பேருந்து நிறுத்தம் வரை மகன் பாதுகாப்புக்கு மினி ஹெலிகாப்ட்டர் செய்த தந்தை!
பள்ளிக் கூடங்களுக்கு செல்லும் குழந்தைகள் பத்திரமாக பேருந்தில் ஏறி விட்டார்களா எனபது பெற்றோரின் வழக்கமான கவலை. சில பேர் பேருந்து வரை கொண்டு வந்து விட்டு செல்வார்கள் . ஒரு உயர் தொழில் நுட்பம் தெரிந்த தந்தை பறக்கும் டிரோன் ரோபோட் என்றழைப்படும் ஒரு மினி ஹெலிகாப்டரை உருவாக்கி அது பேருந்து நிறுத்தும் வரை பறந்து கண்காணிக்கும் படி செய்து விட்டார். அதனுடன் ஒரு ஸ்மார்ட் போன் ஐ இணைத்து மகனுடன் வீடியோ உரையாடல் நிகழ்த்தி அவரும் அவன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்கிறார்.
மரங்கள் குறுக்கிடும் போது மரக் கிளைகளில் சிக்கிக் கொள்வது , மின்கலன் இந்த மினி ஹெலிகாப்ட்டர் பேருந்து நிறுத்தம் சென்று திரும்பும் வரை தான் தாக்குப் பிடிக்கிறது என்பதெல்லாம் தற்போதைய குறை. உணர்விகளை இதனுடன் இணைத்து மரக் கிளைகள் வரும் போது விலகிச் செல்லும்படியும் இன்னும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும் படியும் செய்து இதற்கு தீர்வு காண உத்தேசித்துள்ளார் அவருடைய பையனுக்கு இப்படி மினி ஹெலிகாப்ட்டர் தன மேல் பறந்து வருவது ரொம்பப் பிடித்திருக்கிறதாம்.
கொடுத்து வைத்த மகன் , பாராட்டுக்குரிய பலே தந்தை!
நல்லதொரு தகவலுக்கு நன்றி...
ReplyDeleteஅருமையான கண்டுபிடிப்பு உண்மையாகவே அந்த மகன் கொடுத்துவைத்தவன்தான்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.....
எனது நன்றிகளும்
ReplyDelete