சைக்கிள் ஓட்டும் ஜாலிக்காக பேப்பர் பையன் ஆன 86 வயது தாத்தா!
கொஞ்சம் வயதானாலே ஓடுவது , சைக்கிள் ஓட்டுவது போன்ற விசயங்களுக்கு ஓய்வு கொடுத்து விடுகிறார்கள் பலர். தனது 80 களில் இருக்கும் பட் ஷாபர் என்கிற தாத்தா அப்படித்தான் இருந்தார். ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பரிசாக அவருடைய குழந்தைகள் கொடுத்தார்கள் . அப்போதும் இதை ஏன் உபயோகமில்லாமல் தருகிறார்கள் என்றே நினைத்தார் பிறகு இதை ஓட்டித்தான் பார்ப்போமே என்று தான் இருக்கும் மின்னெசோட்டா பகுதியில் சுற்றி வர ஆரம்பித்தார் . ஆர்வம் பிடித்துக் கொண்டது! வாழ்நாளின் ஆனந்தமான பொழுது போக்காக உணர்ந்தார். இந்த சமயத்தில் அவருடைய பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு பேப்பர் போட ஆள் வேண்டும் என்று ஒரு செய்திப் பத்திரிக்கை அறிவிப்பு செய்ய வாய்ப்பை கப்பென்று அமுக்கிக் கொண்டார். 800 பேர் கொண்ட அவரின் குடியிருப்புப் பகுதியில் ஜாலியாக சைக்கிள் விட்டுக் கொண்டே கொஞ்சம் செல்வாக்கும் பணம் பெறும் இது அவருக்கு சுகானுபவமாக
இருக்கிறது.
ஜமாயுங்க தாத்தா!
உடலுக்குத்தான் வயகிறது மனதிர்க்கில்லை ... தகவலுக்கு நன்றி
ReplyDelete