புகுஷிமா அணு உலையை சுத்தம் செய்ய ரோபோ!
 

 
புகுஷிமா அணு உலையில் சுனாமி காரணமாக விபத்து ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது உள்ளே சுத்தம் செய்ய ஒரு ரோபோ இருந்திருந்தால்  மனிதர்களை அபாயப் பகுதிகளுக்கு அனுப்பாமல் அதை உள்ளே அனுப்பி சுத்தம் செய்திருக்கலாம். இப்போது அப்படி ஒரு ரோபோவை ஹிடாச்சி நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இரண்டு கைகளிலும் ஒன்றொன்றும் 150 கிலோ தூக்கும் படி வலுவாக அமைக்கப் பட்டுள்ளது. 2.3 டன் எடையுடன் 1.6 மைல்கள் வேகத்துடன் இயங்கும். 3 அடி 2 அங்குல உயரத்துடன் இண்டு இடுக்குகளிலும்  புகுந்து செல்லக் கூடியது.அதில் பொருத்தப் பட்டிருக்கும் 6  படம் பிடிக்கும் கருவிகள் தூரத்தில் இருந்தே அணு உலையை பார்வையிட்டு சுத்தம் செய்ய உதவுகின்றன.
அணு உலையை இயக்கி பராமரிக்க இது உதவியாக இருக்கும் . அணு உலை வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விதான் இன்னும் அடங்கவில்லை

Comments

  1. ஆஹா! தெரிந்துக்கொண்டேன், இன்னைக்குதான் உங்க பக்கம் வந்தேன் நிறைய நல்ல நல்ல பதிவுகள், அப்பப்பா சூப்பர்,

    பின்தொடர்கிறேன் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தமிழில் அருமையான புது அறிவியல் தகவல்களை தரும் அறிவியல் வாதி நான். நீங்கள் பின் தொடர்வது குறித்து மிக்க சந்தோசம். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள் என்னைக் கேட்டால் என்ன அருமையாக இருந்தாலும் எல்லோரும் படிக்கும் போதுதான் அது எல்லோருக்கும் பயன் படும்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்