முதன் முதல் விண்வெளிக்கு சென்ற சிலந்தி சாவு!

 

 'Spidernaut' Nefertiti


சர்வ தேச விண்வெளி நிலையத்துக்கு பூஜ்ய புவி ஈர்ப்பு விசையில் உணவு சாப்பிடும் பழக்கத்தில் மாறுதல்கள் என்ன என்பதை அறிவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட படத்தில் உள்ள சிலந்தி 100 நாள் விண்வெளி வாசத்திற்குப் பிறகு பூமி திரும்பியது. ஸ்மித்சோனியன் கல்வி நிறுவனத்தின் இயற்கை வரலாற்றுக்கான அருங்காட்சியகத்தில் நவம்பர் 29 முதல் காட்சிக்கு வைக்கப் பட்டு இருந்தது. சிலந்தி விண்வெளி வீரர் நெபர்டிடி  என்று செல்லமாக அழைக்கப் பட்ட இந்த சிலந்தி இயற்கை காரணங்களால் மரணம் அடைந்து விட்டது.

விண்வெளிக்கு சென்ற சிலந்தி என்ற சிறப்புப் பெற்ற அந்த சிலந்தியின் மரணத்துக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்!

Comments

  1. சிலந்திக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
    சிலந்தி கூட ஒரு சாதனையை நிகழ்த்தி விட்டுதான் இறந்திருக்கிறது.மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சாதிக்கவேண்டும்

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்