Ads Top

வித்தையை கற்று கொள்ள வேடிக்கையாளனாய் இரு - மனதோடு விளையாடு 2

வெற்றியாளர்கள் அனைவரும் இந்த விசயத்தில் மிக கவனமாக இருந்ததால் தான் தங்கள் வெற்றியை தக்க வைத்து கொள்ள முடிந்தது. ஆம், நாம் அனைவரும் ஏதாவது ஒரு சமயத்தில் வெற்றியை அடைந்து விடுகிறோம். ஆனால் பெற்ற வெற்றியை உணர்ந்து கொள்ளும் முன்பாகவே அதனை தொலைத்து விடுகிறோம்.

நிரந்தரமான வெற்றியை நீங்கள் அடைய துணைபுரிவது உங்கள் ஆழ்மனது மட்டும் தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்

உங்கள் மனது உங்களுடன் பேசும் வார்த்தைகளுக்கு மதிப்புகொடுங்கள். உங்களை வழிநடத்தி செல்ல முழு தகுதியும் அதற்கு உண்டு.
       விற்பனை துறையில் அனுபவமுள்ளவர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அவர்கள் பேசும் போது உங்கள் கண்களை தவிர அவர்களது பார்வை எங்கும் போகாது. அவர்கள் தனது விற்பனையை வெற்றிகரமாக முடிப்பதற்கு உங்கள் ஆழ்மனதுடன் பேசி விடுவார்கள். அல்லது புரிந்து கொண்டு  விலகி விடுவார்கள்.

         உங்கள் இலக்கு எது என்பதை தீர்மானித்த பின்பு மெதுவாக ஆழ்மனதுக்கு கட்டளை இட்டுவிட்டு அமைதியாகி விடுங்கள். உங்கள் வெற்றியை அது பார்த்துகொள்ளும். ஆனால் ஆழ்மனதுக்கு சொல்லும் போது கொஞ்சம் கவனமாக சொல்லுங்கள். ஏனென்றால் அது கணினியை விட பெரிய முட்டாள். நீங்கள் எதை சொன்னாலும் அதை அப்படியே பதிந்து  வைத்துக்கொள்ளும். எப்படின்னு தெரிஞ்சுக்க தென்னிந்தியாவில், அடுக்குமாடி கட்டிடங்களை சந்தித்திராத இந்த குக்கிராமம் உதவும்.

மாட்டு வண்டியினை மட்டுமே இது வரை போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த அந்த கிராமத்தில் நம்ம புது  மாடல் காரை விற்பனை செய்விட்டோமேயானல் இன்னும் அதிக அளவில் நிறுவனத்தின் மதிப்பு ஏறிவிடும் என்று நினைத்த அந்த கார் கம்பெனி தங்கள் நிறுவனத்தின் சார்பாக அனுபவம் வாய்ந்த விற்பனை பிரதிநிதி ஒருவரை தேர்ந்தெடுத்து அவ்வூருக்கு அனுப்பியிருந்தது.

அவரும் நிறுவனம் சொன்ன மாதிரியே அந்த ஊருக்கு போய், அங்குள்ள பெரிய மனுசங்களையெல்லாம் ஓர் இடத்துல ஒன்னா திரட்டி தங்கள்  கம்பெனியின்  புது மாடல் காரை பத்தி  தகவல் சொல்ல துவங்கினார்,

        " உங்கள் மாட்டுவண்டியில் அச்சானி, கொல்லன் கூலின்னு தனித்தனிய கொடுத்து ஏன் செலவு செஞ்சு காசை வீணாக்குறீங்க எங்க கம்பெனி காரை வாங்கி உங்க பயணத்தை எளிதாக்குங்க"

      " மேலும் பார்த்திங்கனா, இதுதான் சைடு மிரர் இதுல பின்னாடி வரவங்களை நீங்க திரும்பாமயே பார்த்துக்கலாம்"

      " இன்னும் சொகுசா, இடுப்பு  வலியே இல்லாம எங்க காரை வாங்குனா உங்க பயணம் ஜாலியா இருக்கும்னு"  அந்த ஊர் பெரிய மனுசங்க கிட்டே சாமர்த்தியமா பேசி எப்படியோ  அதிகமான கார்களை வித்துட்டார் அந்த பிரதிநிதி.

        மிகவும் சந்தோசத்துடன் அந்த கார்  கம்பெனி பத்திரிக்கையாளர்களை திரட்டிக்கொண்டு அந்த கிராமத்துக்கு போனாங்க..

அங்கே அவங்களுக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.

ஆம், தங்களின் புது மாடல் கார்கள் எல்லாம் அந்த கிராமத்தை அலங்கரிச்சிருக்கும்னு நினைச்சு போன நிறுவனம் அங்க கண்ட காட்சி என்ன தெரியுமா..?

       "அவர்கள் புது மாடல் கார்களின் முன் பேனட்டில் இருந்து பெரிய கயிறு இரு மாடுகளின் மூக்கனாங்கயிறுடன் இணைக்கப்பட்டிருந்தது". மேலும் ஒரே சேறும் , சகதியுமா காரின் வெளிப்புறங்கள் காணப்பட்டது.

மாட்டு க்கு பதிலா கழுதை தாங்க கிடைச்சுது,, ( ஒருவேளை குதிரையோ..? )

அதாவது அந்த  ஊர் மக்கள் காரை செலுத்த மாடுகளை உபயோகித்து இழுத்து சென்று வந்திருக்கின்றனர்.

வேடிக்கைக்காக சொல்லப் பட்ட  இந்த கதையை போல உங்கள் ஆழ்மனதுக்கு கொடுக்கப்படும் கட்டளை வார்த்தகளை இணைத்து பாருங்கள்.

நீங்கள் அந்த பிரதிநிதியாகவும், ஆழ்மனதானது ஊர் மக்களை போலவும் இருந்து விட்டால்...?

       உங்கள் ஆழ்மனதை கட்டுப்படுத்த நீங்கள் துணிந்து விட்டால் முதலில் அது செய்யும் வித்தைகளை வேடிக்கை பார்க்க கற்றுகொள்ளுங்கள். தானாக கட்டளை இடும் தகுதியை உங்களுக்குள் வளர்த்தி கொள்ள முடியும்

        உங்கள் இலக்கு என்ன என்பதை முதலில் தெளிவாக புரிந்துகொள்ளும் முன்பே வித்தைகாரனாக முடியுமா..?

தொடர்ந்து  விளையாடுவோம்..

4 comments:

 1. அருமையான கதை மற்றும் நல்ல தத்துவம், நன்றி

  ReplyDelete
 2. நல்ல பல கருத்துக்களுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 3. இப்ப அதுதானே செய்துகொண்டு இருக்கிறோம்...? அதான் (வேடிக்கை) பார்க்கின்றதை நன்றாக செய்கின்றோம்...? சரிதானே...?ஹி..ஹி...

  ReplyDelete
 4. உண்மையில் மிகசிறந்த கருத்துகள் விற்பனைத்துறை மட்டும் அல்லாது அனைவருக்குமான கருத்துகள் பாராட்டுகள்

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.