உதவிக் கரம் வேண்டுகிறோம். . .


எங்கள் கல்லூரியில் ஓர் அருமையான திட்டம் ஒன்று உண்டு. என்ன தெரியுமா? அனைத்து 2-ம் ஆண்டு மாணவர்களும் ஒரு கிராமத்தில் சென்று அவர்களின் நிலையை அறிந்து அவர்கட்டு, எங்களால் ஆன ஒரு உதவியை செய்ய வேண்டும்.

நான் பயில்வது தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி, திருநெல்வேலி.

அப்படி நானும் ஒரு கிராமத்திற்கு சென்று கொண்டு இருக்கிறேன். அந்த ஊரின் பெயர் சிங் நகர். பெயர் சற்றே வித்தியாசமாய் இருக்கிறது அல்லவா,திருச்செந்தூர் நெடுஞ சாலையில் புவியியல் இயற்பியல் ஆராய்ச்சி மையம் எதிரில் இருக்கிறது. நீங்களும் வாருங்களேன் செல்வோம். 

கிராமம் என்றதும் உங்கள் நினைவில் அழகிய பசுஞ்சோலை, பச்சைப் பசேல் வயல்கள், சாமரம் வீசும் தென்னை மரங்கள் என்று உங்களுக்கு தோன்றினால் அதனை சற்றே மறந்து விடுங்கள். 

குடிசைகளும், ஓட்டு வீடுமாக  நான்கு வரிசையாக, வரிசைக்கு ஏறத்தாழ 6 வீடுகள் இருக்கிறது. அந்த ஊர் சாலையில் நடக்கையில் "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என பாடல் தாம் நினைவிற்கு வருகின்றது. 

திறந்த வெளிப் பல்கலைக் கழகங்கள் திறக்கும் அரசாங்கம், இங்கே திறந்த வெளிப் முள் கழகம் இருப்பதை ஏனோ கவனிக்க வில்லை,(கழிப்பறை பல வீடுகளில் இல்லை,முட்பகுதிகள் தாம் இவர்கட்கு கழிப்பறை என்பதைத் தான் இப்படிச் சொன்னேன்).  

இடமிருந்து வலமாக,தெரு முடிகையில், கடைசியில், நரகம் செல்லும் பாதையோ என்று என்னும் வகையில் ஒரு பெருங் குழி ஒன்று இருக்கிறது. குட்டி கல் குவாரி போலே இருக்கிறது. அசுத்த நீர் நிரம்பி வழிகிறது கொசுக் களின் தாயகமாய்...

பெரும்பாலும் இங்கு இருக்கும் குழந்தைகள் 10-ஆம் வகுப்பினைத் தாண்டி படிப்பதில்லை, கிடைக்கும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். இங்கு உள்ளவர்கள் தினசரி கூலி வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர்.

 பெயர் காரணம் என்னவென்று வினவிய பொழுது சுமார் 30 வருடங்களுக்கு முன்னால்   சிங் சென்று பெயர் தாங்கிய ஒரு பஞ்சாபி ஒருவர் மாவட்ட ஆட்சியாளர் ஆக இருந்தாராம். 

இந்த கிராமத்தில் இப்பொழுது வசிப்பவர்கள் வேறு ஒரு இடத்தில இருந்தார்களாம் அந்த இடத்திலே ஒரு குளம் தோண்ட போவதாக இருந்ததால் அம மக்கள் நாங்கள் எங்கே செல்வோம் குடியிருக்க என்ற கேள்வி எழுந்த பொழுது அந்த மாவட்ட ஆட்சியாளர் நீங்கள் இந்த இடத்தில வீடு அமைத்து இருந்து கொள்ளுங்கள் என்று சொன்ன இடம் தான் இந்த கிராமம். அவர்களும் குடிசைகள் அமைத்து வசித்தார்கள். 

குழந்தை என்றாலும், ஓர் இடம் என்றாலும்  பெயர் இட வேண்டுமே. இந்த சிந்தனை அவர்களிடம் எழுந்த பொழுது அவர்கட்கு அந்த அதிகாரியின் பெயர் தெரியவில்லைபோலும், பஞ்சாபிக்காரர் என்று மட்டுமே தெரிந்ததனால் "சிங் நகர்" என்று பெயர் இட்டனர். அந்த பெயர் தான் இன்னமும் இருக்கிறது.

எங்களை யார் என்றே அவர்கட்கு தெரியாது இருந்தாலும் நாங்கள் யார் என்று அறிமுகப் படுத்திய பொழுது "வாங்க தம்பிகளா, உக்காருங்க, காபி சாப்டுறீங்களா?"என்று பாசத்துடன் பேசினர், கிராமத்து வாசம் இதுதான் என்று அறியாத மாணவர்கட்கு ஒரு அருமையான வாய்ப்பு.

எங்கள் அண்ணன்மார்கள் சென்ற வருடம் அங்கே சென்று இருந்தார்கள் என்பதனால் எங்களை எளிதில் அறிந்து கொண்டார்கள். "தம்பி போன வருஷம் வந்த பிள்ளைங்க,  டார்ச் லைட், மரக்கன்னுலாம் கொடுத்தாங்க, சின்னப் பிள்ளைங்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தி பரிசுலாம் கொடுத்தாங்க" என்று பூரித்த அவர்கள் உள்ளம் பாரட்ட வேண்டியது. 

காரணம் என்னவென்றால் நான் வசிப்பது நகர்ப் புறத்தில், இங்கே வந்து நீங்கள் எந்த வீட்டிலும் தகவல் கேட்பதும் , 4 வயசு குழந்தை வலக் கையை கொண்டு இடக் காதை தொட முயற்சிப்பதும் ஒன்று தான்.எங்கள் திட்டம்:

1. அந்த அகண்ட பாதளக் குழியைச் சுற்றி வேலி அமைப்பது.

2. ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு படிப்பிற்க்கு வேண்டிய உபகரணம் வழங்குவது.

3. கொசு வலையினை ஒவ்வொரு வீட்டிற்க்கும் வழங்குவது.

4. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது.

5. அரசாங்க கவனத்திற்கு இந்த கிராமத்தின் நிலையை, கவன ஈர்ப்பின் மூலம் ஈர்ப்பது. 

6. ஊடகங்கள் மூலம் இந் இந்நிலையை வெளிக் கொணர்தல்.

7. அனைவர்க்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தி மகிழ்விப்பது.

8. மாறுபட்ட வேலை வாய்ப்பினை,பற்றிய தெளிவினை உண்டாக்குதல்.

9. ஒரு நாள் அன்னமிடுதல். 

இது போன்ற உதவிகள் அனைத்தும்  மாணர்வர்களாகிய எங்களால் நல்ல உள்ளங்களிடம் இருந்து நன்கொடை பெறப் பட்டு செய்ய இருக்கின்றோம்.

உங்கள் உதவிக் கரம் வேண்டுகிறோம். . .  

உங்களால் இயன்ற பொருள் உதவியோ,அல்ல பண உதவியோ அளித்து உதவுங்கள்.  

நான் தொழிற் களம் பதிவர்கள் பங்கும் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன் எவரும் எவ்வளவு சிறிய பொருளாக , சிறு பணமாகவோ கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் ..

                        எ(உ)ங்களின் வியர்வைத்துளி 
                            அவர்கட்கு  மழைத்துளி.


தாய்த் தமிழ் பள்ளிக்கும் நம்மால் இயன்றதைச்  செய்வோம். தொழிற் களம் விழாவிற்கு வருகை தருகிறேன் நீங்கள் விரும்பினால் என்னிடம் நேரிலும் வழங்கலாம்.


என்னை தொடர்பு கொள்ள 
எனது மின் அஞ்சல் முகவரி :
chezhiyan7@gmail.com

எனது அலைபேசி எண் :
7708793396


மேலும் இந்த திட்டம் பற்றி அறிய இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.
http://stxavierstn.edu.in/stand.php


(விரைவில் அந்த கிராமம் தொடர்பான படங்களை பதிவேற்றுகிறேன்)

என்றும் அன்புடன்
செழியன் 


Comments

  1. தகவல்கள் பலரையும் சென்றடைய தொழிற்களம் ஏற்பாடு செய்யும் செழியா...

    ReplyDelete
  2. நன்றி தொழிற் களமே

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்