நூறாண்டுகளுக்கு மேலாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்கு!

 
 
 
கேட்கவும் படிக்கவும் ஆச்சர்யம் தரும் செய்தி. 1901 முதல் 1905 ஆண்டுகளுக்குள் கையால் ஊதப்பட்ட கண்ணாடி மற்றும் கார்பன் இழையால் உருவாக்கப்  பட்ட இந்த மின் விளக்கு இன்னமும் எந்த கோளாறும் இன்றி எரிந்து கொண்டிருக்கிறது. 
 
இதன் மிகக் கனமான இழையும் அதன் குறைந்த 4 வாட் அளவே உள்ள மின் சக்தியும் இவ்வளவு ஆண்டுகள் இது தாக்குப் பிடித்து எரியக் காரணம் என்று சொல்கிறார்கள் 

இது லிவர்மோர்  தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வண்டியின் ஏணிப் படிகளுக்கு 15 அடி மேல் தொங்க விடப் பட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.இதை தயாரித்த இது லிவர்மோர்  தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வண்டியின் ஏணிப் படிகளுக்கு 15 அடி மேல் தொங்க விடப் பட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.இதை தயாரித்த ஷெல்பி மின்சார நிறுவனம் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பனிக்கு 1914 இல் கை மாறி விட்டது. ஷெல்பி நிறுவனம் இப்போது இல்லை. அதே போல் இதன் தயாரிப்பில் ஈடு பட்டிருந்த தொழிலாளிகள் இறந்து விட்டனர், நிறைய போர்கள் வந்து முடிந்து விட்டன. ஆனால் இந்த விளக்கு மட்டும் கடந்த காலத்திற்கு சாட்சியமாக இன்னும் எரிகிறது.

விளக்கு தொடர்ந்து எரியட்டும். புதிய சாதனைகள் படைக்கட்டும்

Comments

  1. விளக்கு தொடர்ந்து எரியட்டும். புதிய சாதனைகள் படைக்கட்டும்

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்