60 நாட்கள் ரொட்டியைக் கெடாமல் செய்யும் நுண்ணலைக் கருவி!
சாதரணமாக நாம் அடுமனை, கடைகளில் வாங்கும் ரொட்டி முதல் நாள் வாங்கி அதிக பட்சம் அடுத்த நாள் வரை தாங்கும் . அதற்க்கு மேல் பூஞ்சை பிடித்து விடும். கெட்டுப் போய் சாப்பிட லாயக்கற்றதாகி விடும். ஈரமில்லாமல் பார்த்துக் கொண்டால் கடினமகியும் சாப்பிட முடியாது ஈரமாயிருந்தால் பூஞ்சை உலர்ந்திருந்தால் கடினமான பாறை என்பதுதான் ரொட்டியின் கதை.
நுண்ணலை அடுப்பு பூஞ்சையை அகற்றும் ஆனால் அதே சமயம் குளிர்ச்சியால் அதன் மேல் புள்ளிகள் உண்டாகி விடுகின்றன.
இதைத் தவிர்க்கும் விதமாக நுண்ணலை அறை ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. இதில் ஒரு நீள் துளையிட்ட கதிர் மூலம் ஒரே சீரான தன்மை கொண்ட மாறுபட்ட அதிர்வெண்கள் உள்ள நுண்ணலைகள் செலுத்தப் படும். இதனால் பூஞ்சை முற்றாக சாகடிக்கப் பட்டு விடும்.
இப்படி நுண்ணலை பாய்ச்சப் பட்ட ரொட்டி 60 நாட்கள் வரை கெடமால் இருக்கும் இந்த முறையைப் பயன் படுத்தி காய் கறிகள், இறைச்சி பழங்களையும் கெடாமல் பாது காக்கலாம்
ரொட்டித் தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு இனிப்பான செய்தி
ஒரு ஜோக்:
ரொட்டி 60 நாள் வரை கெடாதாமே. ஜாலி. ஒரே ரொட்டியை 60 நாள் சாப்பிடுவனே!
சரியாப் போச்சு ஒரே ரொட்டியை 60 நாள் வைக்காம நிறைய ரொட்டி வாங்கி வச்சுக்கத்தான் இது!
தகவலுக்கு நன்றி...
ReplyDeleteNanri.
ReplyDelete