குண்டு துளைக்காத பிரயாணப் பை!


 Disney princess backpack includes bulletproof nanotube armor

 
இன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர் வரை , பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் , அலுவலகம் செல்லுவோர் வரை முதுகில் போட்டுக் கொண்டு செல்லும் பிரயாணப் பை பிரபலம்  இது இப்போது பின் புறம் இருந்து பாயும் துப்பாக்கி குண்டை தடுக்கும் படி ஒரு பாதுகாப்புக் கவசம்   பொருத்தப் பட்டுக்   கிடைக்கிறது.  காற்றை விட மெலிதான ஆனால் வைரம் போல் உறுதியான , ரப்பரைப் போல வளையும் கார்பன் நானோ குழாய் என்ற அதி நவீன பொருளால் ஆக்கப் பட்டிருக்கிறது .  யாராவது துப்பாக்கியால் சுடும் போது பின் புறம் உள்ள பாது காப்புக் கவசத்தை முன் புறம் கொண்டு வந்து குண்டு பாய்வதைத் தடுத்துக் கொள்ளலாம். இந்த கவசத்தை அப்படியே வெளியில் இழுத்து நன்றாக விரித்து ஒரு போர்வை போல விரித்து மூடி கொண்டு நாலா புறமும் இருந்தும் குண்டுகள் பாய்வதைத் தடுத்துக் கொள்ளலாம்.

இதன் விலை 300 டாலர்.

Comments