பட்டு நூல் விடும் கில்லாடி ஹாக் மீன்!

 Hagfishஇயற்கையாகவே நூல் விடும்(நிஜ நூல் தான்!) பட்டுப் புழு,  சிலந்தி போல ஹாக் மீன் என்கிற மீனும் நூல் விடுகிறது. இந்த மீன் பாருங்கள் தான் அச்சுறுத்தப் படும் போது ஒரு விதமான வழ வழப்பான  திரவத்தை சுரக்கிறது. இந்த  திரவம் அதைச் சுற்றி ஒரு பாது காப்புக் கவசம்  போல செயல் படுகிறது.தாக்கி கடிக்க வரும் திமிங்கலம் கூட இதனால் வேறு திசையில் போய் விடும் என்பதால் இது நூல் விடும் ஒரு கில்லாடி மீன்தான்.


 ஆயிரக்கணக்கான நூல் இழைகள் கொண்ட இதன் திரவத்தை வைத்து புரதம் கொண்ட  இழைகள் தயாரிக்கப் படுகிறது. இப்படி  தயாரிக்கப் படும் இழைகளை வைத்து தாள்கள் தயாரிக்கலாம். ரேயான் , நைலான் மற்றும் பாலியெஸ்டர் ஆகிய செயற்கை பாலிமர் இழைகளுக்கு மாற்றாக பயன் படுத்தலாம்.  இவற்றில் பெட்ரோல் பயன் படுத்தப் படுகிறது.  இதனால் இந்த இழை  ஒரு பசுமை மாற்று ஆகிறது.

மீன் அண்ணாச்சி  எங்கே போறீங்க?

என்னை அந்த பெரிய சுறா மீன் கடிக்க வருது. இதோ என்னோட திரவத்தைப் பாய்ச்சி கடிக்காம பண்றேன்!

Comments