தெரிந்துகொள்ளுங்கள் பகுதி - 3கடந்த பகுதிகளில் சில பொது அறிவு தகவல்கள் பார்த்தோம் . இந்த பகுதியில் அதன் தொடர்ச்சியை பார்க்கலாம் . இதில் உள்ள தகவல்கள் உங்களுக்கு தெரிந்தவையாக கூட இருக்கலாம் . எனக்கு தெரிந்த படித்த தகவல்களை இங்கே பதிகிறேன் .
கடந்த பகுதிகளை பார்க்க :
 

தெரிந்து கொள்ளுங்கள் - பகுதி 1

தெரிந்துகொள்ளுங்கள் பகுதி - 2

 
 • தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
 
 • காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
 
 • மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.
 
 • "லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

 • தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.
 
 • பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.
 
 • இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம்.
 
 • காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

 • குளிர் காலத்தில் குயில் கூவாது.
 
 • எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார். அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர். 
 
 • லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
 • அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
 
 • கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரைஉயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
 
 • கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
 
இதையும் படிக்கலாமே :

Comments

 1. மிக நல்ல தகவல்கள்....இன்னும் தொடருங்கள்......எதிர்பார்க்கிறோம்....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 2. பல தெரியாத தகவல்கள்.
  தொகுத்துக் கொடுத்ததற்கு நன்றி!

  ReplyDelete
 3. அருமையான முயற்சி !

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்