புது தில்லியில் இந்திய அறிவியல் தெரிவிப்பு பேரவை 2012 மாநாடு

கடந்த டிசம்பர் 17 முதல் 21 வரை புது தில்லியில் இந்திய அறிவியல் தெரிவிப்பு பேரவை 2012  மாநாடு(Indian Science Communication Congress 2012 conference)  நடந்தது. இதில் அறிவியல் தெரிவிப்பாளர் என்ற முறையில் எனக்கு அழைப்பு அனுப்பப் பட்டதையொட்டி நான் கலந்து கொண்டு அபாயத்தை வெகு ஜன ஊடகம் வழியாக தெரிவித்தல்(Communicating risk by mass media) மற்றும் நிலை நிறுத்தத் தக்க வளர்ச்சியில் அறிவியல் தெரிவிப்பின் பங்கு(Science communication's role in Sustainable Development)  என்ற இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை  சமர்ப்பித்தேன் .  முதல் ஆய்வுக் கட்டுரையில் டிசம்பர் 21 உலகம் முடியுமா என்ற எனது பதிவையும் அதில் சேர்த்து இருந்தேன். இந்த பதிவை ஏறக்குறைய 900 பேர் படித்து இருக்கிறார்கள்  இதற்கும் இதற்கும் அடுத்த கட்டுரைக்கும் நல்ல வரவேற்பு இருந்தது

இந்த மாநாடு இந்திய அறிவியல் கல்விக் கழக வளாகத்தில்(Indian National Science Academy campus) நடை பெற்றது. நாடு முழுவதிலும் இருந்து அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் தெரிவிப்பாளர்கள்,கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அனைவரையும் ஒரு சேர ஒரே இடத்தில் சந்தித்து கலந்து உரையாடியது மறக்க முடியாத அனுபவம். சில முக நூல் வழியான நண்பர்களையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்த ஆண்டின் மையக் கருத்தாக அபாயத் தெரிவிப்பு மற்றும் வளர்ச்சி(risk communication and development)எடுத்துக் கொள்ளப் பட்டு ஆய்வுக் கட்டுரைகளும், யோசனைகளும் முன் வைக்கப் பட்டன, இதில் ஒரு அமர்வுக்கு அறிவியல் சார்ந்த ஒரு நாடாளு மன்ற உறுப்பினரும் கலந்து கொண்டார்.

இதில் கூடங்குளம் அணு உலை -பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளும் கருத்துக்களும் தெரிவிக்கப் பட்டன. அறிவியல் தெரிவிப்புத் துறையில் சிறந்த பணியாற்றியவர்களுக்கும், சிறந்த ஆய்வுக்  கட்டுரையாளர்களுக்கும் பரிசுகள் மன்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

இதில் இருந்து எனது சில படங்களை கீழே காணலாம் எனது வெகு ஜன ஊடகம் வழியாக அபாயம் தெரிவித்தல் உரைக்காக மேடையில் இருந்த போது

உரையாற்றிய போது 
இந்தியா அறிவியல் கழக கட்டிடத்துக்கு வெளியே


மாநாட்டு பதிவு மேஜைக்கு முன் முகப்பில்

Comments

  1. உங்களது சாதனைகள் மிகவும் பாராட்டுக்குரியது. உங்களைப் போன்றவர்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும், மோகன்!

    மேலும் பல பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ரஞ்சனி மேடம்

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்