உலகத்திலேயே வேகமான கார்!

 


 2010 இல் புகாட்டி என்ற கார் 268 மைல்களைத் தொட்டது. இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. 

இந்த மாதிரி கார் 30 தான் தயாரிக்கப் பட்டு விற்கப் பட்டது. ஒன்றின் விலை சும்மா 2.4 மில்லியன் டாலர்கள் மட்டுமே.

ஆனால் 1997 இலேயே ஆண்டி கிரீன் என்கிற விமானப் படை விமானி  நெவாடா கருப்பு பாறை பாலைவனத்தில்(black rock desert) டர்பைன் வாயு விசை பொறி(turbine gas engine) கொண்ட காரில் 763 மைல்கள் தொட்டதே அதிக பட்ச வேக சாதனையாக இருந்து வருகிறது.  இது தயாரிப்பில் இல்லாத கார் என்பதால் இது உலகின் வேகமான கார் என்று பெயர் பெறவில்லை

இந்த காரின் வேகத்தையும் மிஞ்சும் 1000 மைல் பறக்கும் ரத்த வேட்டை நாய்(blood hound)  என்கிற கார் தயாரிப்பில் உள்ளது. ராக்கெட் விசைப் பொறி பொருத்தப் பட்டு ஓடும் இதில் டையர்களுக்குப் பதில் 200 பவுண்ட் அலுமினிய வட்டங்கள் இருக்கும். அப்போதுதான் 50000 மடங்கு புவி ஈர்ப்பு விசையை அளவுக்கு சமாளித்து இலகுவாக வழுக்கிச் செல்வது போல் ஓடும். இதன் முன் பாகம் கார் போலவும் பின் பாகம் விமானம் போலவும் இருக்கும் . இதன் தொழில் நுட்பம் கார் மற்றும் விமானத் தொழில் நுட்பத்தின் கலவை.

வரட்டும் பார்ப்போம் இதன் சாதனையை

.
ஜோக் :
1000 மைல் வேகக் கார்  வருதாமே?

இதென்ன பிரமாதம் என்னோட கற்பனைக் குதிரை ஈரேழு லோகமும் நொடியில் போயிட்டு வருமே!

Comments