டிசம்பர் 21, 2012 இல் உலகம் அழியுமா?
 

  
டிசம்பர் 21, 2012  இல்  உலகம் அழியுமா என்ற கேள்வி இப்போது  நிறையப் பேர் மனதில்  இருக்கிறது. பத்திரிக்கைகள் இணையம்  மற்றும் திரைப்  படங்கள் என்று  எல்லாம் சேர்ந்து எல்லோர்  மனதிலும்  ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.  என்னை  இது பற்றிக் கேட்கும்  இணைய  நண்பர்கள் நிறைய. இந்த  கேள்விக்கு  பதில் சொல்ல  பூவா தலையா ஒன்றும் போட்டுப் பார்க்கத் தேவையில்லை.   இதற்கு எப்போதும்  என் பதில் என்ன என்பதைச் சொல்கிறேன்

உலகம் அழியப் போகிறது என்று  மாயன் என்கிற ஆதி கால மிக்க வளர்ச்சி பெற்ற மக்கள்   தங்கள் தினத்தாளில் இந்த டிசம்பர் 21 இல் உலகம்  அழியும்
என்று  குறிப்பிட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்.  இது  போக நிபுறு என்கிற மர்மக் கிரகம் இருப்பதாகவும் அது  வந்து படார் என்று  பூமி  மேல் மோதி பூமி  பணால் என்று குலை நடுங்கச்  செய்கிறார்கள் .
 பூமியின்  வட தென்  துருவங்கள் மாறி எல்லோரும்  அதனாலும் காலி , சூரியனில் இருந்து சூரியக் காந்தப்  புயல் வீசி  தகவல் தொடர்பு  சாதனங்கள்இயங்காது , விண் கல் மோதி பூமியும் நாமும் சட்னி என்று அடுக்கடுக்காய் காரணங்களை சொல்லி  சரிதான் இந்த பூமியில் டிசம்பர் 21 ஓடு  நமது ஆட்ட பாட்டங்கள் காலி என்று விதிர் விதிர்த்துப் போகச் செய்கிறார்கள். பிரபஞ்சத்தில் பல  நட்சத்திரங்கள்   கிரகங்கள் போன்றவை ஒரே நேர்கோட்டில் வருவதால் பூமி இருட்டாகி விடும் என்றும் ஒரு வதந்தி


இந்த டிசம்பர் 21 உலக அழிவு குறித்து தனது விளக்கத்தை  அமெரிக்காவின்  நாசா விண்வெளி மையம் வெளியிட்டு  உள்ளது . வாருங்கள் அதையும் இப்போது பார்த்து  விடுவோம்

நிபுறு என்பது ஒரு கற்பனைக் கிரகம் அது இருப்பதற்கான  எந்த  ஆதாரமும் இல்லை . அப்படி இருந்திருந்தால்  வானியல்  ஆராய்ச்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளாக தொலை நோக்கி மூலம் இடை  விடாது பார்த்து  வந்திருப்பார்கள் , துருவங்கள் மாறுவது 4.00.000 வருடங்களுக்கு  ஒரு  முறை  வழக்கமாக நிகழ்கிற ஒன்று அதனால் எந்த குறிப்பிட்ட பாதிப்பும் ஏற்படாது, சூரியக் காந்தப் புயல் என்பது  சூரியப்  புள்ளிகளின் 11 வருட சுழற்சி அதுவும்  தொலைத் தொடர்பு சாதனங்களில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத படி பார்த்துக் கொள்ளப் படும் .  பூமி மேல் மோதக் கூடிய  விண்  பாறைகள்  கவனிக்கப் பட்டு வருகின்றன , தற்போது விண் பாறைகள் மோதும் அபாயம் இலலை,  ஆண்டுக்கு ஒரு  முறை பூமியும்  சூரியனும் நமது பால் வழி மண்டலத்தின் மையப் பகுதியும் ஒரே நேர்கோட்டில் வரும்  அதனால் எந்த பாதிப்பும்  இல்லை , மற்றபடி வேறு எந்த பிரபஞ்ச நிகழ்வும் , பூமி இருட்டாதலும் இல்லை  என்று அழுத்தம் திருத்தமாக நாசா விண் வெளி மையம் தெளிவு படுத்தியுள்ளது .

இதனால் வீண் பயம் இல்லாமல் இல்லாமல்  வழக்கமான படி இருந்து  வருவதே புத்தி சாலித் தனம்.  பூமியும் நாமும் பணாலா இல்லை இந்த வதந்தி பணாலா என்பதை வரும் டிசம்பர் 21 பார்க்கத்தானே  போகிறோம் . நிறையப் பேர் ஒன்றும் நிகழாமல் இருந்ததற்கு ஒரு கொண்டாட்டம் போடப் போகிறார்கள் . அதையும் பார்க்கப் போகிறோம்

நான் இந்த உலகம் முடியுமா என்பது பற்றி ஒரு ஆங்கிலக் கவிதை வெகு நாள் முன்பே எழுதியிருந்தேன் . உலகம் முடியாது அதைப் பற்றி   கவலைப் படாமல்  வழக்கமான வேலைகளில் ஈடுபட்டு வாழ்க்கையை எப்போதும் போல் அனுவிப்போம் என்கிற பொருள் படும் படி எழுதப்  பட்ட அதை பின் வரும் இணைப்பில் பார்க்கலாம்

http://scifisciencespacemohansanjeevan.blogspot.in/2012/05/this-is-2012-end-of-world.html

This is 2012: End of the world?

 
The most bandied,
most awaited, most dreaded
2012 is finally here!
Is the world on a final run
On billions of years of journey?
Will there be a 2013?
Solar flares set to extinguish Earth?
A comet will bomb it out?
A quake will give it a violent shake?
Will the world powers
nuke their wits and themselves,
Blow the hapless citizens up too?
Which way, how and when
The world will end?
Questions rankle no end!
If the world is to doom,
we are to doom
What you,me and all can do?
None of us will be here
To feel and tell the story
So worry not, fear not!
Is the Earth ok or worried?
Spinning wobbly tobbly?
Resting or reclining
On a side waiting for
For the final Nemesis?
It is business as usual
For the Earth Express,
The ever-green spacecraft-
Carrying dutifully
It’s passengers, crew
Taking care not to
Hurl them into space!
Clutching them to the bosom
As does a mother
Spinning around,
Hurtling  along
Taking a cue from
Our beloved earth
Why not make it
Business as usual for ourselves too
Eating, working, sleeping, enjoying!
Nothing to repend
If we get to see the 2013
A quarter of the year
Has gone in a jiffy
Rest may also roll
Without any iffys!
Arrival at 2013
Will be a bonus,
Gift and extension
Go on to enjoy!
Who knows
There is already a breaking news
That the doomsday stands postponed
To 2025!
Make use of the let off
Take care and move on!
Cheers!
-Mohan Sanjeevan


Comments

 1. ஆகா...இன்னும் என் கடன் பிரச்சினைகளை பேசிதான் தீர்க்கனுமோ...? ஓகோ
  நாமளாதான் நமக்கு வைச்சிகிட்டமா...?ரொம்ப நல்லது சொன்னீங்க அண்ணே.
  உஷ்...ப்பாடா ஆவியவிட இந்த செய்திங்கதான் பயபுள்ளங்கள பாடாபடுத்துச்சி. போங்கப்பு போய் வேலைய பாருங்க.....

  ReplyDelete
 2. இந்த உலக அழிவு கேள்வியோடு இருப்பவர்களுக்கெல்லாம் இந்தப் பதிவு பதில் சொல்வதாக இருக்கும் என்று நினைக்கிறேன் . உங்களுக்கும் இது போல் அமைந்தது குறித்து மகிழ்ச்சி . உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

  ReplyDelete
 3. எங்கள் குழப்பத்திற்கான விடை இப்போதுதான் கிடைத்தது.தகவலுக்கு நன்றி....

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்