விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்க வாய்ப்பு !

 


 
நான் அறிவியலை  மாணவர்களிடமும் மக்களிடமும்  கொண்டு சேர்க்கிற அறிவியல் தெரிவிப்பாளர் என்ற முறையிலும் அறிவியல் வாதி என்கிற முறையிலும் எனக்கு சில செய்திகள் நேரடியாகக் கிடைக்கின்றன .நாசா விண்வெளி மையத் தொடர்பாளர்களிடம் இருந்து எனக்குக் கிடைத்த செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கே-12 அதாவது நமது பிளஸ் டூ மாணவர்கள் சர்வேதேச விண்வெளி வீரரிடம் கேள்விகள் கேட்டுப் பதில் பெறலாம். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ் ஷட்டில் விண்கலத்தில் சென்று வந்த அமெரிக்க விமானப் படை தளபதி ஜிம் பட்டன் மாணவர்களின் சிறந்த கேள்விகளைத் தெரிவு செய்து வீடியோ பதில் தர இருக்கிறார். இவர் இப்போது அமெரிக்க விமானப் படை ஆய்யு மைத்தில் இருக்கிறார். எனவே மாணவர்கள் கேள்விகளை  மின்னஞ்சலில் STEM@usafa.edu  அல்லது msauroraphd@gmail.com ஆகிய மின்னஞ்சல்களுக்கு விண்வெளி வீரர் ஜிம் டட்டனுக்கான கேள்வி(question for Astronaut Jim Dutton )என்று பொருளில் குறிப்பிட்டு அனுப்பவும். கேள்விகளை ஆங்கிலத்தில் ஜனவரி 18 க்குள் அனுப்ப வேண்டும் . விடைகள் பிப்ரவரியில்  தெரிவிக்கப் படும்  விண்வெளி வீரரின் கவனத்தை இழுக்கும் அருமையான கேள்விகளைக் கேளுங்கள். உங்கள் கேள்வி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Comments

  1. மாணவர்களை அறிவியல் பாடத்தில் ஊக்கமளிக்கும் உங்களின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பாராட்டுக்கு நன்றி. மாணவர்கள் பயன் பெற்றால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்