நமக்குப் பக்கத்தில் ஓடும் ஆற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம்!

 Personal water turbine delivers free power from the nearest river


நாம் ஆறு ஓடும் தோட்டங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் நீர் ஏற்றிகள்(பம்ப் செட் ) வைத்து தங்கள் தோட்டங்களுக்கு தண்ணீர் இறைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். அந்த ஆற்றுத் தண்ணீரைப் பயன் படுத்தி மின்சாரமும் நமது உபயோகத்திற்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.  இபாசி கப்பா என்கிற  மின் ஆக்கி(generator)  இதைச் செய்து தருகிறது. இதில் தண்ணீரை விரைவு படுத்தித் தரும் ஒரு நீர் சிதற்றி(diffuser) அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வேகமான தண்ணீர் டர்பைனுக்கு வந்து  சுழலச் செய்து மின்சாரம் கிடைக்கிறது. இதை வைத்து பெரிய அளவில் நம் தேவைகள் முழுவதும் பூர்த்தி செய்ய முடியா விட்டாலும் சில விளக்குகள் , கணினிகள் ,இணையத் தொடர்பு போன்ற வற்றை மின்சாரம் இல்லாத இடை வெளியில் பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த மின் ஆக்கியைப் பயன் படுத்த இதை தண்ணீரில் மூழ்கச் செய்து விட வேண்டும். தண்ணீரில் மூழ்கியிருந்த படியே இயங்கும்

இந்த மின் ஆக்கி இயங்கும் போது காதை அடைக்கும் இரைச்சல் இல்லை வாடை தரும் வெளியேற்றங்கள் இல்லை. சுகமாய் இலகுவாய் இயங்கும். விலை தான் இப்போது 12,000 டாலர் . கொஞ்சம் அதிர்வு தருவது இது தான். இந்த மின் ஆக்கியின் பயன் பாடு அதிகரித்து நிறையப் பேர் பயன் படுத்தும் போது விலை குறையலாம். 

Comments

  1. நல்ல தகவல் ,நமக்கு தண்ணீரே கிடைப்பதில்லை எப்படி இதை நம்மால் பயன்படுத்த முடியும்

    ReplyDelete
  2. சில இடங்களில் இன்னும் தண்ணீர் ஓடுகிறது. கிடைக்கிற இடங்களில் மட்டும் தான் இதைப் பயன் படுத்த முடியும். பின்னூட்டத்துக்கு நன்றி

    ReplyDelete
  3. If we put this infront of the water outflow of the pumbset ,it will rotate the and fan we can get power from this when the pumbset motor is at work .

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்