தீங்கில்லாத சாப்பாட்டு உப்புக்கள்


 Health Benefits of Rock Salt
 

நாம் சாதரணமாக உண்ணும் உப்பும் கடல் நீரை உப்பளங்களில் விட்டு ஆவியாக்கி பெறும்  உப்புதான்.  தூத்துக்குடி போன்ற இடங்களில் இத்தகைய உப்பளங்கள் உண்டு. அதில் இருந்துதான் நாம் உப்பு பெறுகிறோம். சுத்தப் படுத்தி மேஜை உப்பு என்றும் கிடைக்கிறது. இது சோடியம்  க்ளோரைடு  ஆகும். சோடியம் உப்பும் நமது உடலுக்கு சிறிதளவில் தேவை தான். ஆனால் நாம் தேவைக்கு அதிகமாகவே ருசிக்காக சேர்த்துக் கொள்கிறோம். சோடியம் அதிகப் படி சேர்த்தால்  ரத்த அழுத்தம் மாரடைப்புக்கு வழி வகுக்கும்.

இங்கேதான் தீங்கில்லாத உப்பு ஏதானும் உண்டா என்று யோசிக்க வேண்டி உள்ளது.  ருசிக்காக சில மாற்று உப்புக்களும் உள்ளன. இந்துப்பு என்றழைக்கப் படும் பாறை உப்பை உணவில் ருசிக்காகப் பயன் படுத்தலாம். இதுவும் சோடியம் க்ளோரைடு உப்புதான்.  ஆனால் இதில் வேறு கால்சியம் , பொட்டாசியம் போன்ற உப்புக்களும் கலந்து இருப்பதால் சோடியம் உப்பின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்து விடும். 

இது போக எழுமிச்சை உப்பு என்பதும் உண்டு. உப்பும் எழுமிச்சப் பலத் தோலும் கலந்து அரைத்து தயாரிக்கப் படுகிறது. இது கொஞ்சம் புளிப்பாக இருக்கும். அதனால் சுவைக்கு இதை உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். இதை பயன் படுத்துவதால் சோடியம் உப்பை பயன் படுத்துவது குறையும். வரக் கூடிய தீங்கையும் தவிர்த்துக் கொள்ளலாம்


இவை இரண்டுமே சந்தையில் கிடைக்கின்றன


உப்பில்லாப் பண்டம் குப்பையிலே. அதற்காக உப்பை  ஏகமா சேர்த்து உடம்பை சீக்கிரம் குப்பைக்கு போக விட்டுராதீங்க. உப்பைக் குறைச்சு பிழைச்சுக்குங்க. எனது நல வாழ்த்துக்கள்


Comments