Home
ancient world maps
மாயன் காலண்டரின்படி உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு.
மாயன் காலண்டரின்படி உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு.
Read
மாயன்
காலண்டரின் கூற்றுப்படி உலகம் அழிந்தால், அதிலிருந்து தப்பிக்க
கலிபோர்னியாவை சேர்ந்த Ron Hubbard என்பவர் முழுக்க முழுக்க பாதுகாப்புடைய,
லெதர் சோபா, பிளாஸ்மா டிவி அடங்கிய உருண்டை வடிவ ஆடம்பர வீடு ஒன்றை கட்டி
விற்பனை செய்து வருகிறார்.
மிகப்பெரிய
குண்டுவெடிப்பையும் தாங்கக்கூடிய வகையில் செய்யப்பட்டுள்ள இந்த வீட்டின்
உள்ளே, ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் உள்ளது போன்ற ஆடம்பர வசதிகள் கொண்டது.
இந்த வீட்டை ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை வாடகைக்கோ அல்லது முழு விலை
கொடுத்து விலைக்கோ வாங்கிக்கொள்ளலாம் என Ron Hubbard அறிவிப்பு
செய்துள்ளார். மாயன் காலண்டரின் பட உலகம் அழிய நான்கே நாட்கள் இருப்பதாக
எண்ணி, உலக அழிவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்பவர் இந்த வீட்டை
பயன்படுத்திக் கொள்ளலாம் என இவருடைய அறிவிப்பு பலரைக் கவர்ந்திருப்பதால்,
இந்த வீட்டில் வாடகைக்கு வரவும், விலைக்கு வாங்கவும் பலர் முன்வருகின்றனர்.
இந்த
வீடு நியுக்ளியர் அணுகுண்டு, மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தும் வேதியியல்
குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் எனவும் இதன் விலை £46,000. முதல்
உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கடியில் பாதுகாப்பாக உள்ள இந்த
ஆடம்பர வீட்டை வாங்குவதற்கு, மாயன் காலண்டர் மேல் நம்பிக்கை வைத்துள்ள பலர்
வாங்குவதற்கு போட்டி போடுகின்றனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள்
கூறுகின்றன.
மாயன் காலண்டரின்படி உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு.
Reviewed by techworldtraining
on
December 18, 2012
Rating: 5
Tags :
ancient world maps
அட பாவிகளா , பூமியெ அழியும் போது இந்த இடமும் தானே அழியும் ??
ReplyDeleteவசதியுல்லவன் வாங்குறான் அதுவும் இல்லாமல் அவதி படுரவனும் இருக்கிறானே
ReplyDelete