கண் புரை அறுவை சிகிச்சை - ஆப்ரிக்க யானையின் கதை!
 


கண் புரை(cataract)  என்பது கண்ணில் ஒரு படலத்தை ஏற்படுத்தி பார்வையை தெளிவற்றதாகச் செய்யும். இந்த புரையை அகற்றினால் பார்வை தெளிவடைந்து விடும். மனிதர்களுக்கு வரும் கண் புரையைப் போலவே யானைக்கும் வந்து அதை மருத்துவர்கள் அகற்றிய கதை இது. படிப்போம் வாருங்கள்.

இந்த யானைக்கு அறுவை சிகிச்சை செய்த  கால்நடை மருத்துவர் ஜிம்  கார்ட்டர்  அதனுடைய வெண் விழிப் படலத்தில் இரு கீறல்கள் போட்டு  கண் புரையை அகற்ற ஒரு ஒலியை மிஞ்சும் அதிர்வுகள்  செய்யும் ஒரு ஊசி கொண்ட எந்திரத்தை உபயோகித்தார். அதிர்வுகள் மூலம் கண் புரையை அசைத்து ஊசி மூலம் உறிஞ்சி எடுத்து கண் புரையை அகற்றினார். ஆனால் வழக்கமான எந்திரத்துக்கு பதிலாக பெரிய அளவுடைய யந்திரமும் ஊசியும் இதற்கென்றே தயாரிக்கப் பட்டது. இதில் உள்ள ஊசி வழக்கமான ஊசியைப் போல் ஆறு மடங்கு பெரியது. அளவில் பெரிய யானைக்கு எல்லாம் பெரிதாக இருந்தால் தானே முடியும்?

இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சை மற்றும் சில தையல்களுக்கும் பின் யானை கண் புரை அபாயத்தில் இருந்து காப்பற்றப் பட்டது.

இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சை மற்றும் சில தையல்களுக்கும் பின் யானை கண் புரை அபாயத்தில் இருந்து காப்பற்றப் பட்டது.  இப்போது யானையும் அதன் கண்ணும் சௌக்கியம்!

Comments

  1. அனைத்து உயிர்களிடத்திலும் சமநோக்கு...இவர் பணிவளர வாழ்த்துவோம்.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது சரி. வாழ்த்துவோம் அவரை.

    ReplyDelete
  3. உங்களது சேவைக்கு எங்களது வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்