நிலத்திலும் தண்ணீரிலும் செல்லும் ரோபோ பாம்பு!


 
இயற்கையை அடியொற்றி பல பல விஷயங்கள் செய்யப் படுகின்றன. அதில் ஒன்று தான் இந்த நிலம் மற்றும் தண்ணீரில் செல்லும் பாம்பு. பல தனித் தனி அலகுகளால் கோர்க்கப் பட்டு துடுப்பு போன்ற அமைப்புகளால் தண்ணீரில் நீந்தி செல்லும் . தேவை பட்டால் தரைக்கும் வந்து நகர்ந்து செல்லும். நிஜப் பாம்பை விட சிறியதாக இருந்தாலும் அதே அளவு பிடி பிடிக்கக் கூடியது.

இதனால் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் இதை பயன் படுத்தலாம். இதன் ஒவ்வொரு அலகிலும்  ஒரு மத்திய செயல் படுத்தும் பகுதி , ஒரு மின்கலன், மோட்டார் கொண்டது . ஒன்றிரண்டு அலகுகள் இயங்கா விட்டாலும் மற்ற அலகுகள் இயங்கி இந்த இயந்திரப் பாம்பு நகர வைக்கும். ஒவ்வொரு அலகும் மற்றொரு அலகுடன்  தொடர்பு கொள்ளக் கூடியது. தலை பகுதி அந்தந்த அலகு எத்தனையாவது மொத்தம் எத்தனை அலகு  என்று கணக்கில் வைத்திருக்கும்.

ஆடு பாம்பே! தேடு பாம்பே! ஆபத்தில் சிக்கியவர்களை மீட்டு வா பாம்பே!

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்