parattukalukkum nanri. adutha sathathai nokki enathu payanam thodarkirathu. Idaividatha min vettu onru thaan idainjalaka irukkirathu

  ReplyDelete
 7. great.. thats right mr mohan sir is genious.we should learn abt sceince from mohan sir...thx.

  ReplyDelete
 8. ஹாரி - அப்போ உனக்கு இன்னும் ஆறு மாசத்துல பார்த்து விழா நடதிருவாய்ங்க, எனக்கு இன்னும் பதினெட்டு மாசமா அடேயப்பா.....

  // அவருக்கு பரிசளித்த அண்ணன், கருமை நிற கண்ணன் சீனி வாசனும் வாழ்க..// அண்ணே இந்தப் பயலுக்கு இருக்க கொழுப்பப் பாத்தியளா...

  மோகன் சஞ்சீவன் அவர்களுக்கு பாராட்டுக்கள், அவர் இன்னும் பல சத்தங்களைக் கடக்க வேண்டும் என்று வாழ்த்த வயதில்லாத காரனனத்தால் தலை வணங்குகிறேன்

  //தங்கம் அடிச்சு நொருக்கு/// (இந்த சீனு கூட) ஜோடி சேராதே.. ரன் அவுட் ஆக்கிடுவான்..// அண்ணே அவரு ரன் அவுட் அக்குனாலும் அடங்க மாட்டறாரு ஒன்னுக்கு மூணு நாலு தளம் வச்சிருக்காரு.....

  ReplyDelete
 9. இதோ!! தொழிற்களம் அறிவித்தபடி தனது முதல் சத்தை உங்களில் இளையவர் திரு.மோகன் சஞ்சீவன் அடைந்துவிட்டார்.
  // முதல் சத்தை என்று குறிப்பிட்டு உள்ளீர்கள், சதம் என்று தானே வரும், தொழிற் களத்தின் முதல் சதம் என்பதால் சத்து என்று சொல்கிறீர்களோ !! நானும் விரைவில் சதம் போடுகிறேன்

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் அய்யா.....

  ReplyDelete
 12. வணக்கம் தோழரே..விழா நடந்திருக்கு ஒரு அழைப்பே இல்லையே.அதுக்குள்ள மறந்துட்டீங்களா? ஹாஹாஹா..

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.