ரத்த தானம் செய்வோம்

  நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை , உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்வதோடு, உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ரத்தம் உள்ளது. ரத்தம் இன்னொரு மனிதனுக்கு வாழ்வளிக்கும் அதிசய பொக்கிஷம்.

       அறிவியலில் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும்,நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருந்தாலும்,ரத்தம் என்ற அதிசய திரவத்தை,செயற்கையாக இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை
.
        நம் உடலில் உள்ள ரத்தம், காயபட்டவர்களுக்கும், ரத்தம் தேவைபடுவோர்க்கும் வழங்க கூடிய ஒரு பரிசுப்பொருள்.விபத்துகளின் போது ரத்த இழப்பை ஈடுசெய்ய தற்றவர்களின் ரத்தம் தேவைபடுகின்றது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போதும் கூடுதலாக ரத்தம் தேவைபடுகிறது. நாம் ஒவ்வொரு முறையும் தானமாக்க கொடுக்கும் ஒரு யுனிட் ரத்தமும் பல உயிர்களை வாழ வைக்கும்.


       ஒரு நபர் ரத்ததானம் செய்தால், அவருக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. புதிய ரத்த அணுக்கள் உருவாக ஊக்கப்படுத்துகிறது.ரத்த தானம் செய்வதால்,ஒருவர் உடலில் 500 கலோரிகள் எரிக்கப் படுகிறது.
ரத்த தானம் செய்யும் முன் உடல் எடை, ரத்த அழுத்தம், ரத்த வகை, ஹிமோகிளோபின் கணக்கிடபடுகிறது. மேலும்,மஞ்சள் காமாலை,பால்வினை, மலேரியா, எச்.ஐ.வி, போன்ற நோய்கள் இருந்தால்,ரத்த தானம் செய்வதர்க்கு தடை விதித்துள்ளது. ஆதலால், நாம் எந்த ஒரு அச்சமும் இன்றி ரத்தத்தை தனமாகப் பெறலாம். ஆதலால்,ரத்ததானம் செய்வோம், நாமும் வாழ்வோம், பிறரையும் வாழ வைப்போம்.

                    ‘ரத்த தானம் செய்வோம் !’
                    ‘நலமுடன் வாழ்வோம் !’

- மகேஸ்வரி
( அறிமுகம் )


Comments

 1. வாங்க மகேஸ்வரி முதல் பதிவையே அனைவர் மனதிலும் பதிய செய்துவிட்டீர்கள். வளமுடன் வாழ்க.

  ReplyDelete
 2. ‘ரத்த தானம் செய்வோம் !’
  ‘நலமுடன் வாழ்வோம் !’

  நல்லதொரு விழிப்புணர்வு பதிவு !

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. அறிமுகமே அமர்க்களம். நல்ல பதிவு. தொடருங்கள்

  ReplyDelete
 4. உங்கள் ஊக்கத்திற்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்