தமிழ் இணைய மாநாடு

லகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்), ண்ணாமலைப் பல்கலைக்கழகம் மொழியியல் உயராய்வு மன்றமும் மற்றும் கணித்தமிழ்ச் சங்கமும் ணைந்து நடத்தும்


11வது உலகத் தமிழ் இணைய மாநாடு - 2021

கருத்தரங்கு - கண்காட்சி - மக்கள் கூடம் 

நாள்; 28.12.2012 

நேரம்; காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

சிதம்பரம்.

கருத்தரங்கு திறப்பு விழா

டிசம்பர் 28,2012 காலை 10.00க்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் குமாரராஜா முத்தையா அரங்கில் உள்ள கணியன் பூங்குன்றனார் அரங்கில் நடைபெறுகிறது.
பேராசிரியர் மா.இராமநாதன் (துணைவேந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) கருத்தரங்கைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

திரு.மோகன் கோபாலகிருஷ்ணன் (அடோப் நிறுவனம்,சென்னை) மையக் கருத்துரையாற்றவும்,
திரு.மணி.மு.மணிவண்ணன் (தலைவர்,உத்தமம்) தலைமையுரை ஆற்றவும்,
திரு.முனைவர்.மா.கணேசன் (இயக்குனர்,மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) வரவேற்புரை ஆற்றவும் அன்போடு இசைந்துள்ளார்கள்.

கண்காட்சி மற்றும் மக்கள் கூடம் திறப்பு விழா

தமிழ் மென்பொருள் கண்காட்சி மற்றும் மக்கள் கூடம் திறப்பு விழா டிசம்பர் 28ம் தேதி மதியம் 12.05 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் 'கணியரசு' மா.ஆண்டோபீட்டர் அரங்கத்தில் (சாஸ்திரி ஹால் அனெக்ஸ்) நடைபெறுகிறது.

திரு.பேரா.முனைவர்.ப.அர.நக்கீரன் அவர்கள். (இயக்குனர்.தமிழ் இணையப் பல்கலைக் கழகம்) கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுவார்கள்.
திரு.பேரா.மருத்துவர்.மா.இராமநாதன். (துணைவேந்தர்.அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) மக்கள் கூடத்தைத் திறந்து வைப்பார்கள்.
திரு.சொ.ஆனந்தன். (தலைவர்.கணித்தமிழ்ச் சங்கம்)
திரு.செ.ம.இளந்தமிழ் (தலைவர்.மாநாட்டின் பண்ணாட்டு ஏற்பாட்டுகுழு)
திரு.முனைவர்.மு.இளங்கோவன் (பேராசிரியர்.பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி.புதுச்சேரி)
திரு.அ.இளங்கோவன் (செயல் இயக்குனர்.உத்தமம்) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ் மென்பொருள் கண்காட்சி (நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான மென்பொருட்கள், தமிழ் எழுத்துருக்கள், மல்டிமீடியா குறுந்தகடுகள், செல்போன், டேப்லட், லேப்டாப் ஆகியவைகளில் தமிழின் பயன்பாட்டுமென்பொருட்கள், தமிழ் சொல்த்திருத்தி, தமிழ் அகராதிகள், தமிழின் முன்னனிஇணையதளங்கள், தமிழ்வழி கணினிக்கல்வி நிறுவனங்கள், முன்னனி பல்கலைக் கழகங்களின் கணினி ஆராய்ச்சிகள் போன்ற அனைத்து தொழில்நுட்ப விஷயங்களையும் நேரில் பார்த்து விளக்கம் பெறலாம். கண்காட்சியில் மிகக்குறைந்த விலையில் தமிழ் மென்பொருள்கள் விற்பனை செய்யப்படும். அனைவரும் தமிழ் மென்பொருள்கள் வாங்கி பயன்பெற அழைக்கிறோம்.

அலைகடலென வருக !
கணினித் தமிழ் அறிவு பெருக !!
தமிழில் முடியும் !
தமிழால் முடியும் !!
அனைவரும் வருக !
அனுமதி இலவசம் !!

நன்றி;மாநாடு மற்றும் கண்காட்சி ஏற்பாட்டு குழு.
அழைக்க;94440 75055

Comments

  1. மாநாடு வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துகள் !

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்