2015 இல் உலகை சுற்றப் போகும் சூரிய மின் சக்தி விமானம்!

 20121205-173327.jpg

 
முதன் முதலாக ஒரு சூரிய மின் சக்தி விமானம் 2015 இல் உலகை சுற்றப் போகிறது.   1999 இல் உலகை முதன் முதலாக பலூனில் உலகை சுற்றிய பெட்ரான்ட் பிக்கார்ட் இதை வடிவமைத்துள்ளார்.

சோலார் இம்பல்ஸ் என்றழைக்கப் படும் இந்த விமானத்தின் சிறப்பு என்ன என்றால் இது இரவிலும் பறக்கக் கூடியது. இதன் எடை குறைவான உருவாக்கமும் வலிமை மிகுந்த மின் கலன் திறனும் இதை சாத்தியமாக்குகிறது.

20121205-173404.jpg

2009 இல் இந்த மாதிரி ஒரு சூரிய மின் சக்தி விமானம் உருவாக்க வேண்டுமென்று பிக்கார்ட் நினைத்து அதை செயல் படுத்தவும் செய்தார். இந்த விமானம் 2010 இல் சுவிட்சர்லாந்து  நாட்டு மீது 26 மணி நேரம் 9 நிமிடங்கள் பறந்தது. இந்த வருடம் ஜூன் மாதம் ஸ்பெயின் நாட்டில் இருந்து மொராக்கோ நாட்டுக்கு போய் ஒரு சாதனை படைத்தது.
  

Comments

  1. தெரிந்து கொள்ளவேண்டிய தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்