அணு குண்டைப் போட்டுத் தாக்கும் கதிரியக்க மாத்திரை!

 

 அணு குண்டையே போட்டுத் தாக்கும் மாத்திரையா என்று அதிர வேண்டாம். அணு குண்டின் பெரும் விளைவு கதிரியக்கம் அதன் விளைவைப் போட்டுத் தாக்கும் மாத்திரை இது. அணு குண்டு வெடித்தால் கதிரியக்கம் பரவுகிறது. இதில் ஆல்பா , பீட்டா , காமா கதிர்கள் இருக்கின்றன. இதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது காமா கதிர்கள்,  இந்தப் பயங்கரமான கதிர்கள் உடம்பு செல்களை சாகடிக்கிறது. மரபணுக்களை சிதைத்து செயல் இழக்கச் செய்கிறது. இந்த கதிரியக்கத்தை எதிர் கொள்ள எக்ஸ் ராட்(EX-RAD) என்கிற மாத்திரை கண்டுபிடிக்கப்  பட்டிருக்கிறது. இதை அணுகுண்டு வெடிப்பாலோ அல்லது அணு உலை வெடிப்பாலோ ஏற்படும் கதிரியக்கத்தின் போது விழுங்கி விட்டால் போதும் இது மரபணு சிதைவடைவதைத் தடுக்கிறது , சிதைவடைந்த மரபணு தன்னை தானே சரி செய்து கொள்ள உதவுகிறது.இது மட்டுமில்லை செல்லை சாகடிக்கும் ஒரு வகையான புரதத்தை செயல் இழக்கச் செய்து செல்லின் மரணத்தை தடுத்து விடுகிறதுஇந்த மாத்திரையை கதிரியக்கம் பாய்ச்சப் பட்ட எலிகளுக்கு கொடுத்து சோதிக்கப் பட்டது. கூடவே மாத்திரைகளும் கொடுக்கப் பட்டது  சில எலிகளுக்கு  கதிரியக்கத்துக்கு பிறகு எதுவும் தரப் படவில்லை. மாத்திரை கொடுக்கப் பட்ட எலிகளில் 88 சதம் பிழைத்துக் கொண்டன. மாத்திரை கொடுக்கப் படாதவை மண்டையைப் போட்டு சிவ லோகப் பதவி அடைந்தன!

மாத்திரை வடிவில் கதிரியக்கத் தடுப்பு மருந்து தயாரிக்கப் படுவதால் அணு குண்டு, அணு உலை வெடிப்புகளின் போது இதை பொது மக்களுக்கு நிறைந்த அளவில் விநியோகிக்கலாம்

இது வெற்றி பெற்றால் கதிரியக்கம் என்கிற பெரிய அபாயத்தில் இருந்து எல்லோரும் தப்பித்துக் கொள்ளலாம்

Comments

  1. உலகை அச்சுறுத்தும் கதிரியக்கத்திர்க்கு சரியான கண்டுபிடிப்பு

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்