வாண்டுகளுக்கு ஆகாய விமானத்தில் ஒரு பள்ளிக் கூடம்!

 


 
அம்மாவின் செல்ல அணைப்பில் இருந்து வேண்டா வெறுப்பாக பள்ளி செல்வதற்கு முன்பாகச் செல்லுவது  மழலையர் பள்ளி. அதை  விட்டு எப்போ வீட்டுக்கு போவோம் என்று நினைக்கும் வாண்டுகளை எப்படி பள்ளிக்கு உள்ளேயே இருக்க வைப்பது?

இதை யோசித்த தலைமை  ஆசிரியர் காரி சபிட்ஜே ஒரு ஓய்வு பெற்ற விமானத்தையே பள்ளிக் கூடமாக்கி விட்டார்!  விமானிகளின் அறையில் இருந்த கருவிகளை அப்படியே விட்டு விட்டு இருக்கைகளை மற்றும் அகற்றி விட்டார். தற்போது பார்க்க புறப் படத் தயாராகும் ஒரு விமானம் போலவே பள்ளி ஆகி விட்டது. வாண்டுகளும் இதை விட்டுப் போகாமல் பிரியமாக விமானப் பள்ளிக் கூடத்தில் வலம் வருகிறார்கள்

ஒரு வாண்டு இந்த விமானத்தை கிளப்பிப் போகும் படி அதில் எரி பொருள் நிரப்பி வைக்க வேண்டும் என்று சொல்கிறான்.  எப்படியோ அவனும் மற்றவர்களும் ஆர்வத்துடன் படிக்கும் பள்ளிக் கூடமாகி விட்டது!

நன்கு படிக்கட்டும் . நாளை ஒரு விமான ஓட்டி யாகவோ விண்வெளி வீரராகவோ வர இது உத்வேகம் தரக் கூடிய ஒன்றாகவும் அமையலாம்

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்