இணையத்தில் வாழ்கிறேன், இணையத்தில் ஆள்கிறேன்!

 
 
இன்று இணையம் நமது எல்லோருடைய வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  முக நூல் போன்ற சமூக வலைத் தளங்கள் நண்பர்களை பெறுவதற்கும் . பயனுள்ள தகவல்களை பகிர்வதற்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. இணையம் எல்லோர் மீதும் இப்போது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த தாக்கம் என் மீதும் உண்டு. அதே சமயம் எனது பகிர்வுகளால் நானும் பெரும் தாக்கத்தை முக நூல் போன்ற வலைத் தளங்களில் ஏற்படுத்தி உள்ளேன் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.

எனது பகிர்வுகளால் மாணவ நண்பர்களைப் பெற்று அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக உள்ளேன். நள்ளிரவு கடந்த நேரத்திலும் அவர்கள் அறிவியியல் மற்றும் கல்வி சந்தேகங்களை கேட்டுப் பெற்று என்னை வாழ்த்தி விட்டு போவது மாணவர்களுக்கு என்னாலும் பணியாற்ற முடிகிறது என்ற சந்தோசத்தை தருகிறது. எனது முக நூல் மற்றும் இணைய நண்பர்களுக்காக இந்த கவிதையை தமிழிலிலும் ஆங்கிலத்திலும் எழுதி இருந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கொஞ்சம் ஓவராக இல்லை? என்று நினைக்கலாம். என்னுடைய அனுபவம் இதுதான்.  

இணையத்தில் வாழ்கிறேன். இணையத்தில் ஆள்கிறேன்.
அறிவியல் , இலக்கிய , சமூக விரும்பிகளின்
இதயத்தில் இருக்கிறேன். பயணத்தைத் தொடர்கிறேன்.
அவர்கள் இதயமே எனது இமயம்!
எல்லாப் புகழும் இறைவனுக்கே போல்
என் எல்லா நேரமும் அவர்களுக்கே!
அவர்கள் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி
அவர்கள் சிரிப்பு என் சிரிப்பு
என்றும் மகிழட்டும் என்றும் சிரிக்கட்டும்
வளரட்டும் மலரட்டும் அவர்கள் வாழ்வு!

I live on the net, I rule on the net, 
I reside in the Hearts of Science and poem lovers
and proceed on my journey
their heart is my Everest
Like all the fame is to God
My whole time is for them
their happiness is my happiness
their laughter is my laughter
let them be happy and laughing all the time
Let their life progress and blossom all the time!

Comments